கமிந்து கனிஷ்கவின் சதத்தால் சரசென்ஸ் வலுவான நிலையில்

168

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையே ஒழுங்கு செய்து நடாத்தும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல் தர கிரிக்கெட் தொடரின் 4 சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள இன்று (17) ஆரம்பமாகின.

SSC எதிர் தமிழ் யூனியன் கழகம்

கொழும்பு, NCC மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் தமிழ் யூனியன் அணிக்கு எதிராக SSC முதல் இன்னிங்ஸில் ஸ்திரமான ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்ட வீரர்களின் உதவியை எதிர்பார்க்கும் தினேஷ் சந்திமால்

SSC அணியின் ஆரம்ப வரிசை வீரர்கள் நிதானமாக துடுப்பெடுத்தாடினர். ஆரம்ப வீரர் கௌஷால் சில்வா 65 ஓட்டங்களை பெற்றதோடு பின் வரிசையில் வந்த அணித்தலைவர் தம்மிக்க பிரசாத் 50 ஓட்டங்களை பெற்றார். இதன்படி அந்த அணி முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 321 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் சுருக்கம்

SSC (முதல் இன்னிங்ஸ்) – 321 (86.1) – கௌஷால் சில்வா 65, தம்மிக்க பிரசாத் 50, கிறிஷான் ஆரச்சிகே 48, சச்சித்ர சேனநாயக்க 47, ரமித் ரம்புக்வெல்ல 5/89, தமித்த சில்வா 3/33

தமிழ் யூனியன் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 2/0 (1)


சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

கமிந்து கனிஷ்கவின் சதத்தின் உதவியோடு சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் துடுப்பாடிவரும் சரசென்ஸ் அணி வலுவான நிலையில் உள்ளது.

SSC மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் முதல் இன்னிங்சை ஆடும் சரசென்ஸ் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 258 ஓட்டங்களை பெற்றுள்ளது. கனிஷ்க 109 ஓட்டங்களை பெற்றார். பிரமோத் மதுவன்த 93 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார்.

போட்டியின் சுருக்கம்

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 258/3 (90) – கமிந்து கனிஷ்க 109, பரமோத் மதுவன்த 93*, நிமேஷ் விமுக்தி 2/51


NCC எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

கொழும்பு CCC மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கும் கோல்ட்ஸ் அணி ஆரம்ப விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Photo Album – NCC v Colts CC – Major Super 8s Tournament 2018/19

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய NCC அணி 251 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அகில தனஞ்சய 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கோல்ட்ஸ் அணி 56 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

பந்துவீச்சு, துடுப்பாட்டம் இரண்டிலும் சிறந்த ஆரம்பத்தை பெற்ற இலங்கை

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 251 (56.1) – லஹிரு உதார 85, நிமேஷ குணசிங்க 44, பத்தும் நிசங்க 35, அகில தனஞ்சய 5/72, ஜெஹான் டானியல் 2/46  

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 56/4 (31) – ஜெஹான் டானியல் 28*


இராணுவப்படை கிரிக்கெட் கழகம் எதிர் CCC

CCC அணிக்கு எதிராக மிக நிதானமாக துடுப்பெடுத்தாடி வரும் இராணுவப்படை அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடியும் வரை களத்தில் இருந்து 227 ஓட்டங்களை பெற்றுள்ளது.  

Photo Album – Army SC v CCC – Major Super 8s Tournament 2018/19

பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் இராணுவப்படை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லக்ஷான் எதிரிசிங்க 101 பந்துகளில் 61 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 227/7 (90) – லக்ஷான் எதிரிசிங்க 61, ஹிமாஷ லியனகே 44, டில்ஷான் டி சொய்ஸா 40, மலிந்த புஷ்பகுமார 3/78, லஹிரு மதுஷங்க 2/25  

அனைத்து போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க