ஸ்டீவ் ஓ’கீபேவிற்கு 10 ஆயிரம் டொலர் அபராதம்

268
Steve O’Keefe

அவுஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ’கீபே. இவர் இலங்கை அணிக்கெதிரான தொடரில் இடம் பிடித்திருந்தார்.

இவருக்குப் பல்லேகலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டின் 2-வது இனிங்ஸில் களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது  தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால், இலங்கைத் தொடரில் இருந்து நீக்கப்பட்டு அவுஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

தற்போது அவர்அவுஸ்திரேலியா வில் தனது சொந்த ஊரில் ஓய்வெடுத்து வருகிறார். கடந்த சனிக்கிழமை ஸ்டீவ் ஓ’கீபே புறநகர் கடற்கரை நகரமான மேன்லியில் உள்ள ஸ்டெய்னே ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து இரவு திரும்பும்போது தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி விதிமுறை மீறல் குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்த தகவல் ஓ’கீபே விளையாடும் நியூ சவுத் வேல்ஸ் அணியின் நி்ர்வாகத்திற்குத் தெரியவந்தது. அப்போது அவர் வீரர்களின் நன்நடத்தை விதிமுறையை மீறியதாகத் தெரியவந்தது. அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் நியூ சவுத் வேல்ஸ் அணி அவருக்கு 10 ஆயிரம் டொலர்களை அபராதமாக விதித்துள்ளது.