விளையாடாமலே சிறந்த துடுப்பாட்ட வீரர் என்பதை நிரூபித்து வரும் ஸ்டீவ் ஸ்மித்

380

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) புதிதாக வெளியிட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில், இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி முதலிடத்தை இழந்துள்ளார். இந்நிலையில் குறித்த முதலிடத்தை அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கைவசப்படுத்தியுள்ளார்.

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களில் உலகின் முதலிடத்தில் கோஹ்லி

துடுப்பாட்ட வீரர்களுக்கான உலக டெஸ்ட் தரவரிசையில்..

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் வாரியம் புதிய டெஸ்ட் தரவரிசையை வெளியிட்டுள்ளது.

Image courtesy -ICC

டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும், துடுப்பாட்டத்தில் சிறப்பிக்கத் தவறிவரும் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள், இந்த புதிய தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ளதுடன், இங்கிலாந்து வீரர்கள் அதிகூடிய முன்னேற்றங்களை அடைந்துள்ளனர்.

முக்கியமாக முதல் டெஸ்ட் போட்டி நிறைவில் சதம் மற்றும் அரைச்சதங்களை விளாசி இந்திய அணியின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்தியிருந்த அணித் தலைவர் விராட் கோஹ்லி, கடந்த வாரம் டெஸ்ட் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித்தை பின்தள்ளி முதலிடத்தை பிடித்திருந்தார். 2011ஆம் ஆண்டு சச்சினுக்கு பின்னர் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்தவர் என்ற பெருமையையும் விராட் கோஹ்லி தனதாக்கியிருந்தார்.

இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் சோபிக்க தவறும் இந்திய அணி

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்..

இவ்வாறான நிலையில், ஒருவாரம் மாத்திரம் கடந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 23 மற்றும் 17 ஓட்டங்கள் என துடுப்பாட்டத்தில் தடுமாறிய விராட் கோஹ்லி 15 புள்ளிகளை இழந்து, மீண்டும் இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார். இதனால், குறித்த இடத்தை ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கைப்பற்றியுள்ளார். ஸ்டீவ் ஸ்மித் கடந்த மார்ச மாதம் தனது இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தும், 929 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Image courtesy -ICC

இந்த மாற்றத்துடன், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 177 பந்துகளுக்கு ஆட்டமிழக்காமல் 132* ஓட்டங்கள் மற்றும் 2/19, 2/24 என நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து அணியின் கிரிஸ் வோகஸ் துடுப்பாட்டம், பந்து வீச்சு மற்றும் சகலதுறை என்ற மூன்று தரவரிசையிலும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளார். துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 34 இடங்கள் முன்னேற்றம் அடைந்து, 50ஆவது இடத்தையும், பந்து வீச்சாளர்கள் வரிசையில்  மூன்று இடங்கள் முன்னேறி 32ஆவது இடத்தையும் அவர் பிடித்துள்ளதுடன், சகலதுறை வீரர்கள் வரிசையில் 5 இடங்கள் முன்னேறி 7ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இவருடன் 93 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த ஜொனி பெயார்ஸ்டோவ் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி முதல் 10 வீரர்களுக்குள் (7ஆவது இடம்) இடம்பிடித்துள்ளார்.

இங்கிலாந்து வீரர்களின் முன்னேற்றத்துடன் இந்திய வீரர்கள் சிலரும் தரவரிசையில் முன்னேறியுள்ளனர். இதில், துடுப்பாட்டத்தில்  பிரகாசித்த ரவிச்சந்திரன் அஸ்வின் (29, 33*) தற்போது சகலதுறை வீரர்கள் வரிசையில் நான்காவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இவருடன் 37 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா 19 இடங்களுடன் 44ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இவர் துடுப்பாட்ட வரிசையில் 25 இடங்கள் முன்னேறி 74ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

சாதனை மேல் சாதனை படைத்த இலங்கை

தென்னாபிரிக்காவுக்கு எதிராக கொழும்பு, ஆர். பிரேமதாச..

எனினும் துடுப்பாட்ட வரிசையில் இந்திய அணியின் முரளி விஜய் 8 இடங்கள் (33), தினேஷ் கார்த்திக் 18 இடங்கள் (195) என பின்னடைவை சந்தித்துள்ளனர்.

Image courtesy -ICC

பந்து வீச்சாளர்கள் வரிசையை நோக்கும் போது, இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் எண்டர்சன் 903 புள்ளிகள் எனும் புதிய மைல்கல்லை எட்டி, தரப்படுத்தலில் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். இந்திய அணிக்கு எதிரான லோர்ட்ஸ் டெஸ்டில் துடுப்பாட்ட வீரர்களை மிரட்டிய இவர், முதல் இன்னிங்ஸில் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.

இங்கிலாந்து அணிசார்பில் இயன் போதமிற்கு (1980ஆம் ஆண்டு) பிறகு, 900 புள்ளிகளை கடந்த முதல் இங்கிலாந்து பந்து வீச்சாளர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். அத்துடன் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்த 7ஆவது இங்கிலாந்து பந்து வீச்சாளர் என்ற மைல் கல்லையும் எட்டியுள்ளார்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில், இரண்டாவது இடத்தில் 882 புள்ளிகளுடன் காகிஸோ ரபாடா, எண்டர்சனை நெருங்கியுள்ளார். எனினும், இந்திய பந்து வீச்சாளர்கள் எவருக்கும் முன்னேற்றம் கிடைக்கவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டினை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் குல்டீப் யாதவ் 13 இடங்கள் சரிவை சந்தித்து, 70ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித், ஜேம்ஸ் எண்டர்சன் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் முறையே, துடுப்பாட்டம், பந்து வீச்சு மற்றும் சகலதுறை வீரர்கள் பட்டியலில் முதலிடங்களை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரப்படுத்தல்

டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான புதிய தரப்படுத்தல்

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரப்படுத்தல்

>> காணொளிகளைப் பார்வையிட <<