சிலாபம் மேரியன்ஸிற்கு வெற்றி தேடித்தந்த இந்திய வீரர் சாகர் பரேஷ்

280

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல் தர கிரிக்கெட் தொடரின் நான்கு ’சுப்பர் 8’ போட்டிகளின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று (02) நிறைவடைந்தன.

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் CCC

கொழும்பு, கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான இப்போட்டியில் சாகர் பரேஷின் அதிரடி பந்துவீச்சு மூலம் CCC அணிக்கு எதிரான போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

போட்டியின் மூன்றாவது நாளான இன்று CCC அணிக்கு 271 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் நின்றுபிடித்து துடுப்பாடி அந்த அணியின்  வெற்றி வாய்ப்பை அதிகரித்தனர். வனிந்து ஹசரங்க 77 ஓட்டங்களை பெற்றார்.

NCC அணிக்கு கைகொடுத்த அஞ்சலோ பெரேராவின் இரட்டைச்சதம்

CCC அணி ஒரு கட்டத்தில் 200 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஸ்திரமான நிலையிலேயே இருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து மேலும் 56 ஓட்டங்களை பெறுவதற்குள் எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது.

இதன் போது இந்தியாவைச் சேர்ந்த சாகர் பரேஷ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் அவர் மொத்தம் 11 விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 186 (48.2) – ஓஷத பெர்னாண்டோ 52, ரிசித் உபமால் 36, லஹிரு மதுஷங்க 6/51, மலிந்த புஷ்பகுமார 3/84

CCC (முதல் இன்னிங்ஸ்) – 206 (60.3) – லஹிரு மதுஷங்க 51*, மினோத் பானுக்க 40, அஷான் பிரியன்ஜன் 22, சாகர் பரேஷ் 5/38, திக்‌ஷில டி சில்வா 3/99

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 290 (83.2) – யஷோத லங்கா 89, ஹர்ஷ குரே 80, ரிசித் உபமால் 53, மலிந்த புஷ்பகுமார 2/84, லஹிரு மதுஷான் 2/50, வனிந்து ஹசரங்க 2/57, அஷான் பிரியன்ஜன் 2/36

CCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 256 (68.4) – வனிந்து ஹசரங்க 77, மனெல்கர் டி சில்வா 39, லசித் அபேரத்ன 39, அஷான் பிரியன்ஜன் 35, சாகர் பரேஷ் 6/110, திக்‌ஷில டி சில்வா 2/68, நிமேஷ் விமுக்தி 2/66

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் 14 ஓட்டங்களால் வெற்றி


NCC எதிர் SSC

முதல் இன்னிங்ஸில் பின்தங்கிய NCC அணி பத்தும் நிஸ்ஸங்கவின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 121 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவின் போது சிறப்பாக ஆடிவரும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்காது 90 ஓட்டங்களுடன் சதத்தை நெருங்கியுள்ளார்.

கொழும்பு, பி. சரா ஓவல் மைதானத்தில்  நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இன்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த SSC அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 480 ஓட்டங்களை பெற்றது.

பெளன்சர் பந்து தாக்குதலுக்கு உள்ளான கருணாரத்ன வைத்தியசாலையில்

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 444 (103.3) – அஞ்செலோ பெரேரா 201, பத்தும் நிஸ்ஸங்க 95, லசித் அம்புல்தெனிய 26, தம்மிக பிரசாத் 3/86, ஆகாஷ் சேனாரத்ன 3/91, தரிந்து ரத்னாயக்க 2/99

SSC (முதல் இன்னிங்ஸ்) – 480 (129) – சதுன் வீரக்கொடி 189, சச்சித்ர சேனநாயக்க 89*, கிறிஷான் ஆராச்சிகே 48, கவிந்து குலசேகர 46, லசித் எம்புல்தெனிய 4/86, அசித்த பெர்னாண்டோ 3/98

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 157/3 (35) – பத்தும் நிஸ்ஸங்க 90*, அஞ்செலோ பெரேரா 38*, தம்மிக்க பிரஸாத் 2/15


இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

கமிந்து கனிஷ்க மற்றும் நிபுன் கருணாநாயக்க 6 ஆவது விக்கெட்டுக்கு பெற்ற 190 ஓட்ட இணைப்பாட்டத்தின் மூலம் இராணுவ அணிக்கு எதிரான போட்டியில் சரசென்ஸ் கழகம் வலுவான நிலையை எட்டியுள்ளது.

>>Photos: Army SC v Saracens SC – Major Super 8s Tournament 2018/19

கட்டுநாயக்க, சுதந்திர வர்த்தக வலயத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் இன்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த சரசென்ஸ் அணி 516 ஓட்டங்களை பெற்றது. இதன் போது கனிஷ்க 141 ஓட்டங்களை பெற்றதோடு கருனாநாயக்க 129 ஓட்டங்களை குவித்தார்.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில்166 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் மூன்றாவது நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இராணுவ விளையாட்டுக் கழகம் ஆட்ட நேர முடிவின்போது விக்கெட் இழப்பின்றி 37 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 350 (98.5) – ஹிமேஷ லியனகே 116, டில்ஷான் டி சொய்ஸா 101, சஞ்ஜிக்க ரித்ம 56, சச்சித்ர பெரேரா 3/42, ரனித்த லியனாரச்சி 3/61, சாமிக்கர எதிரிசிங்க 3/81,

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 516 (155.1) – கமிந்து கனிஷ்க 141, நிபுன் கருனாநாயக்க 129, சாமிக்கர எதிரிசிங்க 65*, அண்டி சொலமன்ஸ் 62, துஷ்மன்த விமுக்தி 4/137, டில்ஷான் டி சொய்ஸா 2/92  

இராணுவ விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 37/0 (12)


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

கொழும்பு, SSC மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் தமிழ் யூனியன் அணியை 315 ஓட்டங்களுக்கு சுருட்டிய கோல்ட்ஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸிற்காக 615 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கும் கோல்ட்ஸ் அணி மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவின்போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கனிஷ்ட கிரிக்கெட் தெரிவுக் குழுவில் பர்விஸ் மஹ்ரூப்புக்கு முக்கிய பதவி

இதன் மூலம் கோல்ட்ஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 441 ஓட்டங்களால் முன்னிலை பெற்று சவாலான வெற்றி இலக்கை நிர்ணயிக்க காத்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்)615 (154.2) – அவிஷ்க பெர்னாண்டோ 223, சங்கீத் குரே 142, ஹஷான் துமிந்து 70, ஜெஹான் டானியல் 61, நிசல தாரக்க 38, ஜீவன் மெண்டிஸ் 4/192, கமிந்து மெண்டிஸ் 2/53

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 315 (84.1) – ஜீவன் மெண்டிஸ் 105, மனோஜ் சரத்சந்திர 87, சிதார கிம்ஹான 50, ஜெஹான் டானியல் 3/36, பிரவீன் ஜயவிக்ரம 3/35, தனஞ்சய லக்‌ஷான் 2/34

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 141/3 (26) – அவிஷ்க பெர்னாண்டோ 65, சங்கீத் குரே 31*  

மூன்று போட்டிகளின் நான்காவது மற்றும் இறுதி நாள் ஆட்டம் நாளை தொடரும்.