Home Tamil சுபர் ப்ரொவின்சியல் தொடரில் இணை சம்பியன்களாக கொழும்பு, காலி அணிகள்

சுபர் ப்ரொவின்சியல் தொடரில் இணை சம்பியன்களாக கொழும்பு, காலி அணிகள்

442

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உலகக் கிண்ணத்திற்கான இலங்கை வீரர்கள் குழாத்தினை தெரிவு செய்யும் நோக்குடன் ஒழுங்கு செய்த சுபர் ப்ரொவின்சியல் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கடும் மழையினால் முடிவுகள் ஏதுமின்றி கைவிடப்பட்டிருக்கின்றது.

மெதிவ்ஸின் சதத்தோடு தம்புள்ளை அணிக்கு மாகாண ஒருநாள் தொடரில் மூன்றாம் இடம்

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உலகக் கிண்ணத்திற்கான…..

இதன் காரணமாக சுபர் ப்ரொவின்சியல் ஒருநாள் தொடரின் இணை சம்பியன்களாக லசித் மாலிங்க தலைமையிலான காலி அணியும், தினேஷ் சந்திமால் தலைமையிலான கொழும்பு அணியும் தெரிவாகியிருக்கின்றன.

கடந்த வாரம் நான்கு அணிகளின் பங்கேற்போடு (கொழும்பு, கண்டி, தம்புள்ளை, காலி) ஆரம்பமான இந்த சுபர் ப்ரொவின்சியல் ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி இன்று (11) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற காலி அணியின் தலைவர் லசித் மாலிங்க முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

இதன்படி முதலில் துடுப்பாடத் தொடங்கிய காலி அணிக்கு ஆரம்ப வீரர்களில் ஒருவராக வந்த சந்துன் வீரக்கொடி ஓட்டம் எதனையும் பெறாமல் ஏமாற்றம் தந்திருந்தார். எனினும், மறுமுனையில் காலி அணியின் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்ன பொறுமையான முறையில் ஆடி சதம் ஒன்றினை கடந்தார்.

மொத்தமாக 128 பந்துகளினை எதிர்கொண்ட லஹிரு திரிமான்ன உள்ளூர் ஒருநாள் (List A) போட்டிகளில் பெற்ற தனது 7ஆவது சதத்துடன் 9 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 115 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தார்.

Photos: Galle vs Colombo | SLC Super Provincial One Day Tournament 2019 – Final

இதேநேரம், வனிந்து ஹஸரங்கவும் தனது அதிரடியான ஆட்டம் மூலம் காலி அணியினை பலப்படுத்தினார். வெறும் 53 பந்துகளினை மாத்திரமே எதிர்கொண்ட ஹஸரங்க அதில் 13 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 87 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு வீரர்களினதும் துடுப்பாட்ட உதவியோடு காலி அணி  50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 337 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

காலி அணியின் துடுப்பாட்டம் சார்பில் பின்வரிசையில் அதிரடி காண்பித்திருந்த லஹிரு மதுசங்க 13 பந்துகளில் 24 ஓட்டங்கள் குவிக்க, மினோத் பானுக்க 15 பந்துகளில் 21 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் கொழும்பு அணியின் பந்துவீச்சு சார்பில் சுரங்க லக்மால், அசித்த பெர்னாந்து, செஹான் ஜயசூரிய, சீகுகே பிரசன்ன மற்றும் சாமிக கருணாரத்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.  

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக 338 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கை அடைய கொழும்பு அணி துடுப்பாட வர முன்னர் போட்டியில் மழையின் குறுக்கீடு ஏற்பட்டதோடு, நீண்ட நேரம் நிலைமைகள் எதுவும் சீராகாத காரணத்தினால் ஆட்டமும் கைவிடப்பட்டது.

உள்ளூரில் பிரகாசித்த இவர்களுக்கு உலகக் கிண்ண வாய்ப்பு கிடைக்குமா?

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 2018/2019……

இறுதிப் போட்டி கைவிடப்பட்ட பின்னர் சுபர் ப்ரொவின்சியல் தொடரின் சிறந்த வீரராக காலி அணியின் தனன்ஜய டி சில்வா தெரிவு செய்யப்பட்டதோடு, சிறந்த துடுப்பாட்ட வீரர் விருது தம்புள்ளை அணியின் அஞ்செலோ மெதிவ்ஸிற்கு கொடுக்கப்பட்டிருந்தது. தொடரின் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதினை லசித் மாலிங்க வென்றிருந்தார்.

இதேநேரம், சுபர் ப்ரொவின்சியல் தொடரில் வீரர்கள் வெளிக்காட்டிய ஆட்டத்திற்கு அமைய இலங்கையின் உலகக் கிண்ணக் குழாம் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

போட்டியின் சுருக்கம்

Result


Team Galle
337/7 (50)

Team Colombo


Batsmen R B 4s 6s SR
Sandun Weerakkody lbw b Suranga Lakmal 0 4 0 0 0.00
Lahiru Thirimanne b Asitha Fernando 115 128 9 1 89.84
Dhanajaya de silva c Kamindu Mendis b Shehan Jayasuriya 32 43 4 0 74.42
Kusal Mendis c Angelo Perera b Chamika Karunaratne 11 12 1 0 91.67
Milinda Siriwardana c Avisha Fernando b Seekkuge Prasanna 32 29 3 1 110.34
Wanindu Hasaranga run out (Suranga Lakmal) 87 53 13 1 164.15
Minod Bhanuka run out (Suranga Lakmal) 21 15 2 0 140.00
Lahiru Madushanka not out 24 13 2 1 184.62
Dhammika Prasad not out 1 3 0 0 33.33


Extras 14 (b 1 , lb 0 , nb 0, w 13, pen 0)
Total 337/7 (50 Overs, RR: 6.74)
Bowling O M R W Econ
Suranga Lakmal 9 2 52 1 5.78
Asitha Fernando 9 0 66 1 7.33
Shehan Jayasuriya 10 0 42 1 4.20
Seekkuge Prasanna 4 0 41 1 10.25
Chamika Karunaratne 6 0 47 1 7.83
Akila Dananjaya 9 0 63 0 7.00
Kamindu Mendis 3 0 25 0 8.33



முடிவு – போட்டி கைவிடப்பட்டது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<