ரொஷேன் சில்வா, தசுன் சானக்கவின் அபாரத்தோடு மீண்ட காலி அணி

996

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாகவும்  ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மாகாண அணிகளுக்கு இடையிலான “சுபர் – 4″ என்னும் பெயரிலான முதல்தர கிரிக்கெட் தொடர் இன்று (30) ஆரம்பமாகியிருந்தது.

நான்கு நாட்கள் கொண்ட போட்டியாக அமைந்துள்ள இந்த தொடரில் கொழும்பு, கண்டி, தம்புள்ளை மற்றும் காலி ஆகிய நான்கு அணிகள் பங்கேற்கின்றன.

மாகாணங்களுக்கு இடையிலான கிரிக்கெட் திருவிழா புதுப்பொழிவுடன்

இலங்கை அணிக்கு திறமையான வீரர்களை உள்வாங்கும் நோக்கில் இலங்கை கிரிக்கெட்…….

தேசிய அணி வீரர்களோடு சேர்த்து உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை  இனங்காணும் ஒரு சந்தர்ப்பமாக அமைகின்ற இத்தொடரின் முதல் நாளான இன்று துடுப்பாட்ட வீரர்களின் சுவர்க்கமாக அமைந்திருந்தது.

இன்றைய நாளில் துடுப்பாட்ட வீரர்களினால் அபாரமான இரண்டு சதங்களும், மூன்று அரைச்சதங்களும் பெறப்பட்டிருந்தன.

கண்டி எதிர் தம்புள்ளை

மாகாண அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் முதலாவது ஆட்டமாக அமைந்த இப்போட்டி கட்டுநாயக்கவின் சுதந்திர வலய மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த தம்புள்ளை அணியின் தலைவர்  திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார்.  இதனையடுத்து நிரோஷன் திக்வெல்ல தலைமையிலான கண்டி அணிக்கு எதிராக தம்புள்ளை அணியின் குசல் மெண்டிஸ், அணித்தலைவர் திமுத் கருணாரத்ன ஆரம்ப வீரர்களாக களத்தில் நுழைந்திருந்தனர்.

எனினும், இலங்கை அணியின் இளம் நட்சத்திர வீரர் மெண்டிஸ் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து துரதிஷ்டவசமாக வெளியேறினார். இதனை அடுத்து மூன்றாம் இலக்கத்தில் ஆடவந்த நிபுன் கருணாநாயக்கவும் ஜொலிக்கவில்லை.

இருந்தபோதிலும், புதிய துடுப்பாட்ட வீரராக வந்த அஷான் பிரியன்ஞனுடன் இணைந்த திமுத் கருணாரத்தன அரைச்சதம் ஒன்றினை கடந்து அணியின் ஓட்டங்களை உயர்த்தினார். இதனால் தம்புள்ளை அணி வலுவான நிலை ஒன்றை அடைந்து கொண்டது. கருணாரத்னவின் விக்கெட்டினை அடுத்து களம்நுழைந்த வீரர்கள் சொதப்பலாக இருந்தாலும் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான மனோஜ் சரசந்திர பிரியன்ஞனுக்கு ஓட்டங்கள் சேர்க்க ஏற்ற ஜோடியாக அமைந்தார். இரண்டு வீரர்களும் ஆறாம் விக்கெட்டுக்காக 98 ஓட்டங்களினை இணைப்பாட்டமாக பகிர்ந்த நிலையில் அஷான் பிரியஞ்சன் தன்னுடைய 9 ஆவது முதல்தர சதத்தினை பூர்த்தி செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் குழாமில் மஹேலவுடன் இணைந்த மாலிங்க

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக.. இந்திய கிரிக்கெட் சபையினால் 11ஆவது தடவையாகவும்………

தம்புள்ளை அணியின் ஆறாம் விக்கெட்டாக 72 பந்துகளுக்கு 9 பெளண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களினை குவித்திருந்த சரசந்திர ஓய்வறை நடந்திருந்தார். எனினும், அஷான் பிரியன்ஞனுக்கு சசித்ர சேனநாயக்க மீண்டும் கைகொடுக்க, முதல் நாள் நிறைவில் 90 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தம்புள்ளை அணி முதல் இன்னிங்சுக்காக 382 ஓட்டங்களை குவித்து மிகவும் வலிமையான நிலையில் காணப்படுகின்றது.

களத்தில் 151 ஓட்டங்களுடன் அஷான் பிரியன்ஞனும், சசித்ர சேனநாயக்க 29 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர். இருவரும் 8ஆம் விக்கெட் இணைப்பாட்டமாக 84 ஓட்டங்களினை பகிர்ந்திருக்கின்றனர்.

