ஆஸியுடனான தோல்வியினால் மனம் தளர வேண்டாம்: பென் ஸ்டோக்ஸ்

521
©GETTY

இங்கிலாந்து அணி, நேற்று (25) லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் 64 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியிருந்தது.

உலகக் கிண்ண அரையிறுதிக்கு முதல் அணியாக தடம்பதித்த அவுஸ்திரேலியா

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 32 …..

இந்த தோல்வியினால் இங்கிலாந்து வீரர்களும், இரசிகர்களும் உலகக் கிண்ண கனவை கைவிட்டு விடக்கூடாது என இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் குறிப்பிட்டிருக்கின்றார்.

பென் ஸ்டோக்ஸ் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் அரைச்சதம் ஒன்றுடன் 89 ஓட்டங்கள் பெற்று போராடியும், இங்கிலாந்து அணி துரதிஷ்ட தோல்வியொன்றினை தழுவியது.

இதேநேரம், அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் தோல்வியினை தழுவிய காரணத்தினால் இங்கிலாந்து அணி இந்த உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற இனிவரும் போட்டிகளில் கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையும் காணப்படுகின்றது. 

“(இங்கிலாந்தில் நடைபெறுவதால்) இது எங்களது உலகக் கிண்ணம், கடந்த நான்கு வருடங்களாக நாங்கள் மிகச் சிறந்த ஆதரவினை பெற்றிருந்தோம். இந்த உலகக் கிண்ணம் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இரசிகர்களுக்கும், வீரர்களாகிய எங்களுக்கும் தெரியும்.” 

“தங்களது நாட்டினை உலகக் கிண்ணத்தில் பிரதிநிதித்துவம் செய்வது, கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு மிகப் பெரியதும், மிகச் சிறந்த தருணமும் ஆகும்.” என பென் ஸ்டோக்ஸ் போட்டியின் பின்னர் கருத்துக்களை பகிர்ந்திருந்தார். 

“ஆனால், (அவுஸ்திரேலிய அணியுடன் கிடைத்த தோல்வியினால்) நாங்கள் பின்வாங்கப் போவது கிடையாது. நான் முன்னர் கூறியபடி, இது எங்களது உலகக் கிண்ணம் நாங்கள் விரும்பியபடியே, இதற்காக (உலகக் கிண்ணம் வெல்வதற்காக)  உழைக்க வேண்டும்.”என்றார். 

இதேநேரம், பென் ஸ்டோக்ஸ் அவுஸ்திரேலிய அணியுடனான போட்டி மட்டுமின்றி, கடந்த வாரம் இடம்பெற்ற உலகக் கிண்ண லீக் போட்டி ஒன்றில் இலங்கை அணியுடனும் போராட்டமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். எனினும், ஸ்டோக்ஸ் 82 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த இலங்கை அணியுடனான போட்டியிலும் இங்கிலாந்து அணி தோல்வியினை தழுவியிருந்தது. இந்த தோல்விகள் பற்றியும் பென் ஸ்டோக்ஸ் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.

“தோல்வியடைவதனால், இது எனக்கு ஏமாற்றம் தருகின்றது என நினைக்கின்றேன். எல்லோரும் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்துவதன் மூலம் அணிக்கு வெற்றியினை பெற்றுக் கொடுப்பதனையே எதிர்பார்ப்பார்கள்.” 

“எல்லோரும் எமது கடைசி இரண்டு போட்டிகளிலும் கிடைத்த தோல்விகளால் வெளிப்படையாகவே மனமுடைந்து போய் இருக்கின்றனர். ஆனால், இது எங்களது உலகக் கிண்ணம் என்பது உங்களுக்கு தெரியும். இதனை நாங்கள் பெறுவதற்கு முயல்வதும் உங்களுக்குத் தெரியும். எனவே, நாங்கள் எங்களது சிறந்த விளையாட்டினை வெளிப்படுத்துவதை மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.”  

சாதனைகளுடனே இலங்கை இங்கிலாந்துக்கு எதிராக வெற்றியை பதிவு செய்தது

கடந்த 21ஆம் திகதி, உலகக் கிண்ண கிரிக்கெட் …….

இதேவேளை, கடந்த ஆண்டுகளில் இங்கிலாந்து அணி மிகவும் வெற்றிகரமாக மாறி, ஒருநாள் தரவரிசைகளில் முதலிடத்தில் இருக்கும் காரணத்தினையும் பென் ஸ்டோக்ஸ் கூறியிருந்தார்.

 “அது எங்களது மனநிலையின் காரணமாக என நினைக்கின்றேன். அதனாலேயே கடந்த நான்கு வருடங்களில் நாங்கள் மிகவும் வெற்றிகரமான அணியாக இருந்தோம். ஆனால், இரண்டு தொடர்ச்சியான தோல்விகள் உங்களுக்கு வேறுவிதமாக எண்ணங்களை விதைக்க முடியும். ஆனால், நாம் விளையாடும் விதத்தினை இனிவரும் காலங்களில் மாற்றப் போவதில்லை.” 

அதோடு பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணி இந்த உலகக் கிண்ணத்தில் இனி விளையாடப்போகும் போட்டிகளில் நம்பிக்கையுடன் இருக்கும் என்பதையும் உறுதி செய்திருந்தார்.

“எங்களுக்கு சில தருணங்களுக்கு ஏற்றவாறும் நிலைமைகளுக்கு ஏற்றவாறும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது, ஆனால் எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளில் நாம் ஒரு நிமிடம் கூட பின்வாங்கப் போவதில்லை.” 

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரமாக ஜொலிக்கவுள்ள அவிஷ்க பெர்னாண்டோ

இங்கிலாந்து அணிக்கு இன்னும் இரண்டு உலகக் கிண்ண லீக் போட்டிகள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றன. இந்த லீக் போட்டிகளில் இங்கிலாந்து அணி இந்த உலகக் கிண்ணத்தில் இதுவரையில் தோல்விகளையே சந்திக்காத இந்திய அணியுடனும், நியூசிலாந்து அணியுடனும் மோதவுள்ளது. 

இதில் இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் மோதும் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) பர்மிங்கம் நகரில் இடம்பெறவுள்ளது. நியூசிலாந்து அணியுடன் இங்கிலாந்து அணி எதிர்வரும் ஜூலை மாதம் 03ஆம் திகதி செஸ்டர்-லீ-ஸ்ரிட் மைதானத்தில் வைத்து மோதுகின்றது.

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<