டேவிட் வோர்னரின் தலைமையில் சாதிக்குமா சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்?

239
BCCI

இந்திய ப்ரீமியர் லீக் தொடரில் (IPL) இருக்கின்ற அதிக பலம் பொருந்திய அணிகளில் ஒன்றான சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியினர், இந்த ஆண்டுக்கான (2021) தொடரில் கடந்த முறை தவறவிட்ட கிண்ணத்தை கைப்பற்றும் ஒரே முனைப்பில் தயாராகி வருகின்றனர். 

முதல் போட்டி – எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஏப்ரல் 11, சென்னை)

IPL தொடரில் ஒரு தடவை மாத்திரம் சம்பியன் பட்டம் வென்றுள்ள டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரைஸர்ஸ் அணி, கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த IPL தொடரில் பிளே ஒப் சுற்றுக்கு முன்னேறியிருந்ததோடு, அந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பினை டெல்லி கெபிடல்ஸ் அணியிடம் மயிரிழையில் பறிகொடுத்தது. 

இம்முறையும் சம்பியன் கனவுகளுடன் றோயல் செலஞ்சர்ஸ்

ஆனாலும், சன்ரைஸர்ஸ் அணி கடந்த காலங்களில் வெற்றிகரமான தொகுதியொன்றாக உருவெடுக்க அதன் தலைவர் டேவிட் வோர்னரின் துடுப்பாட்டம் இருந்ததனை காரணமாகக் கூற முடியும். ஆனாலும், இந்த ஆண்டு சன்ரைஸர்ஸ் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை சுபர் கிங்ஸ் அணியினர் கடந்த பருவகாலத்தில் தொடர்ச்சியான மோசமான ஆட்டம் கருதி விடுவித்திருந்த கேதர் ஜாதவினை கொள்வனவு செய்திருந்தது. இந்த வீரர் கொள்வனவு அனைவருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியிருந்ததோடு ஜாதவ் மூலம் சன்ரைஸர்ஸ் அணி என்ன செய்யப்போகின்றது என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கின்றது.

பலம் 

இதேநேரம், சன்ரைஸர்ஸ் அணியினர் இந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் நட்சத்திரங்களில் ஒருவரான முஜிபுர் ரஹ்மானினையும் ஏலத்தில் கொள்வனவு செய்திருந்தனர். இந்த கொள்வனவுடன் சேர்த்து சன்ரைஸர்ஸ் அணி ரஷீட் கான், மொஹமட் நபி என ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் மூவருடனும் பலம் பெறுகின்றது. 

பந்துவீச்சு, துடுப்பாட்டம் என இரண்டு துறைகளிலும் எந்த நேரத்திலும் திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய முன்னணி வீரர்களை கொண்டிருப்பது சன்ரைஸர்ஸ் அணியின் பிரதான பலமாகும். 

அணித்தெரிவு 

தொடர் முழுவதுக்குமான சன்ரைஸர்ஸ் அணியின் முதல் பதினொருவர் அணியினை நோக்கும் போது அவ்வணியில் இடம்பெறும் பிரதான வீரர்களாக கேன் வில்லியம்சன், அணித்தலைவர் டேவிட் வோர்னர், ஜொன்னி பெயர்ஸ்டோவ், புவ்னேஸ்வர் குமார், T. நடராஜன் மற்றும் ரஷீட் கான் ஆகியோர் இருப்பர் என நம்பப்படுகின்றது. 

அதேநேரம், இந்த வீரர்கள் தவிர மனீஷ் பாண்டே, ஜேசன் ஹோல்டர், மொஹமட் நபி மற்றும் ரித்திமான் சஹா போன்ற வீரர்களும் சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணிக்கு மேலதிக பலம் சேர்க்க எதிர்பார்க்கப்படுகின்றது. 

முழுமையான அணிக்குழாம்

கேன் வில்லியம்சன், ஜொன்னி பெயர்ஸ்டோவ், டேவிட் வோர்னர், புவ்னேஸ்வர் குமார், மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், ஸ்ரீவோட்ஸ் கோட்ஸ்வாமி, ரஷீட் கான், மொஹமட் நபி, மிச்செல் மார்ஷ், ஜேசன் ஹோல்டர், ரித்திமான் சஹா, அபிஷேக் சர்மா, கலீல் அஹ்மட், சன்தீப் சர்மா, சித்தார்த் கெளல், சஹ்பாஷ் நதீம், பாசில் தம்பி, T. நடராஜன், விராட் சிங், ப்ரியம் கார்க், அப்துல் சமட், ஜகதீஷா சுஜித், கேதர் ஜாதவ், முஜிபுர் ரஹ்மான்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…