கண்டி அணியின் பந்துவீச்சில் வலதுகை வேகப்பந்து வீச்சாளரான கசுன் ராஜித மூன்று விக்கெட்டுக்களை இன்றைய நாளில் கைப்பற்றியிருந்தார்.

முதல் நாள் சுருக்கம்









Title





Full Scorecard

Team Dambulla's 1 st Inning

Team Dambulla

480/10 & 256/10

(65.5 overs)

Result

Team Kandy

364/10 & 221/2

(56.2 overs)

Match Drawn

Team Dambulla’s 1st Innings

Batting R B
D. Karunaratne lbw by Kasun Rajitha 71 108
BKG Mendis b Kasun Rajitha 8 10
Nipun Karunanayake c Kasun Rajitha b Chamika Karunaratne 6 26
A. Priyanjan c Charith Asalanka b Lahiru Kumara 156 239
Sachithra Serasinghe c Niroshan Dickwella b Kasun Rajitha 0 1
M. Siriwardana b Lahiru Kumara 6 10
M. Sarathchandra lbw by Prabath Jayasuriya 57 72
Ishan Jayaratne c Charith Asalanka b Jeewan Mendis 35 28
S. Senanayake c Minod Bhanuka b Chamika Karunaratne 105 109
J.Vandersay not out 9 39
L. Gamage c Charith Asalanka b Lahiru Kumara 5 21
Extras
22
Total
480/10 (109.4 overs)
Fall of Wickets:
1-16, 2-59, 3-129, 4-137, 5-145, 6-243, 7-298, 8-389, 9-474, 10-480
Bowling O M R W E
L. Kumara 22.4 1 105 3 4.69
Kasun Rajitha 22 4 89 3 4.05
C. Karunaratne 12 0 80 2 6.67
P. Jayasuriya 32 1 94 1 2.94
C. Asalanka 9 1 39 0 4.33
J. Mendis 12 1 59 1 4.92

Team Kandy’s 1st Innings

Batting R B
T. Paranawithana c Dimuth Karunaratne b Lahiru Gamage 6 40
M Udawatte c Manoj Sarathchandra b Sachithra Serasinghe 97 169
C. Asalanka (runout) Sachithra Senanayake 30 71
N. Dickwella c Manoj Sarathchandra b Lahiru Gamage 112 154
Priyamal Perera b Lahiru Gamage 62 118
J. Mendis c Sachithra Serasinghe b Sachithra Senanayake 6 19
C. Karunaratne lbw by Lahiru Gamage 0 5
P. Jayasuriya c Dimuth Karunaratne b Lahiru Gamage 0 10
L. Kumara c Lahiru Gamage b Sachithra Serasinghe 6 24
Kasun Rajitha not out 5 18
Extras
40
Total
364/10 (104.2 overs)
Fall of Wickets:
1-35, 2-110, 3-186, 4-318, 5-340, 6-340, 7-340, 8-345, 9-364, 10-364
Bowling O M R W E
L. Gamage 26 6 71 5 2.73
Ishan Jayaratne 14 0 55 0 3.93
S. Senanayake 32 10 91 1 2.84
D. Karunaratne 3 0 7 0 2.33
Sachithra Serasinghe 16.2 0 39 2 2.41
A. Priyanjan 2 0 18 0 9.00
M. Siriwardana 3 0 14 0 4.67
J.Vandersay 8 1 35 0 4.38








காலி எதிர் கொழும்பு

தொடரின் இரண்டாவது ஆட்டமாக அமைந்திருந்த இப்போட்டியில் ஹம்பந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. இந்த மோதலில், தசுன் ஷானக்க தலைமையிலான காலி அணி  நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தது.

இதனையடுத்து இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் தலைமையிலான கொழும்பு அணியினை எதிர்த்து காலி வீரர்கள் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடங்கினர்.

துடுப்பாட்டத்தினை தொடங்கிய காலி அணிக்கு வெறும் 20 வயதேயான வேகப்பந்து வீச்சாளர் கவிஷ்க அஞ்சுல அச்சுறுத்தல் தந்தார். இதனால், முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களினை மிகவும் விரைவாக இழந்த காலி அணி 22 ஓட்டங்களுக்கு  4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

பாக். மகளிரை இலகுவாக வெற்றி கொண்ட இலங்கை மகளிர் அணி

Related Articles முதல் T20யில் இலங்கை மகளிர் அணியை போராடி வென்றது …….

இந்நிலையில் களத்தில் அணித் தலைவர் தசுன் ஷானக்க மற்றும் ரொஷேன் சில்வா ஆகியோர் நின்றிருந்தனர். தமது தரப்பின் இக்கட்டான நிலை அறிந்து செயற்பட்ட இந்த இரண்டு வீரர்களினதும் பொறுமையான ஆட்டத்தினால் காலி அணி சரிவிலிருந்து மீண்டு கொண்டது.

