யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு எதிராக இடம்பெற்ற வணக்கத்திற்குரிய AJC செல்வரத்தினம் ஞாபகார்த்த நினைவுக் கேடயத்திற்கான 10ஆவது கிரிக்கெட் போட்டியில் கல்கிசை புனித தோமையர் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் புனித தோமையர் கல்லூரி AJC செல்வரத்தினம் ஞாபகார்த்த நினைவுக் கேடயத்தினை 6ஆவது தடவையாக வெற்றி கொண்டுள்ளது.
நேற்று (08) புனித தோமையர் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சொந்த மைதான அணியின் தலைவர் சலின் டி மெல், முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.
>>தென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்திய இலங்கை லெஜன்ட்ஸ்
அதன்படி களமிறங்கிய புனித தோமையர் கல்லூரி வீரர்கள் 76.2 ஓவர்களில் 241 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் வெளிச்சமின்மை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது. எனினும், பின்னர் மழை பெய்தமையினால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.
எனவே, 241 ஓட்டங்களுடன் புனித தோமையர் கல்லூரி தமது முதல் இன்னிங்ஸை நிறுத்திக் கொண்டது. அவ்வணி சார்பாக மத்திய வரிசை வீரர்களான வினூஜ 71 ஓட்டங்களையும், செனேஷ் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.
சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சில் இளம் வீரர் அஷ்னத் 3 விக்கெட்டுக்களையும், டினோசன் மற்றும் சரான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். எனினும், சென். ஜோன்ஸ் வீரர்கள் பிடியெடுப்பு, ஸ்டம்பிங் என்பவற்றில் பல ஆட்டமிழப்பு வாய்ப்புக்களை தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், போட்டியின் இரண்டாவது நாள் காலை தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ்ப்பாண வீரர்கள், வெறும் 20.2 ஓவர்களில் 61 ஓட்டங்களுக்கு தமது சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர். அணித் தலைவர் டினோசன் மாத்திரம் அதிகபட்சமாக 21 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் சுழல் பந்துவீச்சாளர் மனித் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ரயன் 2 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களையும், கனிஸ்டன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் புனித தோமையர் கல்லூரி சார்பாக கைப்பற்றினர்.
முதல் இன்னிங்ஸில் புனித தோமையர் கல்லூரி அணியைவிட 180 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்ததால் சென். ஜோன்ஸ் வீரர்கள் பளோவ் ஓன் முறையில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தையும் இரண்டாம் நாள் மதிய போசண இடைவேளைக்கு முன்னர் ஆரம்பித்தனர்.
இந்த இன்னிங்ஸில் முதல் இன்னிங்ஸை விட சற்று சிறப்பாக ஆடினாலும் சென். ஜோன்ஸ் வீரர்களால் 33 ஓவர்கள் நிறைவில் 145 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. அணி சார்பான அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக வினோஜன் 34 ஓட்டங்களைப் பெற, தமிழ்கதிர் 2 சிக்ஸர்கள் அடங்களாக 25 ஓட்டங்களை பெற, சங்கீர்தனன் ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
புனித தோமையர் கல்லூரியின் பந்துவீச்சில் மீண்டும் சிறப்பாக செயற்பட்ட மனித் 60 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி, இந்தப் போட்டியில் மொத்தமாக 11 விக்கெட்டுக்களை வீழ்த்தி, அணியின் இன்னிங்ஸ் வெற்றிக்கு முக்கிய பங்கை வழங்கியிருந்தார்.
இந்த போட்டி முடிவுடன், வணக்கத்திற்குரிய AJC செல்வரத்தினம் ஞாபகார்த்த நினைவுக் கேடயத்திற்கான 10 மோதல்கள் நிறைவடைந்துள்ள நிலையில் புனித தோமையர் கல்லூரி அணி 6 வெற்றிகளை பெற்றுள்ள அதேவேளை, 4 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன. சென். ஜோன்ஸ் கல்லூரி இதுவரை எந்தவொரு போட்டியையும் வெற்றி கொள்ளவில்லை.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Vinesh Bandaranayake | b Jeyachandran Ashnath | 32 | 120 | 2 | 0 | 26.67 |
Shalin De Mel | c Vinojan Thiyagarajah b Dinoshan Theivendram | 9 | 17 | 2 | 0 | 52.94 |
Anuk Palihawadana | b Anton Saraan | 46 | 90 | 3 | 0 | 51.11 |
Ryan Fernando | lbw b Jeyachandran Ashnath | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Thenuka Liyanagae | b Jeyachandran Ashnath | 6 | 11 | 0 | 0 | 54.55 |
Thishen Ehaliyagoda | run out () | 7 | 16 | 0 | 0 | 43.75 |
Vinuja Wijebandara | run out () | 71 | 101 | 10 | 0 | 70.30 |
Shenesh Hettiarachchi | not out | 51 | 91 | 4 | 0 | 56.04 |
Caniston | not out | 2 | 7 | 0 | 0 | 28.57 |
Extras | 15 (b 4 , lb 4 , nb 2, w 5, pen 0) |
Total | 241/7 (76.2 Overs, RR: 3.16) |
