சுகததாச அரங்கில் இடம்பெற்ற சுபர் லீக் முன்பருவப் போட்டியொன்றில் கொழும்பு கால்பந்துக் கழகம், புளூ ஈகல் கால்பந்து கழகத்தை 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி, தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
இறுதியாக இடம்பெற்று முடிந்த FFSL தலைவர் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதியபோது கொழும்பு கால்பந்து கழகம் 4-0 என வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த தொடரின் B குழுவுக்கான ஒரு ஆட்டமாக இந்தப் போட்டி இடம்பெற்றது.
புளூ ஸ்டாருக்கு முதல் வெற்றி; சீ ஹோக்ஸ் – நியு யங்ஸ் மோதல் சமநிலையில்
ஆட்டம் ஆரம்பித்த நிமிடம் முதல் கொழும்பு கல்பந்து கழக வீரர்களே எதிரணியின் கோல் எல்லையில் முதல் கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
ஆரம்பத்தில் தனக்கு கிடைத்த கோலுக்கான வாய்ப்பை வீணடித்த பெட்ரிக் திமித்ரி, பின்னர் சபீர் மத்திய களத்தில் இருந்து வழங்கிய பந்துப் பரிமாற்றத்தைப் பெற்று கொழும்பு அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.
முதல் பாதி: கொழும்பு கா.க 1 – 0 புளூ ஈகல்ஸ் கா.க
இரண்டாம் பாதியில் கொழும்பு அணி வீரர்கள் கோலுக்கான பல வாய்ப்புக்களை ஏற்படுத்திய போதும், அவை எதுவும் சிறந்த முடிவைப் பெற்றுக் கொடுக்கவில்லை.
குறிப்பாக, அடுத்தடுத்து கிடைத்த கோணர் உதைகளும் அவர்களுக்கு வீணாக, இறுதியில் கிடைத்த கோணர் உதையின்போது திமித்ரி உள்ளனுப்பிய பந்தை சபீர் ஹெடர் செய்து கொழும்பு அணிக்கான இரண்டாவது கொலைப் பெற்றார்.
புளூ ஈகல்ஸ் எடுத்த கோலுக்கான முயற்சிகளின்போது கொழும்பு பின்கள வீரர்கள் தடுமாற்றம் கண்டாலும், கோலுக்கான வாய்ப்புக்களை அவர்கள் ஏற்படுத்த விடவில்லை.
எனவே, போட்டி நிறைவில் மேலதிக இரண்டு கோல்களால் கொழும்பு கால்பந்து கழகம் வெற்றி பெற்றது.
முழு நேரம்: கொழும்பு கா.க 2 – 0 புளூ ஈகல்ஸ் கா.க
கோல் பெற்றவர்கள்
கொழும்பு கா.க – பொட்ரிக் திமித்ரி, சபீர் ரசூனியா
மஞ்சள் அட்டை பெற்றவர்கள்
புளூ ஈகல்ஸ் கா.க – ஜீவன்த பெர்னாண்டோ, ஷதுரங்க பெர்னாண்டோ
>> மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க <<