கொழும்பில் பெய்துவரும் மழை காரணமாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் மாகாண மட்ட ‘சுப்பர் 4’ ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (17) நடைபெற்ற கடைசி இரண்டு லீக் போட்டிகளும் முடிவு இன்றி கைவிடப்பட்டன.
தரங்கவின் அதிரடி அரைச் சதத்தால் காலி அணி இறுதிப் போட்டியில்
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் மாகாண மட்ட ‘சுப்பர் 4’ ஒரு நாள் கிரிக்கெட் …
இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கும் திசர பெரேரா தலைமையிலான கொழும்பு அணி காலியுடனான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதனால் மூன்றாவது இடத்தில் இருந்த தம்புள்ளை அணிக்கு இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பு பறிபோனது.
காலி எதிர் கொழும்பு
கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் கொழும்பு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் காலி அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பதால் அதன் தலைவர் உபுல் தரங்க ஆடவில்லை. அவருக்கு பதில் தசுன் ஷானக்க அணித்தலைவராக செயற்பட்டார்.
மழை காரணமாக தாமதித்து ஆரம்பமான போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி ஒரு ஓட்டத்துடனேயே ஆரம்ப விக்கெட்டை பறிகொடுத்தது. அந்த அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரரான ரமித் ரபுக்வெல்ல பூஜ்யத்திற்கே ஆட்டமிழந்தார்.
எனினும், பானுக்க ராஜபக்ஷ மற்றும் சதீர சமரவிக்ரம 2 ஆவது விக்கெட்டுக்கு 124 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று வலுச் சேர்த்தனர். NCC அணியைச் சேர்ந்த ராஜபக்ஷ 59 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். கொழும்பு அணியுடனான முந்தைய போட்டியில் அபார சதம் பெற்ற 22 வயது வீரர் சதீர இந்தப் போட்டியிலும் சிறப்பாக சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டது.
காலி அணி 30 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை பெற்றிருந்தபோதே போட்டி மழையால் தடைப்பட்டது. இதனால் போட்டியை தொடர முடியாத நிலை ஏற்பட ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன்போது சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு மறுமுனையில் ஷம்மு அஷான் 16 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
கொழும்பு அணி ஏற்கனவே புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் இன்று நடந்த அடுத்த போட்டியும் மழையால் கைவிடப்பட்டதால் கொழும்புக்கு இறுதிப் போட்டிக்கு நுழைய முடியுமாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் சபையின் அழைப்பை புறக்கணித்த சங்கக்கார
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மன்சூர் அலி கான் பட்டௌடி (MAK Pataudi) வருடாந்த சொற்பொழிவை தன்னால் ஆற்ற…
இதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை (20) ஆர். பிரேமதாச மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் காலி மற்றும் கொழும்பு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
தம்புள்ளை எதிர் கண்டி
மாகாண மட்ட ‘சுப்பர் 4’ தொடரின் இறுதிப் போட்டிக்கு நுழைய கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நெருக்கடியோடு ஏற்கனவே இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்த கண்டிக்கு எதிராக களமிறங்கிய தம்புள்ளை அணியின் எதிர்பார்ப்புக்கு மழை இடையூறு செய்தது.
பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி ஏற்கனவே மழையால் 49 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே ஆரம்பமானது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மிலிந்த சிறிவர்தன தலைமையிலான தம்புள்ளை அணி ஆரம்பத்தில் தடுமாற்றம் கண்டபோதும் மத்திய வரிசையில் அஷான் பிரியஞ்சன் சிறப்பாக ஆடினார்.
தம்புள்ளை அணி 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது களமிறங்கிய பிரியஞ்சன் ஒருமுனையில் நேர்த்தியாக ஓட்டங்களை பெற்றார். இதன்போது சச்சித்ர சேரசிங்க (41) மற்றும் பின்வரிசையில் திலகரத்ன சம்பத் (42) கைகொடுத்ததன் மூலம் தம்புள்ளை அணியால் சற்று வலுவான ஓட்டங்களை எட்ட முடிந்தது.
இதில், இலங்கை ஒருநாள் அணிக்காக இதுவரை 23 போட்டிகளில் ஆடி இருக்கும் 28 வயது பிரியஞ்சன் 77 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 73 ஓட்டங்களை குவித்தார். இந்த ஓட்டங்கள் மூலம் அவர் மாகாண மட்ட தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்த கொழும்பு அணியின் செஹான் ஜயசூரியவை பின்தள்ளி (275) முதலிடத்திற்கு முன்னேறினார். பிரியஞ்சன் தொடரில் ஆடிய ஐந்து போட்டிகளிலும் ஒரு சதம் 2 அரைச்சதங்கள் என மொத்தம் 279 ஓட்டங்களை பெற்றார்.
இதன்மூலம் தம்புள்ளை அணி 49 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்றது. கண்டி அணித் தலைவர் ஜீவன் மெண்டிஸ் மற்றும் சரித் அசலங்க தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் 258 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலெடுத்தாட களமிறங்கிய கண்டி அணி 1.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி அதிரடியாக 17 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. எனவே, ஆட்டத்தை தொடர முடியாத நிலையில் இந்த போட்டியும் முடிவின்றி கைவிடப்பட்டது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க



















