இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஸ்டீவ் ஸ்மித் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெட் கம்மின்ஸ், அவருடைய தாயின் மறைவு காரணமாக, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் நாடு திரும்பியிருந்தார்.
ஐக்கிய அரபு இராச்சியம் செல்லும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி
இந்தநிலையில் அவுஸ்திரேலியாவுக்கு திரும்பியுள்ள பெட் கம்மின்ஸ் ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் என்பதால் ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஒருநாள் அணியை வழிநடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெட் கம்மின்ஸ் அவுஸ்திரேலியாவுக்கு திரும்பிய பின்னர் இந்திய அணிக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஸ்டீவ் ஸ்மித் அணியை வழிநடத்தியிருந்ததுடன், இதில் ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டி சமனிலையிலும் முடிவடைந்திருந்தது.
ஸ்டீவ் ஸ்மித் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் அணிக்குழாமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உபாதைகளுக்கு முகங்கொடுத்திருந்த டேவிட் வோர்னர் மற்றும் மிச்சல் மார்ஷ் ஆகியோர் ஒருநாள் தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் வருகையுடன் அலெக்ஸ் கேரி, அடம் ஷாம்பா, கெமரூன் கிரீன், டிராவிஷ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், மார்னஸ் லபுசெங், மிச்சல் ஸ்டார்க் மற்றும் மார்கஸ் ஸ்டொயினிஸ் ஆகியோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இம்மாதம் 17ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியா குழாம்
ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்), அலெக்ஸ் கேரி, சீன் எபோட், அஷ்டன் ஆகர், நெதன் எலிஸ், கெமரூன் கிரீன், டிராவிஷ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், மார்னஸ் லபுசேங், மிச்சல் மார்ஷ், கிளேன் மெக்ஸ்வெல், மிச்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொயினிஸ், டேவிட் வோர்னர், அடம் ஷாம்பா
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<