கவிந்து இஷான், மொஹமட் சிபான் ஆகியோரின் ஹெட்ரிக் கோல்களின்மூலம் சுபர் லீக் முன்பருவ கால்பந்து தொடரில் நியு யங்ஸ் அணிக்கு எதிரான போட்டியை அப் கண்ட்ரி லயன்ஸ் அணி 7-0 என இலகுவாக வெல்ல, ரினௌன் அணிக்கு எதிரான போட்டியை 2-1 கோல் கணக்கில் ப்ளூ ஸ்டார் அணி வெற்றி கொண்டது.
நியு யங்ஸ் கா.க எதிர் அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க
நியு யங்ஸ் கால்பந்து கழகம் இந்த தொடரில் எந்தவித வெற்றிகளும் பெறாத நிலையிலும், அப் கண்ட்ரி லயன்ஸ் அணி ஒரு வெற்றியைப் பெற்ற நிலையிலும் சுகததாச அரங்கில் புதன்கிழமை (17) இடம்பெற்ற இந்த மோதலில் களமிறங்கியது.
>> இரண்டாவது வெற்றியை சுவைத்த சீ ஹோக்ஸ், ரெட் ஸ்டார் அணிகள்
ஆட்டத்தின் 44ஆவது மற்றும் முதல் பாதியின் மேலதிக நிமிடங்களில் நியு யங்ஸ் அணியின் கோல் எல்லையில் வைத்து அப் கண்ட்ரி லயன்ஸ் வீரர் சிபான் முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்டார். இதன்போது கிடைத்த இரண்டு பெனால்டி வாய்ப்புக்களையும் கவிந்து இஷான் கோலாக்கி, முதல் பாதியில் தமது அணியை முன்னிலைப்படுத்தினார்.
முதல் பாதி: நியூ யங்ஸ் கா.க 0 – 2 அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க
இரண்டாம் பாதி ஆரம்பமாகியது முதல் அப் கண்ட்ரி வீரர்கள் அடுத்தடுத்து கோல்களைப் பெற்றனர்.
51, 56, 63ஆம் நிமிடங்களின் தொடர்ந்து 3 கோல்களைப் பெற்ற சிபான் சுபர் லீக் முன் பருவத்தில் முதலாவது ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்தார்.
தொடர்ந்து, மேலும் 15 நிமிடங்களுக்குள் கவிந்து இஷான் அணிக்கான ஆறாவது கோலையும் பதிவு செய்து தொடரின் இரண்டாவது ஹெட்ரிக் கோலுக்கு சொந்தக்காரரானார்.
மீண்டும் 85ஆவது நிமிடத்தில் காவிந்த பெர்னாண்டோ அடுத்த கோலையும் பெற, ஆட்ட நிறைவில் அப் கண்ட்ரி லயன்ஸ் அணி 7-0 என அபார வெற்றி பெற்று, தமது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
>> Video – PSG இன் போட்டிக்கு மத்தியில் அரங்கேறிய அசம்பாவிதம்! | FOOTBALL ULAGAM
இந்த தோல்வியுடன் நியு யங்ஸ் கால்பந்து கழகம் இந்த தொடரில் மேலும் ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில், எந்தவொரு வெற்றியையும் பதிவு செய்யவில்லை.
முழு நேரம்: நியூ யங்ஸ் கா.க 0 – 7 அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க
கோல் பெற்றவர்கள்
- அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க – கவிந்து இஷான் 44′(P), 45+2′(P), 77′, மொஹமட் சிபான் 51′, 56′, 63′, காவிந்த பெர்னாண்டோ 85′
ப்ளூ ஸ்டார் வி.க எதிர் ரினௌன் வி.க
இந்தப் போட்டியில் களமிறங்கிய ப்ளூ ஸ்டார் வீரர்கள் இந்த தொடரில் ஒரு வெற்றியை பெற்றிருந்தனர். ரினௌன் வீரர்கள் தமது முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் இந்த போட்டியில் களமிறங்கினர்.
ப்ளூ ஸ்டார் அணி, தமது முன்னணி வீரர்களான அணித் தலைவர் தாரக சில்வா, தரிந்து எரங்க, பாஹிர் அலி மற்றும் செனால் சந்தேஷ் போன்ற வீரர்களை இந்தப் போட்டியில் தமது முதல் பதினொருவர் அணியில் இணைக்கவில்லை.
>> சிவப்பு அட்டையினை வழங்குவதற்கு மறந்த கால்பந்து நடுவர்
போட்டியின் 22ஆவது நிமிடத்தில் ப்ளூ ஸ்டார் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பின்போது, முன்னாள் ரினௌன் வீரர் அர்ஷாட் ப்ளூ ஸ்டார் அணிக்கான முதல் கோலைப் பெற்றார். இதுவே போட்டியின் முதல் பாதியில் பெறப்பட்ட ஒரே கோலாக இருந்தது.
முதல் பாதி: ப்ளூ ஸ்டார் வி.க 1 – 0 ரினௌன் வி.க
இரண்டாம் பாதி ஆரம்பமாகிய பின்னர் சற்று வேகமான ஆட்டத்தைக் காண்பித்த ரினௌன் அணிக்கு 63ஆவது நிமிடத்தில் முதல் கோல் கிடைக்கப்பெற்றது.
எனினும், இரண்டாம் பாதியில் மாற்று வீரராக வந்த செனால் சந்தேஷ் 8ஆவது நிமிடத்தில் ப்ளூ ஸ்டார் அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றுக் கொடுத்தார்.
எனவே, போட்டி நிறைவில் மேலதிக ஒரு கொலினால் ப்ளூ ஸ்டார் அணி வெற்றி பெற்று தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
முழு நேரம்: ப்ளூ ஸ்டார் வி.க 2 – 1 ரினௌன் வி.க
கோல் பெற்றவர்கள்
- ப்ளூ ஸ்டார் வி.க – மொஹமட் அர்ஷாட் 22′(P), செனால் சந்தேஷ் 82′
- ரினௌன் வி.க – திலிப் பீரிஸ் 63‘
>> மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க <<