அங்குரார்ப்பண சுபர் லீக் தொடரின் முதல் வாரத்திற்கான இறுதி இரண்டு ஆட்டங்களும் புதன்கிழமை சுகததாச அரங்கில் இடம்பெற்றன. இதில் புளூ ஈகல்ஸ் அணிக்கு எதிரான போட்டியை சீ ஹோக்ஸ் வெற்றிகொள்ள, அப் கண்ட்ரி லயன்ஸ் மற்றும் ரட்னம் அணிகளுக்கு இடையிலான மோதல் சமநிலையில் முடிவுற்றது.
புளூ ஈகல்ஸ் கா.க எதிர் சீ ஹோக்ஸ் கா.க
நேற்றைய தினம் இரவு ஆரம்பமாகிய புளூ ஈகல்ஸ் கால்பந்து கழகம் எதிர் சீ ஹோக்ஸ் கால்பந்து கழகம் இடையிலான மோதலின்போது பெய்த கடும் மழையினால் போட்டி 42 நிமிடங்களின் பின்னர் இடைநிறுத்தப்பட்டு, எஞ்சிய நேரத்திற்கான போட்டி இன்று மாலை ஆரம்பமாகியது.
ரினௌன் – டிபெண்டர்ஸ் மோதல் சமநிலையில் நிறைவு
நேற்றைய தினம் போட்டி இடைநிறுத்தப்படும்போது, மொஹமட் ஹஸ்மீர் பெற்ற கோலினால் சீ ஹோக்ஸ் வீரர்கள் 1-0 என முன்னிலை பெற்றிருந்தனர். எனினும், இன்றைய போட்டி நேரத்தில் எந்தவொரு கோலும் மேலதிகமாகப் பெறப்படவில்லை.
குறிப்பாக, புளூ ஈகல்ஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அவ்வணியின் லன்கேஷ்வர கம்பங்களுக்கு வெளியின் அடித்து கோலுக்கான வாய்ப்பை வீணடித்தார்.
எனவே, போட்டி நிறைவில் சீஹோக்ஸ் வீரர்கள் 1-0 என வெற்றி பெற்று சுபர் லீக் தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தனர்.
முழு நேரம்: புளூ ஈகல்ஸ் கா.க 0 – 1 சீ ஹோக்ஸ் கா.க
கோல் பெற்றவர்கள்
சீ ஹோக்ஸ் கா.க – மொஹமட் ஹஸ்மீர் 12’
அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க எதிர் ரட்னம் வி.க
இன்று இரவு இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் அப் கண்ட்ரி லயன்ஸ் வீரர்கள் கோலுக்கான பல வாய்ப்புக்களைப் பெற்றாலும், ரட்னம் கோல் காப்பாளர் முர்ஷிட் அவை அனைத்தையும் சிறந்த முறையில் தடுத்தார். எனவே, முதல் பாதி கோல்கள் எதுவும் இன்றி நிறைவுற்றது.
இரண்டாம் பாதியில், 60ஆவது நிமிடத்தில் அப் கண்ட்ரி லயன்ஸ் வீரர்களுக்கு கடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை பின்கள வீரர் இஸ்மயில ஜிமொ ஹெடர் செய்து போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.
எனினும், 78ஆவது நிமிடத்தில் சித்ரகுமார் எதிரணியின் கோல் எல்லையில் இருந்து வழங்கிய பந்துப் பரிமாற்றத்தை, ரட்னம் அணிக்கு மாற்று வீரராக வந்த அகீல் கோலாக்கினார்.
எனவே, போட்டி முடிவில் 1-1 என்ற கோல்கள் கணக்கில் ஆட்டம் சமநிலையடைந்தது.
முழு நேரம்: அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க 1 – 1 ரட்னம் வி.க
கோல் பெற்றவர்கள் – மொஹமட் அகீல் 78‘
அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க – இஸ்மயில ஜிமொ 60‘
>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<