இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான சுரங்க லக்மால் அடுத்து நடைபெறவுள்ள இந்திய அணிக்கு எதிரான தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இலங்கை அணியின் இந்திய சுற்றுப்பயணத்தின் போதே, இவர் ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
>> பொதுநலவாய மகளிர் கிரிக்கெட்: ‘பி’ குழுவில் இலங்கை
தன்னுடைய ஓய்வு அறிவிப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுரங்க லக்மால், “என் மீது நம்பிக்கை வைத்து, இலங்கை தாய்நாட்டை பெருமைப்படுத்துவதற்கு வாய்ப்பை கொடுத்த இலங்கை கிரிக்கெட் சபைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் சரியாக வழிநடத்திய பெருமை இலங்கை கிரிக்கெட்டை சாரும்.
அதேநேரம் என்னுடைய சக வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், அணி முகாமையாளர்கள், உதவி ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எனது மரியாதையை செலுத்துகிறேன்” என்றார்.
சுரங்க லக்மால் இலங்கை அணிக்காக அனைத்து வகை போட்டிகளிலும் விளயைாடிள்ளதுடன், மிகச்சிறந்த பிரகாசிப்புகளை வழங்கியுள்ளார்.
இதேவேளை சுரங்க லக்மாலின் ஓய்வு குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா,
“சுரங்க லக்மாலின் எதிர்கால திட்டங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், அவர் இந்திய அணிக்கு எதிரான தொடரில் பிரகாசிப்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். சுரங்க லக்மால் இலங்கை கிரிக்கெட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். மறக்கமுடியாத தருணங்களை வழங்கியுள்ளார். எனவே, அவருடைய சேவைகள் எப்போதும் மறக்கமுடியாத ஒன்றாக இருக்கும்” என்றார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<