புனித பேதுரு கல்லூரி அணியை வீழ்த்தியது புனித தோமியர் கல்லூரி

272

புனித பேதுரு கல்லூரியுடனான 17 வயதுக்கு கீழான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புனித தோமியர் கல்லூரி அணி 90 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டியது.   

கொழும்பு, புனித தோமியர் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியை வென்ற புனித பேதுரு கல்லூரி அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி களமிறங்கிய புனித தோமியர் அணி 13 ஓட்டங்களுக்கே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. ஆரம்ப வீரர் முஹமlட் இஷாக் ஓட்டம் பெறாமலேயே ஆட்டமிழந்தார். எனினும் மறுமுனையில் ஷலின் டி மேல் நிதானமாக ஆடி 78 பந்துகளில் 34 ஓட்டங்களை பெற்றார்.

மத்திய வரிசையில் கிஷான் முனசிங்க சிறப்பாக ஆடியபோதும் ஒரு ஓட்டத்தால் அரைச் சதத்தை தவறவிட்டார். 77 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 6 பௌண்டரிகளுடன் 49 ஓட்டங்களை பெற்று ரன் அவுட் ஆனார். அணித் தலைவர் டிலன் பீரிஸ் 31 ஓட்டங்களையும் கலன பெரேரா 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

முதல் போட்டியில் வட மாகாண, கிழக்கு மாகாண அணிகள் தோல்வி

இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையில் நடைபெற்று வருகின்ற 23..

இதன்மூலம் புனித தோமியர் கல்லூரி அணி 50 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 204 ஓட்டங்களை பெற்றது. புனித பேதுரு கல்லூரி அணி சார்பில் யொஹான் விஜேவீர 10 ஓவர்களுக்கும் 45 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ருவின் செனவிரத்ன 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

அதனைத் தொடர்ந்து 205 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி அணிக்காக எந்த வீரரும் நின்று பிடித்து ஆடவில்லை. ஆரம்ப வீரர் ஜுட் டி பெற்ற 29 ஓட்டங்கலே அதிகபட்ச ஓட்டமாகும்.

மறுமுனையில் யொஹான் விஜேவீர ஓட்டம் இன்றியே வெளியேறினார். அடுத்து வந்த விக்கெட் காப்பாளர் ஷனோன் பெர்னாண்டோ மற்றும் அணித் தலைவர் ரன்மித் ஜயசேன ஆகியோர் முறையே 19 மற்றும் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வந்த வீரர்களும் ஓட்டம் பெறத் தவறினர். இதனால் புனித தோமியர் கல்லூரி அணி 39.3 ஓவர்களில் 114 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. குறிப்பாக அந்த அணியின் கடைசி 5 விக்கெட்டுகளும் வெறும் 10 ஓட்டங்களுக்கு பறிபோனமை குறிப்பிடத்தக்கது.  

புனித தோமியர் அணி சார்பில் கிஷான் முனசிங்க 8 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிதாரா ஹபுஹின்ன மற்றும் டிலன் பீரிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி: 204/9 (50) – கிஷான் முனசிங்க 49, கலன பெரேரா 39, ஷலின் டி மேல் 34, யொஹான் விஜேவீர 45/3  

புனித பேதுரு கல்லூரி: 114/10 – ஜுட் டி 29, கிஷான் முனசிங்க 16/3, சிதாரா ஹபுஹின்ன 13/2, டிலன் பீரிஸ் 14/2