நியூசிலாந்து T20I தொடருக்கான ஆஸி. அணியில் மாற்றம்

190
Stoinis ruled out of NZ tour, Hardie called up

நியூசிலாந்து T20I தொடரில் பங்கெடுக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் காணப்பட்ட மார்கஸ் ஸ்டொய்னிஸ் குறித்த தொடரில் இருந்து விலகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

>>WATCH – ஐக்கிய அரபு இராச்சியத்தில் திறமையை வெளிப்படுத்தும் வியாஸ்காந்த்! | Sports Field

நியூசிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடவிருக்கின்றது. இந்த T20I தொடரின் முதல் போட்டி எதிர்வரும் புதன்கிழமை (21) வெலிங்டன் நகரில் ஆரம்பமாகவிருக்கும் நிலையில் அவுஸ்திரேலிய T20I குழாத்தில் காணப்பட்ட மார்கஸ் ஸ்டொய்னிஸ் தற்போது அணியில் இருந்து நீங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஸ்டொய்னிஸிற்கு ஏற்பட்டிருக்கும் முதுகு உபாதையே அவர் தொடரில் இருந்து விலக காரணமாகும்.  அதேநேரம் இந்தத் தொடரின் முதல் T20I போட்டியில் மெதிவ் வேட் அவரின் குழந்தையின் பிறப்பின் காரணமாக ஆட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஸ்டொய்னிஸின் பிரதியீடாக சகலதுறைவீரரான ஆரோன் ஹார்டி அவுஸ்திரேலிய குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார். ஆரோன் ஹார்டி இன்று (17) நியூசிலாந்து பயணமான அவுஸ்திரேலிய அணியில் இணையாத போதிலும் அவர் முதல் போட்டிக்கு முன்னர் அவுஸ்திரேலிய அணிக்குழாத்துடன் இணைவார் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

ஆஸி. அணிக்குழாம்

மிச்சல் மார்ஷ் (தலைவர்), பேட் கம்மின்ஸ், டிம் டேவிட், நதன் எல்லிஸ், ஜோஸ் ஹேசல்வூட், ட்ராவிஸ் ஹெட், ஜோஸ் இங்கிலீஷ், கிளன் மெக்ஸ்வெல், மேட் சோர்ட், ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், ஆரோன் ஹார்டி, மெதிவ் வேட், டேவிட் வோர்னர், அடம் ஷம்பா

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<