மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெட் கம்மின்ஸ் உட்பட மிச்சல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேஷல்வூட் ஆகிய முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக ஸ்மித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை T20i குழாம் அறிவிப்பு
அதேநேரம் மிச்சல் மார்ஷிற்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஓய்வு வழங்கியுள்ளதுடன், மார்கஸ் ஸ்டொய்னிஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். முன்னணி வீரர்கள் வெளியேறியுள்ள நிலையில் டிராவிஷ் ஹெட் அணியின் உப தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.
மேலும் முதல் இலக்க துடுப்பாட்ட வீரர் மெதிவ் ஷோர்ட், வேகப்பந்துவீச்சாளர்களான ஜெய் ரிச்சட்சன், நேதன் எல்லிஸ், சகலதுறை வீரர் ஆரோன் ஹார்டீ மற்றும் புதுமுக வேகப்பந்துவீச்சாளர் லான்ஸ் மொரிஸ் ஆகியோரும் அவுஸ்திரேலியா பெயரிட்டுள்ள 13 பேர்கொண்ட குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பெப்ரவரி 2ம் திகதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியா ஒருநாள் குழாம்
ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்), டிராவிஷ் ஹெட் (உப தலைவர்), சீன் எபோட், நேதன் எல்லிஸ், கெமரூன் கிரீன், ஆரோன் ஹார்டீ, ஜொஷ் இங்லிஷ், மார்னஸ் லபுசேங், கிளென் மெக்ஸ்வெல், லான்ஸ் மொரிஸ், ஜெய் ரிச்சட்சன், மெட் ஷோர்ட், அடம் ஷாம்பா
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<