கிரிக்கெட் உலகில் சிறப்பு வாய்ந்த ஆஷஸ் எனப்படும் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு பாரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 1882ஆம் ஆண்டு முதல் முதலில் ஆரம்பிக்கப்பட்ட ஆஷஸ் கிண்ண டெஸ்ட் தொடரானது இன்றுவரை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
வோர்னர், ஸ்மித், பென்குரொப்ட் மீண்டும் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியில்
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் ……..
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு மாத்திரம் உரித்தான இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது இதுவரையில் 70 தடவைகள் நடைபெற்றுள்ளன. இதில் 33 தடவைகள் அவுஸ்திரேலிய அணியும், 32 தடவைகள் இங்கிலாந்து அணியும் தொடரை வென்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன.
இந்நிலையில் 71ஆவது ஆஷஸ் கிண்ண டெஸ்ட் தொடரானது இன்று ஆரம்பமாகியது. ஐந்து போட்டிகளை உள்ளடக்கிய இந்த தொடரின் நடப்பு சம்பியனாக அவுஸ்திரேலிய அணி திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், சர்வதேச கிரிக்கெட் பேரவை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள, இரண்டு வருடங்கள் நடைபெறுகின்ற உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டி, இன்றைய ஆஷஸ் தொடரின் முதல் போட்டி மூலமாக ஆரம்பமாகின்றது.
இங்கிலாந்தின் ஆஷஷ் குழாமில் இடம்பிடித்தார் ஜொப்ரா ஆர்ச்சர்
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு …….
குறித்த ஆஷஸ் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியின் குழாம் அனைத்து போட்டிகளுக்கும் சேர்த்து கடந்த 26ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டிக்காக மாத்திரம் குழாத்தினை 27ஆம் திகதி வெளியிட்டிருந்தது. அந்த அடிப்படையில் இரு அணிகளிலும் எதிர்பார்த்த வீரர்களுக்கு முதல் டெஸ்டில் வாய்ப்பு வழங்கவில்லை என்றாலும், இரு சமமான பலம் பொருந்திய அணிகளே நேருக்கு நேர் மோதுகின்றன.
இங்கிலாந்து பதினொருவர் அணி
இங்கிலாந்து கிரிக்கெட் சபையானது முதல் டெஸ்ட் போட்டிக்கென தனியாக 14 பேர் கொண்ட குழாத்தினை வெளியிட்டிருந்தது. இதில் தற்போது மூன்று வீரர்களை இழந்து இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளது. இங்கிலாந்து அணி நேற்றைய (31) தினமே போட்டியில் விளையாடும் 11 பேர் அணியை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த உலகக் கிண்ண தொடரின் போது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் முழுமையான பங்களிப்பு வழங்கிய மேற்கிந்திய தீவுகளை பிறப்பிடமாக கொண்ட ஜொப்ரா ஆர்ச்சர் முதல் முறையாக இங்கிலாந்து டெஸ்ட் குழாமில் இடம்பிடித்தார். ஆஷஸ் முதல் போட்டியில் ஆர்ச்சருக்கு டெஸ்ட் அறிமுகம் கிடைக்கும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டாலும் கூட அவருக்கு இறுதி நேரத்தில் அதிஷ்டம் கிட்டவில்லை.
மேலும், 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 21 வயதுடைய இளம் பந்துவீச்சு சகலதுறை வீரரான சாம் கரன் மற்றும் இங்கிலாந்து அணி அண்மையில் அயர்லாந்து அணியுடன் விளையாடிய ஒற்றை டெஸ்ட் போட்டியில் அறிமும் பெற்ற வேகப் பந்துவீச்சாளர் ஒலி ஸ்டோன் ஆகியோர் முதல் டெஸ்டில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
ஜோ ரூட் தலைமையிலான அணியில் ரோரி பேன்ஸ், ஜெசன் ரோய், ஜோ டென்லி, ஜொஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜொனி பெயர்ஸ்டோ, மொயின் அலி, கிறிஸ் வேக்ஸ், ஸ்டுவர்ட் ப்ரோட் மற்றும் ஜேம்ஸ் அண்டர்சன் ஆகியோர் விளையாடுகின்றனர்.
அவுஸ்திரேலிய பதினொருவர் அணி
ஆஷஸ் நடப்பு சம்பியனான அவுஸ்திரேலிய அணியானது ஐந்து போட்டிகளுக்கும் சேர்த்து 17 பேர் கொண்ட குழாத்தினை வெளியிட்டிருந்தது. இதில் இன்று நடைபெறுகின்ற முதல் டெஸ்ட் போட்டிக்கு ஆறு வீரர்கள் தவறவிடப்பட்டுள்ளனர்.
பிரியாவிடை பெற்றார் நுவன் குலசேகர
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி ……..
கடந்த வருடம் மார்ச் மாதம் கேப்டவுனில் தென்னாபிரிக்காவுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முழு உலகத்தின் கவனத்தையும் திருப்பிய பந்து சேதப்படுத்தல் விவகாரத்தில் சிக்கி தடைக்கு உள்ளான டேவிட் வோர்னர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கெமரூன் பென்க்ரோப்ட் ஆகியோர் 16 மாதங்களின் பின்னர் மீண்டும் டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும், உபாதை காரணமாக உலகக் கிண்ண தொடரின் அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பை இழந்த உஸ்மான் கவாஜா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இதேவேளை, கடந்த உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய அணிக்காக பந்துவீச்சில் தனி மனிதனாக ஜொலித்த மிட்செல் ஸ்டாக் இன்றைய போட்டியில் தவறவிடப்பட்டுள்ளார். அத்துடன் குழாமில் இடம்பெற்ற மார்கஸ் ஹரிஸ், ஜொஸ் ஹெஸில்வூட், மார்னஸ் லபுஸ்சக்னே, மிச்செல் நேஸர், மிட்செல் மார்ஸ் ஆகியோரும் முதலாவது போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
டிம் பெயின் தலைமையிலான அணியில் டேவிட் வோர்னர், கெமரூன் பென்க்ரோப்ட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், ட்ரெவிஸ் ஹெட், மெத்யூ வேட், பெட் கம்மிண்ஸ், ஜேம்ஸ் பெட்டின்ஸன், நைதன் லெயன், பீட்டர் சிடில் ஆகியோர் விளையாடுகின்றனர்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<