கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் ஸ்டுவார்ட் புரோட்

277

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஸ்டுவார்ட் புரோட் ஆஷஸ் டெஸ்ட் தொடரினை அடுத்து தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தீடிர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.  

ஜப்னா கிங்ஸ் அணியில் 19 வயது இளம் வீரர் இணைப்பு

இங்கிலாந்துஅவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டி தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது 

இந்த நிலையில் நேற்று (29) இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்த நிலையில் ஸ்டுவார்ட் புரோட் தன்னுடைய 17 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுப்பதாக தீடிர் அறிவிப்பினை வெளியிட்டு அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றார் 

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் 600 விக்கெட்டுக்களுக்கு மேல் கைப்பற்றிய இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கும் ஸ்டுவார்ட் புரோட், ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுக்களுக்கு மேல் கைப்பற்றிய மூன்றாவது பந்துவீச்சாளராகவும் சாதனை செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

அதேநேரம் தற்போது 602 டெஸ்ட் விக்கெட்டுக்களுடன் காணப்படும் ஸ்டுவார்ட் புரோட் டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஐந்தாவது பந்துவீச்சாளராக ஓய்வு பெறவிருக்கின்றார். 

இதேவேளை ஏற்கனவே ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் பெற்ற ஸ்டுவார்ட் புரோட்  அதில் 178 விக்கெட்டுக்களையும், 56 T20I போட்டிகளில் ஆடி மொத்தமாக 65 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது 

தனது ஓய்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட புரோட், கடந்த இரண்டு வாரங்களாக ஓய்வு பற்றிய யோசனை தனக்கு காணப்பட்டிருந்ததாக குறிப்பிட்டதோடு இறுதியில் தான் அதிகம் விரும்பும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஊடாக இந்த முடிவினை அறிவித்திருப்பதாகவும் கூறியிருந்தார் 

WATCH – “ஒரு குடும்பமாக மீண்டும் கிண்ணத்தை வெல்ல தயார்” – வாகீசன்! | LPL 2023

தற்போது 37 வயதாகும் ஸ்டுவார்ட் புரோட் 2007ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் அறிமுகம் பெற்றதோடு, மொத்தமாக 167 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பின்னர் தனது ஓய்வினை அறிவித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<