எதிரணியின் அழுத்தம் நிறைந்த பந்துவீச்சினை சதூர்யமான முறையில் எதிர்கொண்ட இரண்டு வீரர்களும் அட்டகாசமான முறையில் ஐந்தாம் விக்கெட்டுக்காக 202 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுத்தந்தனர். காலி அணியினை மீட்க உதவிய தசுன் ஷானக்க ஐந்தாம் விக்கெட்டாக ஆட்டமிழந்து 8 பெளண்டரிகள் அடங்கலாக 92  ஓட்டங்களுடன் சதம் கடக்க தவறியிருந்த போதிலும், இலங்கை அணியின் புதிய நம்பிக்கையான ரொஷேன் சில்வா தனது கிரிக்கெட் புத்தகத்தில் 21 ஆவது முதல்தர சதத்தினை குறித்துக் கொண்டார்.

இதனையடுத்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்த காலி அணி, முதல் நாள் நிறைவில் 87 ஓவர்களுக்கு 6  விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை முதல் இன்னிங்சில் குவித்துள்ளது.

ரொஷேன் சில்வா 146 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் நிற்க முதல் நாளில் இறுதி விக்கெட்டாக ஓய்வறை நடந்திருந்த சத்துரங்க டி சில்வா 47 ஓட்டங்களுடன் காலி அணிக்கு பெறுமதி சேர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாளுக்கான கொழும்பு அணியின் பந்துவீச்சில் தில்ருவான் பெரேரா மற்றும் கவிஷ்க அஞ்சுல ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

முதல் நாள் சுருக்கம்









Title





Full Scorecard

Team Galle's 2nd Inning

Team Colombo

333/10 & 0/0

(0 overs)

Result

Team Galle

476/10 & 177/3

(56 overs)

Match Drawn

Team Colombo’s 1st Innings

Batting R B
Kaushal Silva b Mohomed Dilshad 13 26
Shehan Jayasuriya c Oshada Fernando b Nisala Tharaka 8 17
D.De.Silva lbw by Mohomed Dilshad 66 59
Lahiru Thirimanne not out 125 258
LD Chandimal c Sadeera Samarawickrama b Akila Dananjaya 18 30
Chamara Silva b Akila Dananjaya 10 25
Dilruwan Perera c Madawa Warnapura b Akila Dananjaya 0 1
Kavishka Anjula c Sadeera Samarawickrama b Dasun Shanaka 46 57
L. Embuldeniya lbw by Chathuranga de Silva 24 95
V. Fernando c Sadeera Samarawickrama b Chathuranga de Silva 0 10
Extras
23
Total
333/10 (95.5 overs)
Fall of Wickets:
1-21, 2-25, 3-117, 4-149, 5-171, 6-171, 7-250, 8-331, 9-333
Bowling O M R W E
Nisala Tharaka 17 2 66 1 3.88
Mohomed Dilshad 15 4 49 2 3.27
MD Shanaka 15 2 62 1 4.13
M. Pushpakumara 18 1 55 0 3.06
A Dananjaya 22 2 61 3 2.77
PC de Silva 8.5 1 22 2 2.59

Team Galle’s 1st Innings

Batting R B
M.Warnapura b Lasith Embuldeniya 18 39
L.Milantha (runout) Kaushal Silva 0 0
Oshada Fernando c Dushmantha Chameera b Kavishka Anjula 0 7
S.Samarawickrama c Lasith Embuldeniya b Kavishka Anjula 1 10
R. Silva not out 231 392
MD Shanaka b Dilruwan Perera 95 157
PC de Silva c Vishwa Fernando b Dilruwan Perera 47 63
Nisala Tharaka b Lasith Embuldeniya 20 36
A Dananjaya (runout) Lahiru Thirimanne 24 84
M. Pushpakumara b Vishwa Fernando 19 47
Mohomed Dilshad c Kaushal Silva b Dilruwan Perera 4 16
Extras
17
Total
476/10 (141 overs)
Fall of Wickets:
1-0, 2-3, 3-10, 4-22, 5-224, 6-321, 7-370, 8-431, 9-461, 10-476
Bowling O M R W E
V. Fernando 23 2 88 1 3.83
Kavishka Anjula 17 5 52 2 3.06
Dushmantha Chameera 11 1 31 0 2.82
L. Embuldeniya 37 1 147 2 3.97
Dilruwan Perera 34 5 106 3 3.12
D.De.Silva 8 2 13 0 1.63
Shehan Jayasuriya 11 0 31 0 2.82







இரண்டு போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்