இலங்கை கிரிக்கெட்டின் தேர்தலை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (14) அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை மீண்டும் நடாத்துவதற்காக வேட்பு மனுக்களை கோரும்படியும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை நடத்த நீதிமன்றத்தால் தடை உத்தரவு
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை..
முன்னதாக கடந்த மாதம் 31ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட்டின் தேர்தலில் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால போட்டியிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவொன்றை வெளியிடுமாறு குறித்த தேர்தலில் தலைவர் பதவிக்காக போட்டியிடுகின்ற நிஷாந்த ரணதுங்கவினால் கடந்த 28ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனுவின் பிரதிவாதிகளாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, அமைச்சின் செயலாளர், கிரிக்கெட் தேர்தல் குழுவின் உறுப்பினர்கள், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் திலங்க சுமதிபால உட்பட 27 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
அத்துடன், குறித்த மனுவில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில், வேட்பாளருக்காக திலங்க சுமதிபாலவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை சட்டத்திற்கு முரணானது எனவும், அவ்வாறு அவர் குறித்த பதவிக்காக போட்டியிட்டால் விளையாட்டுச் சட்டத்தின் விதிகள் மீறப்படும் எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இந்த வழக்கு கடந்த 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போது, 14ஆம் திகதிவரை தேர்தலை ஒத்திவைக்கும்படி இடைக்கால தடை உத்தவு பிறப்பிக்கப்பட்டது.
ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 32
ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் வரலாறு…
இந்நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ப்ரீதி பத்மன் சுரசேன, வழக்கறிஞர் அர்ஜுன் ஒபேசேகர உள்ளிட்ட நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் மீண்டும் இந்த வழக்கு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, புதிதாக தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு தெரிவித்ததையடுத்து தேர்தலுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது சமர்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுவை இரத்து செய்துவிட்டு மீண்டும் வேட்பு மனுக்களை கோறுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டது.
அத்துடன், புதிய தேர்தலை நடத்துவதற்கான அறிக்கையொன்றினை எதிர்வரும் ஜுலை மாதம் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்பிக்கும்படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<