டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் இணைந்தார் சிக்கர் தவான்

432

ஐ.பி.எல். (IPL) தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், முன்னாள் தலைவருமான  சிக்கர் தவான், மீண்டும் அவரது சொந்த ஊர் அணியான டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

பெங்களூர் அணிக்கு புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் நியமனம்

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தலைமையில்

டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் இணைந்து 2008ஆம் ஆண்டு .பி.எல். பயணத்தை ஆரம்பித்த சிக்கர் தவான், மும்பை இந்தியன்ஸ், டெக்கன் சார்ஜஸ் அணிகளுக்காக விளையாடி, இறுதியில் 2013ஆம் ஆண்டு சன்ரைசஸ் ஹைதராபாத் அணியில் இணைந்தார். மொத்தமாக 143 .பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 32 அரைச்சதங்கள் அடங்கலாக 4,057 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக 91 போட்டிகளில் 2,768 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இந்நிலையில், சர்ரைசஸ் அணி .பி.எல். தொடரின் வீரர்கள் பரிமாறல் முறையின் கீழ், சிக்கர் தவானை டெல்லி அணிக்கு வழங்கிவிட்டு, டெல்லி அணியின் விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, சஹபாஷ் நதீம் ஆகியோரை தங்களது அணிக்குள் இணைத்துள்ளது.

இதுதொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள சன்ரைசஸ் அணி நிர்வாகம்,

எமது அணியில் நீண்ட காலமாக இணைந்திருந்த சிக்கர் தவான் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள .பி.எல். தொடரில் மற்றுமொரு அணிக்காக விளையாடவுள்ளார் என்பதை மன வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். கடந்த பருவகாலத்தில் எமது அணிக்காக தக்கவைக்கப்பட்ட சிக்கர் தவானின் ஊதியத் தொகை தொடர்பிலான சிக்கல்கள் காரணமாக அவர் எமது அணியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது இரண்டு தரப்பினருக்குமான (தவான் மற்றும் அணி நிர்வாகம்) சிக்கல்களை தீர்க்கும் வகையில், வர்த்தக பரிமாறல் மூலம் அவர் மற்றுமொரு அணிக்காக விளையாடவுள்ளார். அவர் எமது அணிக்காக வழங்கிய பங்களிப்பு மிகப்பெரிது. அவருக்கு எமது நன்றிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் டி-20 இலும் இந்தியாவிடம் வீழ்ந்தது மேற்கிந்திய தீவுகள்

குல்திப் யாதவ்வின் சுழலுக்கு முன் தடுமாற்றம் கண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்

கடந்த முறை நடைபெற்ற .பி.எல். ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, சிக்கர் தவானுக்கு 5.2 கோடி வழங்க முன் வந்து ஏலத்தில் வெற்றிபெற்றது. எனினும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியானது, அதே தொகைக்கு வீரர்களை தக்கவைக்கும் முறையின் கீழ், சிக்கர் தவானை தக்கவைத்துக்கொண்டது. எனினும் இந்த தொகையானது போதுமானதாக இல்லையென சிக்கர் தவான் குறிப்பிட்டதாக பல்வேறு செய்திகள் வெளிவந்திருந்தன. இவ்வாறான ஒரு நிலையிலேயே தற்போது சிக்கர் தவான் அணியிலிருந்து வெளியேறியுள்ளார்.

இதேவேளை, சிக்கர் தவான் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இணைந்துள்ளமையை, அந்த அணி தங்களது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க