இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்று ரயினா நம்பிக்கை

387
Suresh Raina

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தக் கடுமையாக போராடுவேன் என்று இடதுகைத் துடுப்பாட்ட வீரரும் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளருமான சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

இந்திய அணியில் 11 வருடங்களாக இடம்பிடித்து வருபவர் சுரேஷ் ரெய்னா. இவருக்கு அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால், டி20 தொடரில் இடம் கிடைத்தது.

இந்தியா வருகிறது அவுஸ்திரேலியா

ஒரு காலத்தில் மூன்று வகைக் கிரிக்கட்டிலும் ரெய்னாவிற்கு இடம் கிடைத்தது. அதன்பின் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடாததால் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், ஒருநாள் அணியில் இடம்பிடித்திருந்தார்.

தற்போது இந்திய அணி சிம்பாப்வேவிற்கு  சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றம் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கிறது. இதில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ரெய்னாவின் ஓய்வு அனைவரின் புருவத்தையும் உயரச் செய்துள்ளது. அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதா? இல்லை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாரா? என்ற கேள்விகள் கூட எழும்பின.

இதுகுறித்து ரெய்னா கூறுகையில் ‘‘சிம்பாப்வே தொடரில் எனக்கு ஓய்வு கொடுத்திருக்கிறார்களா? அல்லது  நீக்கியுள்ளனரா? என்பதில் நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை நினைத்துக்கொள்ளலாம். ஆனால் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் அணியில் இடம்பிடிப்பதற்குப் போராடுவேன் என்றார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்