வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் ஸ்டார்க்

5774
Mitchell Starc

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் நட்சத்திர இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஸ்டார்க் காலில் காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

26 வயதான ஸ்டார்க் இன்று சிட்னி நகரில் அமைந்துள்ள ஹர்ஸ்ட்வலே ஓவல் மைதானத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவரது இடது கால் தாடையில் பயிற்சி உபகரணமொன்று மோதி ஆழமான கீறல் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் புனித ஜோர்ஜ் வைத்தியசாலைக்கு ஆம்புலன்ஸ் வண்டி மூலம் எடுத்து செல்லப்பட்ட மிச்சல் ஸ்டார்க்கிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காலில் சுமார் 30 தையல்கள் போடப்பட்டுள்ளன.

அவர் அடுத்த சில நாட்கள் காலில் போடப்பட்டுள்ள தையல்களை பிரிக்கும் வரை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிச்சல் ஸ்டார்க் காயத்திற்கு உள்ளாகும் போது அவரோடு மைதானத்தில் இருந்து அவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற கிரிக்கட் அவுஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரி, வைத்தியர் ஜோன் ஒர்ச்சர்ட் கூறுகையில்ஸ்டார்க் அடுத்து வரும் சில நாட்களிற்கு சிக்கல்களுக்கு உள்ளாகாமல் இருந்தால் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் தென் ஆபிரிக்க அணியுடனான தொடரில் விளையாட உடற்தகுதி பெறுவார்என்று கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் தெரிவாளர் குழு இம்மாத இறுதியில் ஆரம்பமாகும் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் மிச்சல் ஸ்டார்க்கிற்கு ஏற்கனவே ஓய்வு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்