இரட்டைச் சதம் பெற்ற சச்சித்ர பந்துவீச்சிலும் அபாரம்

527

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் நான்கு ‘சுப்பர் 8’ போட்டிகள் இன்று (20) நிறைவடைந்தன.

SSC எதிர் தமிழ் யூனியன் கழகம்

இரட்டைச் சதம் பெற்ற சச்சித்ர சேரசிங்க பந்துவீச்சுலும் மிரட்டியதால் SSC அணிக்கு எதிராக தமிழ் யூனியன் கழகம் 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

>>சேரசிங்கவின் இரட்டைச் சதத்தால் தமிழ் யூனியனுக்கு வெற்றி வாய்ப்பு

கொழும்பு NCC மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் கடைசி நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த SSC அணி 304 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. பந்துவீச்சில் சச்சித்ர சேரசிங்க 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இதன் மூலம் தமிழ் யூனியன் கழகத்திற்கு 90 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டதோடு அந்த இலக்கை 2 விக்கெட்டுகளை இழந்து அவ்வணியால் எட்ட முடிந்தது.

சச்சித்ர சேரசிங்க முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களை பெற்றார். அவர் கடந்த 7 இன்னிங்சுகளில் 4 சதங்களை பெற்றிருப்பதோடு இம்முறை மேஜர் பிரீமியர் லீக் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்றவராகவும் முன்னேற்றம் கண்டுள்ளார். எனினும் 31 வயதான சச்சித்ர சேரசிங்கவுக்கு இலங்கை அணியில் இதுவரை இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

SSC (முதல் இன்னிங்ஸ்) – 321 (86.1) – கௌஷால் சில்வா 65, தம்மிக்க பிரஸாத் 50, கிறிஷான் ஆரச்சிகே 48, ரமித் ரம்புக்வெல்ல 5/89, தமித்த சில்வா 3/33,

தமிழ் யூனியன் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 536 (133.3) – சச்சித்ர சேரசிங்க 204, ரமித் ரம்புவெல்ல 124, லஹிரு மிலன்த 56, தரங்க பரணவிதான 47, ஆகாஷ் சேனாரத்ன 4/73, கசுன் மதுஷங்க 2/82

SSC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 304 (88.2) – சந்துன் வீரக்கொடி 68, கிறிஷான் ஆரச்சிகே 54, கௌஷால் சில்வா 46, சச்சித்ர சேரசிங்க 5/48, ஷெஹான் மதுஷங்க 3/107, ரமித் ரம்புக்வெல்ல 2/60

தமிழ் யூனியன் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 90/2 (11.3) – லஹிரு மிலன்த 43, சச்சித்ர சேரசிங்க 25

முடிவு – தமிழ் யூனியன் கழகம் 8 விக்கெட்டுகளால் வெற்றி

NCC எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

NCC அணி நிர்ணயித்த சவாலான வெற்றி இலக்கை எட்டிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

CCC மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கோல்ட்ஸ் அணிக்கு 356 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் 146 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதோடு மத்திய வரிசையில் அணித்தலைவர் பிரியமால் பெரேரா பொறுப்புடன் ஆட்டமிழக்காது 87 ஓட்டங்களை பெற்று வெற்றியை உறுதி செய்து கொண்டது.

>>ஒருநாள் அரங்கில் கோஹ்லியின் சாதனையை முறியடித்த ஹசிம் அம்லா

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 251 (56.1) – லஹிரு உதார 85, நிமேஷ் குணசிங்க 44, அகில தனஞ்சய 5/72, ஜெஹான் டானியல் 2/46

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 298 (111.2) – ஜெஹான் டானியல் 67, நிஷான் மதுஷ்க 67, பிரியமால் பெரேரா 51, சச்சின்த பீரிஸ் 4/87, லசித் எம்புல்தெனிய 4/101

