உலகக் கிண்ணத்தை கண்ணீரோடு மெருகேற்றும் இத்தாலி

693

ரஷ்யாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியை வெல்லும் அணி அந்த கிண்ணத்தை தலைக்கு மேல் தூக்கிக் கொண்டாடும் காட்சியை ஜூலை மாதத்தில் பார்க்கத்தான் போகிறோம். ஆனால், உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் தகுதியை இழந்திருக்கும் இத்தாலிக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்க வாய்ப்பே இல்லை. என்றாலும், இத்தாலிக்கும் உலகக் கிண்ணத்திற்குமான உறவு இம்முறை போட்டிகளிலும் தொடர்கிறது.

காயத்திலிருந்து மீண்டு வரும் நெய்மார் பிரேசில் உலகக் கிண்ண குழாமில்

காயத்தில் இருந்து மீண்டு வரும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழக அணியின் …

நான்கு முறை உலகக் கிண்ணத்தை வென்ற இத்தாலி கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் பிளே ஓப் (Playoff) போட்டியில் சுவீடனிடம் தோற்று. 1958 ஆம் ஆண்டுக்கு பின்னர் இத்தாலியால் உலகக் கிண்ணத்தில் ஆட முடியாமல் போவது இதுவே முதல்முறை.  

இத்தாலி உலகக் கிண்ணம் செல்லாது, ஆனால் உலகக் கிண்ணம் இத்தாலியை நோக்கி வரும்.

மிலான் நகருக்கு அருகில் இருக்கும் எந்த அடையாளமும் அற்ற கட்டடம் ஒன்றில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகக் கிண்ணத்தை மெருகேற்றுவதை பார்க்கலாம். அந்த இத்தாலிய நிறுவனத்தில் உலோக தூசிக்கு மத்தியில் அசல் உலகக் கிண்ணத்தை சுத்தியலால் அறையும் சத்தங்கள் கேட்கும்.

1970 ஆம் ஆண்டு பிரேசில் அணி மூன்றாவது முறையாகவும் உலகக் கிண்ணத்தை வென்றதை அடுத்து அசல் உலகக் கிண்ண பிரேசில் அணியிடமே நிரந்தரமாக வழங்கப்பட்டது. இதனை அடுத்தே 1971 ஆம் ஆண்டு மிலான் புறநகர் பகுதியான பாடெர்னோ டுக்னானோவில் 12 ஊழியர்களை கொண்ட ஜி.டி.. பெர்டோனி என்ற சிறிய நிறுவனம் புதிய உலகக் கிண்ணத்தை வடிவமைத்து உருவாக்கியது.

நகல் கிண்ணத்தை நாம் ஒவ்வொரு நாளும் பார்க்கின்றபோதும் உண்மையான கிண்ணம் எம்மிடம் வரும்போது அந்த உணர்வே தனியானது என்கிறார் அந்த நிறுவனத்தின் இயக்குனரான வலன்டினா லோசா. இவரது பூட்டனாரே 1938 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார்.  

FIFA உலகக் கிண்ண குழு நிலை அணிகள் அறிவிப்பு

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் 2010 …

இந்த கிண்ணம், நிறுவனத்தின் அப்போதைய கலை இயக்குனரும் சிற்பியுமான சில்வியோ கஸ்ஸானிகாவால் உருவாக்கப்பட்டது. அதற்கு வலன்டினாவின் தந்தை ஜியோர்ஜியோவும் உதவினார். அவரே கிண்ணத்தின் உச்சியில் உலக உருண்டையை வைக்க ஆலோசனை வழங்கினார்.  

அசல், அசல் தான். இது சரியாக மோனாலிசா அல்லது அதன் பிரதி ஒன்றுக்கு இடையிலான வித்தியாசம் போன்றது. ஒருபோதும் அது ஒரே வகையான உணர்வை ஏற்படுத்தாது என்கிறார் லோசா வலன்டினா.

சொல்ல முடியாத உணர்வு

புதிய உலகக் கிண்ணத்தை 1974இல் முதல் முறை வென்று அதனை சுமந்த ஜெர்மனி அணித்தலைவர் ப்ரான்ஸ் பெக்கன்பேவரின் கையொப்பத்துடனான அவரது புகைப்படத்திற்கு முன்னால் நின்று கொண்டிருந்த லோசா, தமது நிறுவனத்திற்கு உலகக் கிண்ணத்தை உருவாக்க எவ்வாறு சந்தர்ப்பம் கிடைத்தது என்பதை ஞாபமூட்டுகிறார்.

உலகெங்கும் இருந்து 53 விண்ணப்பங்கள் வந்தபோதும் நாம் மாத்திரமே மாதிரி கிண்ணம் ஒன்றை வழங்கி இருந்தோம் என்று விளக்கினார். வெறுமனே வரைபடமன்றி அது முன்னால் இருக்கும்போது தாக்கம் அதிகமாக இருக்கும் என்றார்.  

