கண்டி அணிக்கு எதிரான ‘சுப்பர் 4’ மாகாண மட்ட ஒருநாள் தொடரில் கொழும்பு அணி டக்வத் லுவிஸ் முறைப்படி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
தம்புள்ளை அணியை இலகுவாக வீழ்த்திய கொழும்பு
தம்புள்ளை அணிக்கு எதிரான ‘சுப்பர் 4’…
பல்லேகல சர்வதேச மைதானத்தில் இன்று (06) நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் அந்த அணி லசித் மாலிங்க தலைமையிலான காலி அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த தினேஷ் சந்திமால் தலைமையிலான கொழும்பு அணியின் ஆரம்ப விக்கெட்டுகள் ஒற்றை இலக்கங்களுக்கே வெளியேறின. அவிஷ்க பெர்னாண்டோ 5 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததோடு உபுல் தரங்க 1 ஓட்டத்துடன் வெளியேறினார்.
Photos: Kandy vs Colombo | Super Provincial One Day 2019
எனினும் மத்திய வரிசையில் வந்த ஷெஹான் ஜயசூரிய அபாரமாக துடுப்பெடுத்தாடி சதம் ஒன்றை பெற்றதன் மூலம் அணியின் ஓட்டங்களை அதிகரித்தார். 133 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 9 பௌண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 115 ஓட்டங்களை பெற்ற நிலையில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.
இதன் போது ஜயசூரிய மத்திய பின் வரிசையில் வந்த சகலதுறை வீரர் அஞ்செலோ பெரேராவுடன் இணைந்து 4 ஆவது விக்கெட்டுக்கு 138 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். வேகமாக துடுப்பெடுத்தாடிய பெரேரா 82 பந்துகளில் 84 ஓட்டங்களை பெற்றார்.
இதன் மூலம் கொழும்பு அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 289 ஓட்டங்களை பெற்றது.
மெதிவ்ஸின் அரைச்சதம் வீண்; மாலிங்கவின் அணிக்கு இரண்டாவது வெற்றி
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கண்டி அணி முதல் விக்கெட்டை 7 ஓட்டங்களில் இழந்தபோதும் மறுமுனையில் இருந்த அணித்தலைவர் திமுத் கருணாரத்ன சங்கீத் குரேவுடன் இணைந்து 80 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டார். எனினும் திமுத் கருணாரத்ன 44 ஓட்டங்களுடனும், சங்கீத் குரே 82 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்த பின் கண்டி அணி சற்று தடுமாற்றம் கண்டது.
இந்நிலையில் 39 ஓவர்கள் முடிவில் கண்டி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை பெற்றிருந்தபோது போதி வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. போட்டியை தொடர முடியாத நிலையில் குறித்த ஓவர்கள் முடிந்த நிலையில் கண்டி அணி 209 ஓட்டங்களை பெறவேண்டி இருந்த நிலையில் டக்வத் லுவிஸ் முறைப்படி தோல்வியை சந்தித்தது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Avisha Fernando | not out | 5 | 7 | 1 | 0 | 71.43 |
Upul Tharanga | lbw b Kasun Rajitha | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Dinesh Chamdimal | c Sadeera Samarawickrama b Sachithra Senanayake | 35 | 34 | 7 | 0 | 102.94 |
Shehan Jayasuriya | run out (Thisara Perera) | 115 | 133 | 9 | 2 | 86.47 |
Kamindu Mendis | c Sadeera Samarawickrama b Sangeeth Cooray | 13 | 26 | 0 | 0 | 50.00 |
Angelo Perera | run out (Dimuth Karunaratne) | 84 | 82 | 9 | 1 | 102.44 |
Seekkuge Prasanna | c Pathum Nissanka b Kasun Rajitha | 17 | 11 | 1 | 1 | 154.55 |
Chamika Karunaratne | not out | 5 | 3 | 0 | 0 | 166.67 |
Chamara Silva | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 14 (b 1 , lb 8 , nb 1, w 4, pen 0) |
Total | 289/6 (50 Overs, RR: 5.78) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nuwan Pradeep | 10 | 1 | 66 | 0 | 6.60 | |
Kasun Rajitha | 9 | 1 | 74 | 2 | 8.22 | |
Thisara Perera | 8 | 0 | 47 | 0 | 5.88 | |
Sachithra Senanayake | 10 | 0 | 28 | 1 | 2.80 | |
Sangeeth Cooray | 4 | 0 | 17 | 1 | 4.25 | |
Jeffrey Vandersay | 6 | 0 | 34 | 0 | 5.67 | |
Chathuranga de Sliva | 3 | 0 | 14 | 0 | 4.67 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sadeera Samarawickrama | b Suranga Lakmal | 4 | 9 | 1 | 0 | 44.44 |
Dimuth Karunaratne | c Chamika Karunaratne b Kamindu Mendis | 44 | 58 | 5 | 0 | 75.86 |
Sangeeth Cooray | run out (Chamika Karunaratne) | 82 | 100 | 0 | 0 | 82.00 |
Pathum Nissanka | lbw b Seekkuge Prasanna | 36 | 35 | 2 | 0 | 102.86 |
Sachithra Senanayake | b Seekkuge Prasanna | 23 | 26 | 1 | 1 | 88.46 |
Priyamal Perera | not out | 2 | 2 | 0 | 0 | 100.00 |
Thisara Perera | not out | 9 | 4 | 2 | 0 | 225.00 |
Extras | 5 (b 1 , lb 1 , nb 0, w 3, pen 0) |
Total | 205/5 (39 Overs, RR: 5.26) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Suranga Lakmal | 6 | 2 | 24 | 1 | 4.00 | |
Asitha Fernando | 6 | 0 | 29 | 0 | 4.83 | |
Shehan Jayasuriya | 7 | 0 | 36 | 0 | 5.14 | |
Chamika Karunaratne | 4 | 1 | 18 | 0 | 4.50 | |
Seekkuge Prasanna | 9 | 0 | 55 | 2 | 6.11 | |
Kamindu Mendis | 7 | 0 | 41 | 1 | 5.86 |