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 402/9d (108) – மாலிங்க அமரசிங்க 107*, சாரங்க ராஜகுரு 78, ஹிசித்த போயகொட 66, சங்கீத் குரே 4/111, அகில தனஞ்சய 2/103

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 356/6 (94.1) – சங்கீத் குரே 88, பிரியமால் பெரேரா 87*, ஹஷான் துமிந்து 58, விஷாத் ரந்திக்க 58, நிமேஷ் குணசிங்க 4/57, சச்சின்த பீரிஸ் 2/104

முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுகளால் வெற்றி

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ்

இரண்டாவது இன்னிங்சுக்கு பலோ ஒன் (follow on) செய்த சிலாபம் மேரியன்ஸ் அணி கடைசி நாள் முழுவதும் நிதானமாக துடுப்பெடுத்தாடி சரசென்ஸ் அணியுடனான போட்டியை வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடித்துக் கொண்டது.

SSC மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 212 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையிலேயே சிலாபம் மேரியன்ஸ் அணி இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. எனினும் மத்திய வரிசையில் வந்த ஓஷத பெர்னாண்டோ 105 ஓட்டங்களை பெற்றார்.

இதன் மூலம் கடைசி நாள் ஆட்ட நேர முடிவின் போது தனது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடிய சிலாபம் மேரியன்ஸ் கழகம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 329 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் சுருக்கம்

சரசென்ஸ் விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 524 (165.1) – பிரமோத் மதுவன்த 217, கமிந்து கனிஷ்க 109, நிபுன் கருணாநாயக்க 80, ஹரீன் வீரசிங்க 29, நிமேஷ் விமுக்தி 4/92, சாகர் பரேஷ் 4/129, சதுரங்க குமார 2/84

சிலாபம் மேரியன்ஸ் (முதல் இன்னிங்ஸ்) – 312 (87.5) – யசோத லங்கா 109, ஓஷத பெர்னாண்டோ 65, நிமேஷ் விமுக்தி 51, ஹரீன் வீரசிங்க 5/90, மொஹமட் டில்ஷான் 2/59,

சிலாபம் மேரியன்ஸ் (முதல் இன்னிங்ஸ்) F/O – 329 (98) – ஓஷத பெர்னாண்டோ 105, ரிசித் உபமால் 72, புலின தரங்க 37, சாமிக்கர எதிரிசிங்க 3/115, மொஹமட் டில்ஷாட் 2/25

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது

>>அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து நுவன் பிரதீப் நீக்கம்

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் எதிர் CCC

பீ சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இராணுவப்படை அணிக்கு எதிராக CCC அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இரண்டாவது இன்னிங்ஸில் 9 பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய CCC அணி இராணுவப்படை கிரிக்கெட் கழகத்தை 306 ஓட்டங்களுக்கு சுருட்டியது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 138 ஓட்ட வெற்றி இலக்கை CCC அணி 4 விக்கெட்டுகளை இழந்து எட்டியது.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 295 (105.3) – லக்ஷான் எதிரிசிங்க 61, ஹிமேஷ லியனகே 44, டில்ஷான் டி சொய்ஸா 40, மலிந்த புஷ்பகுமார 6/107, லஹிரு மதுஷங்க 2/32

CCC (முதல் இன்னிங்ஸ்) – 464 (123.5) – அஷேன் பிரியன்ஜன் 180, வனிந்து ஹசரங்க 97, சொனால் தினூஷ 40, துஷான் விமுக்தி 6/135, ருச்சிர தரிந்திர 2/123

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 306 (91.2) – ஹிமேஷ லியனகே 72, சஞ்சிக்க ரித்ம 61, லக்ஷான் எதிரிசிங்க 42, மலிந்த புஷ்பகுமார 3/113, வனிந்து ஹசரங்க 3/40   

CCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 143/4 (24.3) – வனிந்து ஹசரங்க 60*, மாதவ வர்ணபுர 31*, நுவன் லியனபத்திரணகே 2/28

முடிவு – CCC 6 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<