இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள Sunquick தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் நீர்கொழும்பு, பிறவுன்ஸ் கடற்கரை மைதானத்தில் வெள்ளிக்கிழமை (19) முதல் எதிர்வரும் 21ஆம் வரை நடைபெறவுள்ளது.
Sunquick நிறுவனத்தின் அனுசரணையுடன் நடத்தப்படுகின்ற இம்முறை தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 210 இற்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றவுள்ளன.
அத்துடன் ஆண், பெண் இருபாலாருக்குமாக நடைபெறுகின்ற இம்முறை போட்டித் தொடரானது 16, 19, 22 மற்றும் திறந்த பிரிவு ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் நடைபெறவுள்ளதுடன், முதல் தடவையாக 16 மற்றும் 19 வயதின் கீழ் பாடசாலை மட்ட விளையாட்டு வீரர்களுக்காக போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
- இலங்கை தேசிய கரப்பந்து அணியில் மலையக வீராங்கனை திலக்ஷனா
- தமிழ்நாடு இளையோர் கரப்பந்து அணியின் இலங்கை சுற்றுப்பயணம்
- மத்திய ஆசிய மகளிர் கடற்கரை கரப்பந்தாட்டத்தில் சம்பியானகிய இலங்கை
- இலங்கை கரப்பந்தாட்ட அணிக்கு மற்றுமொரு ஆசிய பதக்கம்
இதனிடையே, இம்முறை இம்முறை தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் திறந்த பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு 50 ஆயிரம் ரூபாவும், இரண்டாம் இடத்துக்கு 30 ஆயிரம் ரூபாவும், மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களுக்கு முறையே 25 ஆயிரம் மற்றும் 15 ஆயிரம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்படும்.
அதேபோல, 22 வயதின்கீழ் மற்றும் 19 வயதின்கீழ் பிரிவுகளில் வெற்றிபெறும் அணிக்கு 35 ஆயிரம் ரூபாவும், 16 வயதின்கீழ் பிரிவில் வெற்றிபெறும் அணிக்கு 25 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<