அவுஸ்திரேலியா – இங்கிலாந்து இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதல்தர நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் முதற்தடவையாக இரண்டு ஹெட்ரிக் விக்கெட்டுக்களைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்திய மண்ணில் வெல்ல வேண்டும் என்பதுதான் எனது கனவு: ஹேரத்
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வது…
மேற்கு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஷெப்பில்ட் ஷீல்ட் நான்கு நாள் போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடிய மிட்செல் ஸ்டார்க், தனது முதல்தர கிரிக்கெட் வாழ்க்கையில் முதலாவது ஹெட்ரிக் விக்கெட்டை கைப்பற்றியதுடன், ஷெப்பில்ட் ஷீல்ட் தொடரில் 2 தடவைகள் ஹெட்ரிக் விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற புதிய சாதனையும் படைத்தார்.
அவுஸ்திரேலியாவின் முதல்தர உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெப்பில்ட் ஷீல்ட் போட்டித் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. 1892ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்ற இப்போட்டித் தொடரில் 6 அணிகள் பங்குபற்றி வருகின்றன. இந்நிலையில், மேற்கு அவுஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி சிட்டினியின் ஹெர்சட் வெல் ஓவல் மைதானத்தில் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமாகியது. இதன் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான நியூ சவுத் வேல்ஸ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அதன்பிறகு தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மிட்செல் மார்ஷ் தலைமையிலான மேற்கு அவுஸ்திரேலிய அணி, மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஸ் ஹெசில்வூட் ஆகியோரின் அபார பந்துவீச்சில் 176 ஓட்டங்களுக்கே சுருண்டது. இதில் 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஹெசில்வூட் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.
எனினும் போட்டியின் 67ஆவது ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க், ஜேசன் பெரின்டோர்ப் (20), டேவிட் மூடி (0) மற்றும் சைமன் மெக்கின்(0) ஆகியோரின் விக்கெட்டுக்களை அடுத்தடுத்து கைப்பற்றி, முதல்தரப் போட்டிகளில் தனது கன்னி ஹெட்ரிக்கைப் பதிவு செய்தார்.
இந்திய தொடரின் பிறகு இலங்கை அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்
இலங்கை கிரிக்கெட் அணிக்கு இவ்வருட இறுதியில் நிரந்த..
இந்நிலையில் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு டேவிட் வோர்னர் 5 ஓட்டங்களுடன் ஏமாற்றம் கொடுத்தார். நிதானமாக விளையாடிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், சதம் கடந்தார். இதன்படி அவ்வணி 2ஆவது இன்னிங்ஸிற்காக 6 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
இந்நிலையில், 395 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய மேற்கு அவுஸ்திரேலிய அணிக்கு ஸ்டார்க், ஹெசில்வூட் ஆகியோர் மீண்டும் பந்துவீச்சில் அச்சுறுத்தியிருந்தனர். இதில் மார்ஷ் சகோதரர்களின் விக்கெட்டுக்களை ஹெசில்வூட் கைப்பற்றியதுடன், மறுமுனையில் ஜெனாதன் வெல்ஸ்(16), டேவிட் மூடி(0) மற்றும் சைமன் மெக்கின்(0) ஆகியோரின் விக்கெட்டுக்களை ஸ்டார்க் கைப்பற்றி, இப்போட்டியில் 2ஆவது தடவையாகவும் ஹெட்ரிக் பெற்று சாதனை படைத்தார்.
இதன்மூலம் அவுஸ்திரேலியாவில் நடைபெறுகின்ற முதல்தரப் போட்டிகளில் ஒரே போட்டியில் 2 தடவைகள் ஹெட்ரிக் விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் வீரராகவும் ஸ்டார்க் இடம்பிடித்தார்.
அத்துடன், உலக கிரிக்கெட் அரங்கில் 39 வருடங்களுக்குப் பிறகு ஒரே போட்டியில் 2 ஹெட்ரிக் சாதனை படைத்த வீரராக மாறிய ஸ்டார்க், அவுஸ்திரேலியாவின் முதல்தரக் கிரிக்கெட் வரலாற்றில் ஹெட்ரிக் விக்கெட் கைப்பற்றிய 8ஆவது வீரராகவும் மாறினார்.
இதன்படி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான நியூ சவுத் வேல்ஸ் அணி 171 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்தியாவுக்கெதிரான இலங்கை டெஸ்ட் குழாம் இதுதான்
இந்திய அணிக்கு எதிராக நவம்பர் மாதம் 16 ஆம் திகதி..
எதிர்வரும் 23ஆம் திகதி பிரிஸ்பேனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையில், உள்ளூர் போட்டியில் உபாதையிலிருந்து மீண்டு விளையாடி விக்கெட்டுக்களைக் கைப்பற்றி வருகின்ற மிட்செல் ஸ்டார்க், இங்கிலாந்து அணிக்கு சவாலாக இருப்பார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
முதல்தரப் போட்டிகளில் 2 ஹெட்ரிக் விக்கெட் கைப்பற்றிய வீரர்கள்
அல்பிரட் ஷோ – நொட்டிஹம்ஷெயார் எதிர் க்ளஸ்டர்ஷெயார் (நொட்டின்ஹம் – 1884)
அல்பெர்ட் ட்ரொட் – மிட்ல்செக்ஸ் எதிர் சமர்செட் (லோர்ட்ஸ் – 1912)
ஜிம்மி மெதிவ்ஸ் – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா (ஓல்ட் ட்ரெப்பார்ட் – 1924)
சார்லி பாக்கர் – க்ளஸ்டெர்ஷெயார் எதிர் மிட்ல்செக்ஸ் (பிரிஸ்டெல் – 1924)
ரொனால்ட் ஜென்கின்ஸ் – வோகெஸ்டர்ஷெயார் எதிர் சர்ரே (வோகெஸ்டர் – 1949)
ரொஜின்டர் ராவோ – சேர்விஸஸ் எதிர் வடக்கு பன்ஞாப் (அம்ரிஸ்டர் – 1963)
அமின் ரக்ஹானி – ஒன்றிணைந்த பதினொருவர் அணி எதிர் இந்திய அணி (முல்தான் – 1979)
மிட்செல் ஸ்டார்க் – நியூ சவுத் வேல்ஸ் எதிர் மேற்கு அவுஸ்திரேலியா (சிட்னி -2017)