சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய ஒழுக்க விதிமுறையை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ரோட் மீது ஐ.சி.சி போட்டி ஊதியத்திலிருந்து அபராத தொகை விதித்துள்ளதுடன் ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.
பென் ஸ்டோக்கிற்கு அபராதம் விதித்த ஐ.சி.சி
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை…
தென்னாபிரிக்க மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் விளையாடுகிறது. சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான டெஸ்ட் தொடர் (27) நிறைவுக்குவந்த நிலையில் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில் குறித்த போட்டியின் நான்காவது நாளான நேற்று முன்தினம் தென்னாபிரிக்க அணி 466 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடியது. இதில் தென்னாபிரிக்க அணித்தலைவர் பெப் டு பிளஸிஸ் 35 ஓட்டங்களை பெற்று பென் ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பெப் டு பிளஸிஸ் ஆட்டமிழப்பதற்கு முன்னர் களத்தில் துடுப்பெடுத்தாடி கொண்டிருக்கும் போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ரோட், பெப் டு பிளஸிஸுடன் முரண்பட்டார்.
இதன் போது மைதானத்தில் வைத்து ஸ்டுவர்ட் ப்ரோட் பெப் டு பிளஸிஸுக்கு தகாத வார்த்தைகளினால் திட்டியுள்ளார். பின்னர் நடுவர்கள் விரைந்து இருவரையும் சமாதானப்படுத்தினார். போட்டி நிறைவடைந்ததன் பின்னர் களநடுவர்களாக செயற்பட்ட ரொட் டக்கர், ஜொய்ல் வில்சன், மூன்றாம் நடுவர் ப்ரூஸ் ஒக்ஸன்பேர்ட் மற்றும் நான்காம் நடுவர் அலஹ்டீன் பலேகர் ஆகியோரினால் போட்டி மத்தியஸ்தரிடம் குறித்த நிகழ்வு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
தென்னாபிரிக்க அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது…..
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய விதிமுறையில் வீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நடத்தை கோட்பாடுகளை உள்ளடக்கும் இலக்கம் 2.3 இன் படி சர்வதேச போட்டியொன்றின் போது உபயோகிக்கக்கூடாத வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியதன் அடிப்படையில் ஸ்டுவர்ட் ப்ரோட் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி போட்டி மத்தியஸ்தரான அண்டி பைக்ரொப்ட் மூலமாக போட்டி ஊதியத்திலிருந்து 15 சதவீத தொகையும், ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் குறித்த சம்பவத்திற்காக தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 24 மாத காலப்பகுதியில் ஸ்டுவர்ட் ப்ரோட் இரண்டாவது தகுதி இழப்பீட்டு புள்ளியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நிறைவுக்குவந்த குறித்த இறுதி டெஸ்ட் போட்டியில் மாத்திரம் நான்கு முறை அபராதம் விதிக்கப்பட்ட நிகழ்வு பதிவாகியுள்ளது. ஒழுக்க விதிமுறை மீறலுக்காக பென் ஸ்டோக்ஸ், வேர்னன் பிளாண்டர் மற்றும் ஸ்டுவர்ட் ப்ரோட் ஆகியோருக்கும், குறைந்த பந்துவீச்சு பிரதி காரணமாக தென்னாபிரிக்க அணிக்கும் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<