Did not bat | Manith Perera, Randiv Goonasekara, |
Fall of Wickets | 1-18 (6.3) Shalin De Mel, 2-91 (31.4) Vinesh Bandaranayake, 3-95 (37.2) Ryan Fernando, 4-104 (40.2) Anuk Palihawadana, 5-105 (41.3) Thenuka Liyanagae, 6-127 (45.3) Thishen Ehaliyagoda, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dinoshan Theivendram | 17 | 2 | 46 | 1 | 2.71 | |
Vithushan Yogathas | 9 | 2 | 33 | 0 | 3.67 | |
Jeyachandran Ashnath | 25 | 5 | 82 | 3 | 3.28 | |
Sukethan Antonypillai | 2 | 1 | 4 | 0 | 2.00 | |
Anton Saraan | 12 | 3 | 29 | 1 | 2.42 | |
Thamilkathirabiranchan Kajnthiran | 8.2 | 0 | 29 | 0 | 3.54 | |
Vinojan Thiyagarajah | 3 | 0 | 10 | 0 | 3.33 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Karishan Kuganesaran | c & b Shalin De Mel | 3 | 20 | 0 | 0 | 15.00 |
Sachin Kanapathy Anderson | c Thenuka Liyanagae b Caniston | 10 | 19 | 2 | 0 | 52.63 |
Sukethan Antonypillai | c Shalin De Mel b Caniston | 5 | 14 | 1 | 0 | 35.71 |
Vinojan Thiyagarajah | c & b Manith Perera | 6 | 19 | 1 | 0 | 31.58 |
Dinoshan Theivendram | c Anuk Palihawadana b Ryan Fernando | 21 | 23 | 2 | 1 | 91.30 |
Piranavan Sivarajah | c Anuk Palihawadana b Manith Perera | 3 | 12 | 0 | 0 | 25.00 |
Anton Saraan | c Thenuka Liyanagae b Manith Perera | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Sritharan Sajith | lbw b Ryan Fernando | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Vithushan Yogathas | b Manith Perera | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Thamilkathirabiranchan Kajnthiran | c Vinuja Wijebandara b Ryan Fernando | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Jeyachandran Ashnath | not out | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Extras | 12 (b 6 , lb 0 , nb 4, w 2, pen 0) |
Total | 61/10 (20.2 Overs, RR: 3) |
Fall of Wickets | 1-21 (5.4) Karishan Kuganesaran, 2-21 (6.2) Sachin Kanapathy Anderson, 3-29 (10.2) Sukethan Antonypillai, 4-45 (13.2) Vinojan Thiyagarajah, 5-55 (15.5) Piranavan Sivarajah, 6-55 (16) Anton Saraan, 7-56 (17) Sritharan Sajith, 8-59 (17.5) Vithushan Yogathas, 9-59 (18.5) Dinoshan Theivendram, 10-61 (20.2) Thamilkathirabiranchan Kajnthiran, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Caniston | 6 | 1 | 21 | 2 | 3.50 | |
Shalin De Mel | 5 | 2 | 9 | 1 | 1.80 | |
Manith Perera | 5 | 0 | 23 | 4 | 4.60 | |
Ryan Fernando | 4.2 | 2 | 2 | 3 | 0.48 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Karishan Kuganesaran | c Anuk Palihawadana b Manith Perera | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Sachin Kanapathy Anderson | c Thenuka Liyanagae b Randiv Goonasekara | 5 | 28 | 1 | 0 | 17.86 |
Sukethan Antonypillai | b Manith Perera | 18 | 14 | 3 | 0 | 128.57 |
Vinojan Thiyagarajah | st Shenesh Hettiarachchi b Manith Perera | 34 | 38 | 6 | 0 | 89.47 |
Dinoshan Theivendram | lbw b Manith Perera | 20 | 29 | 3 | 0 | 68.97 |
Piranavan Sivarajah | c Vinuja Wijebandara b Randiv Goonasekara | 2 | 7 | 0 | 0 | 28.57 |
Anton Saraan | c Caniston b Manith Perera | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Thamilkathirabiranchan Kajnthiran | st b Anuk Palihawadana | 25 | 31 | 2 | 2 | 80.65 |
Sritharan Sajith | lbw b Manith Perera | 12 | 12 | 2 | 0 | 100.00 |
Jeyachandran Ashnath | b Manith Perera | 0 | 7 | 3 | 0 | 0.00 |
Vithushan Yogathas | not out | 22 | 25 | 0 | 0 | 88.00 |
Extras | 6 (b 2 , lb 1 , nb 3, w 0, pen 0) |
Total | 145/10 (33 Overs, RR: 4.39) |
Fall of Wickets | 1-1 (1.3) Karishan Kuganesaran, 2-20 (5.1) Sukethan Antonypillai, 3-32 (9) Sachin Kanapathy Anderson, 4-61 (14.4) Vinojan Thiyagarajah, 5-66 (16.5) Piranavan Sivarajah, 6-67 (17.4) Anton Saraan, 7-67 (18) Dinoshan Theivendram, 8-100 (25.1) Sritharan Sajith, 9-145 (33) Jeyachandran Ashnath, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Caniston | 6 | 2 | 32 | 0 | 5.33 | |
Manith Perera | 13 | 1 | 60 | 7 | 4.62 | |
Anuk Palihawadana | 4 | 0 | 8 | 1 | 2.00 | |
Randiv Goonasekara | 10 | 1 | 42 | 2 | 4.20 |
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<