ஷமோதின் ஹெட்ரிக்குடன் கொழும்பு இலகு வெற்றி: டிபெண்டர்ஸ் – சீ ஹோக்ஸ் மோதல் சமனிலை

Super League 2021

295
Super League

சுபர் லீக் கால்பந்து தொடரின் ஐந்தாம் வாரத்திற்கான போட்டியில் ஷமோத் டில்ஷானின் ஹெட்ரிக் கோலுடன் கொழும்பு கால்பந்து கழகம் 4-1 என ரட்னம் விளையாட்டு கழகத்தை இலகுவாக வெற்றிகொண்டது.

சீ ஹோக்ஸ் கால்பந்து கழகம் மற்றும் டிபெண்டர்ஸ் கால்பந்து கழகம் இடையிலான விறுவிறுப்பான போட்டி 2-2 என சமநிலையில் நிறைவு பெற்றது.

சீ ஹோக்ஸ் கா.க எதிர் டிபெண்டர்ஸ் கா.க

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் சனிக்கிழமை (11) முதல் ஆட்டமாக இடம்பெற்ற இந்த போட்டியின் 25 நிமிடங்கள் கடந்த நிலையில் 5 நிமிட இடைவெளியில் தனுஷ்க மதுசங்கவும் அணித்தலைவர் சுபாஷ் மதுஷானும் கோல்களை பெற, முதல் பாதியில் 2-0 என சீ ஹோக்ஸ் அணியினர் முன்னிலை பெற்றனர்.

எனினும் இரண்டாம் பாதி ஆட்டம் டிபெண்டர்ஸ் வீரர்களுக்கு சாதகமாக அமைந்தது. போட்டியின் 68ஆவது நிமிடம் அவ்வணியின் அனுபவ விரர் சஜித் குமார எதிரணியின் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து சிறந்த முறையில் பந்தை கம்பங்களுக்குள் செலுத்தி முதல் கோலை பெற்றார்.

மீண்டும், 72 ஆவது நிமிடத்தில் வந்த பந்துப் பரிமாற்றத்தின்போது, தனது காலின் பின் பகுதியால் பந்தை கோலுக்குள் செலுத்தி ரிப்கான் போட்டியை சமப்படுத்தினார்.

பின்னர் ஆடத்தின் 87 மற்றும் 90ஆவது நிமிடங்களில் முறையே சீ ஹோக்ஸ் அணியின் நாகூர் மீரா மற்றும் கிங்ஸ்டன் ஆகியோர் எதிரணி வீரருடன் முறையற்ற விதத்தில் ஆடியமையினால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

போட்டியின் இறுதி நிமிடம் வரை ஆட்டம் கடுமையாக சூடு பிடித்த போதும் மேலதிக கோல் பெறப்படாமையினால் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநலையில் முடிந்தது. Embed the link – https://youtu.be/A-CjmIPAqhE

இந்த தொடரின் அனைத்து போட்டிகளலும் வெற்றிபெற்ற சீ ஹோக்ஸ் அணிக்கு இது முதலாவது சமநிலை முடிவாகும். டிபெண்டர்ஸ் அணி தாம் விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 சமனிலை மற்றும் ஒரு தோல்வியை பெற்றுள்ளது.

முழு நேரம்: சீ ஹோக்ஸ் கா.க 2 – 2 டிபெண்டர்ஸ் கா.க

கோல் பெற்றவர்கள்

சீ ஹோக்ஸ் கா.க – தனுஷ்க மதுசங்க 27’, சுபாஷ் மதுஷான் 31’

டிபெண்டர்ஸ் கா.க – சஜித் குமார 68’, ரிப்கான் மொஹமட் 73’

கொழும்பு கா.க எதிர் ரட்னம் வி.க

சனிக்கிழமை இதே மைதானத்தில் இரண்டாவது போட்டியாக இரவு ஆரம்பமான போட்டியின் முதல் பாதியில் ஷமோத் டில்ஷானின் இரட்டை கோலினால் கொழும்பு கால்பந்து கழகம் 2-0 என முதல் பாதியை தம் வசப்படுத்தியது.

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 10 நிமிடங்களில் ஷமோத் தனது ஹெட்ரிக் கோலை பதிவு செய்தார்.

மீண்டும் 65ஆவது நிமிடத்தில் கொழும்பு அணி வீரர் ஆகிப் அடுத்த கோலையும் பெற, ரட்னம் அணி சார்பில் மொஹமட் ஹகீம் 84ஆவது நிமிடத்தில் முதல் கோலை பெற்றார்.

எனவே, ஆட்ட நிறைவில் 4-1 என்ற இலகுவான வெற்றியுடன் கொழும்பு கால்பந்து கழகம் தொடரில் மேலும் 3 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. ரட்னம் வீரர்கள் தொடரில் இதுவரை ஒரு வெற்றியையேனும் பெறவில்லை.

முழு நேரம்: கொழும்பு கா.க 4 – 1 ரட்னம் வி.க

கோல் பெற்றவர்கள்

கொழும்பு கா.க – ஷமோத் டில்ஷான் 27′ 39′ 55′, மொஹமட் ஆகிப் 65′

ரட்னம் வி.க – மொஹமட் ஹகீம் 84′

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<