காணொளிகளைப் பார்வையிட…  

38 சென்டிமீற்றர் நீளம் கொண்ட ஆறு கிலோ கிராமுக்கு அதிக சுத்தமான தங்கம் மற்றும்  பச்சை நிற கனிமப்பொருளைக் உடைய இந்த  கிண்ணம் ஒவ்வொரு உலகக் கிண்ண போட்டிகள் நெருங்கும்போதும் மெருகேற்றுவதற்காக அதன் சொந்த நிறுவனத்திற்கு FIFA அனுப்புகிறது.

நான்கு ஆண்டுகள் உலகெங்கும் பயணிப்பதால் அதன் மூலப்பொருட்கள் வெளிப்பட ஆரம்பிக்கின்றன. அவை சிறு சேதங்களாக இருக்கும். நாம் அதனை சரியான வடிவத்திற்கு கொண்டு வருகிறோம் என்று உலகக் கிண்ணத்தை மெருகேற்றும் பணிகளில் ஈடுபடும் எட்டு சிறப்பு பணியாளர்களில் ஒருவரான பீட்ரோ பிரம்பில்லா குறிப்பிட்டார்.  

கால்பந்தில் அதிக ஆர்வம் காட்டாத பிரம்பில்லா, உலகக் கிண்ணத்தை வென்ற அணி அந்த கிண்ணத்தை உயர தூக்கும்போது அதிக உணர்ச்சிவசப்படுபவராக உள்ளார்.  

எனது கையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கிண்ணம் என்பதால் அந்த தருணத்தில் எப்போதும் எனது கண்ணில் இருந்து கண்ணீர் கொட்டும். அது சொல்ல முடியாத உணர்வு என்று குறிப்பிட்டார்.

தாம் உலகக் கிண்ணத்தை வென்றதாக அதிகமானவர்களுக்கு கூற முடியது என்கிறார் அவர்.

அசலும் நகலும்

உலகக் கிண்ணத்தை மெருகேற்றுவது மட்டுமன்றி பெர்டோனி நிறுவனம் நகல் உலகக் கிண்ணத்தையும் உருவாக்குகிறது. இந்த கிண்ணமே உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிக்கு தம்முடன் வைத்துக் கொள்ள வழங்கப்படுகிறது.

நகல் கிண்ணம் பித்தளையால் உருவாக்கப்படுகிறது. வெட்டப்பட்டு பளபளப்பு ஊட்டப்படும் இந்த நகல் கிண்ணம் 24 கரட் தங்கத்தால் குளிப்பாட்டப்படுகிறது.

இதனை நாம் கண்களால் செய்கிறோம். ஒருமுறை நாம் பார்க்கும்போது அவள் அழகாக இருப்பதை கண்டு அது தானாக வெளிவரும் என்று சுமார் ஒரு தசாப்தத்திற்கு கிண்ணத்தை பளபளப்பாக வைத்திருப்பதற்காக அதன் மீது சாயம் பூசும் அஹமது அயித் சிதி அப்தல்காதர் குறிப்பிட்டார்.

உலகக் கிண்ணம் ஏதோ வித்தியாசமானதுஎன்று கூறிய அவர், நாம் இங்கு ஆபிரிக்கா, வளைகுடா, ஐரோப்பா, மத்திய அமெரிக்காவுக்காக பல கிண்ணங்களை தயாரிக்கிறோம். ஆனால் இது அசாதாரணமான தாக்கம் செலுத்தக் கூடியதாகவும் ஏனையவற்றிலிருந்து மாறுமட்டதாகவும் உள்ளது என்றார்.

ஆண்டின் சிறந்த ப்ரீமியர் லீக் வீரர் விருதும் சலாஹ் வசமானது

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் இந்த பருவத்தின் சிறந்த வீரருக்கான விருதை …

இத்தாலி அணித்தலைவர் கியன்லுயிகி பபோனினால் முடியாமல் போனாலும் ஜூலை 15 ஆம் திகதி இந்த உலகக் கிண்ணத்தை நெய்மார், லியோனல் மெஸ்ஸி, ஹுகோ ல்லொரிஸ், சேர்ஜியோ ராமோஸ் அல்லது மானுவேல் நெவர் என்று ஒருவர் தலைக்கு மேல் உயர்த்திக் கொண்டாடப்போகிறார். என்றாலும் சில மாதங்களுக்குப் பின்னர் அந்த உலகக் கிண்ணம் மீண்டும் தனது வழக்கமான சீர்செய்யும் செயல்முறைக்காக இத்தாலியில் தனது சொந்த இடத்திற்கு திரும்பி வரும்.

இது எல்லோராலும் எவ்வளவுக்கு விரும்பப்படும் கிண்ணம் என்றால் அதனை வெல்லும் அணியினர் அதன் மீது அதிக உரிமை கொண்டாடி சேதப்படுத்துகிறார்கள். சில நேரங்களில் அதிகம் சீர்செய்யப்பட வேண்டிய நிலையிலேயே அது திரும்பி வருகிறது. 2006இல் இத்தாலி அதனை அதிகம் கொண்டாடியது என்று வலன்டினா லோசா குறிப்பிட்டார்.  

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…