இப்போட்டியில் மிலிந்த சிறிவர்தன தலைமையிலான கொழும்பு கொமாண்டோஸ் அணியும் தினேஷ் சந்திமல் தலைமையிலான காலி கார்டியன்ஸ் அணியும் மோதின.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு கொமாண்டோஸ் அணி முதலில் களத்தடுக்க தீர்மானித்தது.
போட்டியின் சுருக்கம்
காலி கார்டியன்ஸ் 143/7 (20)
சந்திமல் 60(53)
உதார ஜயசுந்தர 21 (21)
டில்ஹார லொகுஹெட்டிகே 16* (10)
ஷமிந்த எறங்க 27/4 (4)
கொழும்பு கொமாண்டோஸ் 147/2 (16.4)
ஷெஹான் ஜயசூரிய 62* (47)
தனஞ்சய டி சில்வா 41 (32)
சிறிவர்தன 24* (14)
இதன் படி கொழும்பு கொமாண்டோஸ் அணி 20 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 8 விக்கட்டுகளால் இலகுவான வெற்றியை பெற்று 2015/16ம் ஆண்டுக்கான சூப்பர் டி20 மாகாண கிரிக்கட் போட்டித்தொடரின் சம்பியன் பட்டதை சுவீகரித்தது.
போட்டியின் ஆட்ட நாயகனாக மிக சிறப்பாக பந்து வீசி 4 விக்கட்டுகளை சரித்த கொழும்பு கொமாண்டோஸ் அணியின் ஷமிந்த எறங்கவிற்கும், போட்டித்தொடரின் ஆட்டநாயகனாக அதே கொழும்பு கொமாண்டோஸ் அணி அணியை சேர்ந்த அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டி சில்வாவிற்கும் வழங்கப்பட்டது.
அது போன்று போட்டி தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக நிரோஷன் திக்வெல்ல தெரிவு செய்யப்பட்டதோடு போட்டி தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக கசுன் ரஜித்தவும் தெரிவு செய்யப்பட்டார்கள். இவர்கள் இருவரும் கொழும்பு கொமாண்டோஸ் அணி சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது