ரினௌன் – டிபெண்டர்ஸ் மோதல் சமநிலையில் நிறைவு

Super League 2021

286

செவ்வாய்க்கிழமை (20) மாலை சுகததாச அரங்கில் இடம்பெற்ற ரினௌன் விளையாட்டுக் கழகம் மற்றும் டிபெண்டர்ஸ் கால்பந்து கழகம் என்பவற்றுக்கு இடையிலான அங்குரார்ப்பண சுபர் லீக் தொடரின் மோதல் கோல்கள் ஏதுமின்றி சமநிலையில் நிறைவுற்றது.  

வெற்றியுடன் சுபர் லீக்கை ஆரம்பித்த கொழும்பு, ரெட் ஸ்டார்ஸ்

டிபெண்டர்ஸ் கா.க எதிர் ரினௌன் வி.க  

இந்த தொடருக்கு முன் இடம்பெற்ற முன் பருவப் போட்டிகளின்போது இவ்விரு அணிகளுக்கும் இடையில் இடம்பெறவிருந்த மோதல், ரினௌன் அணியில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினால் கைவிட்டப்பட்டது. 

இந்நிலையில், இன்று இடம்பெற்ற இந்த மோதலில் இரண்டு அணிகளும் ஆரம்பம் முதல் கோலுக்கான முயற்சிகளைப் பெற்றாலும் ஆட்டம் நிறைவடையும் வரை யாரும் எந்தவொரு கோலையும் பெறவில்லை.  

குறிப்பாக, டிபெண்டர்ஸ் வீரர்கள் மேற்கொண்ட கோலுக்கான பல வாய்ப்புக்களை ரினௌன் கோல் காப்பாளர் ராசிக் ரிஷாட் சிறந்த முறையில் தடுத்தார். 

முழு நேரம்: டிபெண்டர்ஸ் கா.க 0 – 0 ரினௌன் வி.க  

புளூ ஈகல்ஸ் கா.க எதிர் சீ ஹோக்ஸ் கா.க 

குறித்த தினம் இரவு இடம்பெற்ற புளூ ஈகல்ஸ் கால்பந்து கழகம் எதிர் சீ ஹோக்ஸ் கால்பந்து கழகம் இடையிலான மோதலின்போது பெய்த கடும் மழையினால் போட்டி 42 நிமிடங்களின் பின்னர் இடைநிறுத்தப்பட்டதுடன், எஞ்சிய நேர ஆட்டம் நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. 

போட்டி இடைநிறுதத்தப்படும்போது, மொஹமட் ஹஸ்மீர் பெற்ற கோலினால் சீ ஹோக்ஸ் வீரர்கள் 1-0 என முன்னிலை பெற்றிருந்தனர். 

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<