பலம் மிக்க கொழும்பு கால்பந்து கழகத்தை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்ட சீ ஹோக்ஸ் கால்பந்து கழகம் சுபர் லீக் முன் பருவப் போட்டிகளில் தமது முதல் வெற்றியைப் பதிவுசெய்ய, ரட்னம் விளையாட்டுக் கழகத்தை டிபெண்டர்ஸ் வீரர்கள் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டனர்.
கொழும்பு கால்பந்து கழகம் எதிர் சீ ஹோக்ஸ் கா.க
கொழும்பு கால்பந்து கழகம் தமது முதல் 2 போட்டிகளையும் வெற்றி கொண்ட நிலையிலும், சீ ஹோக்ஸ் அணி தமது முதல் போட்டியை சமன் செய்த நிலையிலும் இன்றைய இந்த மோதலுக்கு தயாரானது.
முதல் வெற்றியை சுவைத்த ரெட் ஸ்டார்ஸ், அப் கண்ட்ரி லயன்ஸ்
சீ ஹோக்ஸ் அணிக்கு புதிதாக இணைக்கப்பட்ட ஜப்பான் நாட்டு வீரர்கள் மூவரும் இன்றைய போட்டியில் முதல் முறையாகக் களமிறங்கினர்.
அதற்கு பலன் கொடுக்கும் வகையில், ஆட்டத்தின் 18ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் நாகூர் மீராவிடமிருந்து பந்தைப் பெற்ற ஜப்பான் வீரர் கனேசிரோ போட்டியின் 18ஆவது நிமிடத்தில் சீ ஹோக்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.
அதன் பின்னர் இரண்டு அணிகளும் தம் அளவிலான பலத்துடன் ஆடினாலும், முதல் பாதி நிறைவு வரை எந்தவித மேலதிக கோல்களும் பெறப்படவில்லை.
முதல் பாதி: கொழும்பு கா.க 0 – 1 சீ ஹோக்ஸ் கா.க
இரண்டாம் பாதி ஆரம்பமாகும்போது சீ ஹோக்ஸ் அணியின் கோல் காப்பாளர், ஜப்பான் நாட்டு வீரர்கள் உட்பட 5 வீரர்கள் வெளியே எடுக்கப்பட்டு 5 மாற்று வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
போட்டியின் 78ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து வழங்கப்பட்ட பந்தைப் பெற்ற ஹஸ்மீர் பின்கள வீரர்கள் இருவருக்கு இடையினால் பந்தை எடுத்துச் சென்று சீ ஹோக்ஸ் அணிக்கான இரண்டாவது கோலையும் பெற்றார்.
போட்டியின் உபாதையீடு நேரத்தில் கொழும்பு கால்பந்து கழக வீரர் ஷமோத் டில்ஷான் எதிரணி வீரரைத் தாக்கியமையினால் சிவப்பு அட்டை பெற்று மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
எஞ்சிய நேரத்தை 10 வீரர்களுடன் விளையாடிய கொழும்பு கால்பந்து கழகத்திற்கு போட்டியின் இறுதி நிமிடத்தில் கிடைத்த கோணர் வாய்ப்பின்போது உள்வந்த பந்து முதல் வாய்ப்பின்போது தடுக்கப்பட, மீண்டும் சிராஜ் பந்தை கோலாக்கினார்.
போட்டி நிறைவில் சீ ஹோக்ஸ் அணி தமது முதல் வெற்றியைப் பெற, கொழும்பு அணி வீரர்கள் தமது மூன்றாவது போட்டியில் முதல் தோல்வியை சந்தித்தனர்.
முழு நேரம்: கொழும்பு கா.க 1 – 2 சீ ஹோக்ஸ் கா.க
கோல் பெற்றவர்கள்
- கொழும்பு கா.க – சிராஜ் சைன் 90+4‘
- சீ ஹோக்ஸ் கா.க – M. கனேசிரோ 18‘, M. ஹஸ்மீர் 78‘
ரட்னம் வி.க எதிர் டிபெண்டர்ஸ் கா.க
இந்த இரண்டு அணிகளும் தமது முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இந்தப் போட்டியில் மோதின.
புளூ ஸ்டாரை வீழ்த்திய ரட்னம் அணிக்கு முதல் வெற்றி
ஆட்டம் அரம்பித்த சில நிமிடங்களில் டிபெண்டர்ஸ் வீரர் ரிப்கான் எதிரணியின் கோல் எல்லைக்கு எடுத்துச் சென்று கோல் நோக்கி உதைந்த பந்து வலது பக்க கம்பத்தில் பட்டு மீண்டும் மைதானத்திற்கு வந்தது.
ஆட்டத்தின் முதல் 25 நிமிடங்களில் மத்திய களத்தில் இருந்து ரட்னம் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கின்போது, தேசிய அணியின் முன்னாள் வீரர் எடிசன் பிகுராடோ கோல் கம்பத்தின் வலது பக்கத்தினால் பந்தை கோலுக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.
முதல் பாதி: ரட்னம் வி.க 1 – 0 டிபெண்டர்ஸ் கா.க
போட்டியில் 80 நிமிடங்கள் கடந்த நிலையில், மத்திய களத்தில் இருந்து மதுஷான் உதைந்த பந்து கம்பங்களுக்குள் செல்ல, டிபெண்டர்ஸ் அணி ஆட்டத்தின் முதல் கோலைப் பெற்றது.
அடுத்த 3 நிமிடங்களில் டிபெண்டர்ஸ் வீரர்களுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பின்போது ஸ்டெபான் அவ்வணிக்கான அடுத்த கோலையும் பெற்றார்.
மேலும் 5 நிமிடங்கள் கடந்த நிலையில் லக்ஷித ஜயதுங்க மத்திய களத்தில் இருந்து பந்தை வேகமாக கம்பங்களுக்குள் செலுத்தி டிபெண்டர்ஸ் அணிக்கான மூன்றாவது கோலையும் பதிவு செய்தார்.
எனவே, இறுதி நேரத்தில் அடுத்தடுத்து பெற்ற கோல்களின் மூலம் போட்டி நிறைவில் டிபெண்டர்ஸ் அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.
முழு நேரம்: ரட்னம் வி.க 1 – 3 டிபெண்டர்ஸ் கா.க
கோல் பெற்றவர்கள்
- ரட்னம் வி.க – எடிசன் பிகுராடோ 25’
- டிபெண்டர்ஸ் கா.க – மதுஷான் டி சில்வா 83’, டேங் ஸ்டெபான் 86’, லக்ஷித ஜயதுங்க 90’
>> மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க <<