உலகக் கிண்ண போட்டி வர்ணனையாளர்கள் அறிவிப்பு

ICC ODI World Cup 2023

277

இந்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரினை நேரடி ஒளிபரப்புச் செய்யவிருக்கும் இந்தியாவின் ஸ்டார் ஸ்போட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் ஐ.சி.சி என்பன ஒன்றிணைந்து உலகக் கிண்ணத் தொடரின் வர்னணையாளர்கள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றது. 

பயிற்சி ஆட்டத்தில் பங்களாதேஷிடம் இலங்கை கிரிக்கெட் அணி தோல்வி

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 19ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த உலகக் கிண்ணத் தொடரில் 10 நாட்டு அணிகள் பங்கெடுக்கும் நிலையில் தொடரில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வர்னணையாளர்கள் பணிபுரியவிருக்கின்றனர்

அதன்படி தொடரினை நடாத்தும் இந்தியாவினைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கார், ரவி சாஸ்திரி, K. ஸ்ரீகாந்த், கௌதம் கம்பீர், இர்பான் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் உலகக் கிண்ண வர்னணையாளர்கள் குழாத்தில் இடம்பெற்றிருப்பதோடு, தினேஷ் கார்திக், மொஹமட் கைப் மற்றும் இந்தியாவின் முன்னாள் தலைவி மிதாலி ராஜ் ஆகியோரும் அதில் மேலதிக உள்ளடக்கமாக காணப்படுகின்றனர். 

மறுமுனையில் சர்வதேச அளவில் கிரிக்கெட் வர்ணனைக்கு பிரபலமாக இருக்கும் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் இயன் பிஷப், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங், வகார் யூனூஸ், டேல் ஸ்டெய்ன், கெவின் பீடர்ஷன், ஷோன் பொல்லோக் ஆகியோரோடு இம்ரான் தாஹிரும் மற்றும் ஆகியோரும் உலகக் கிண்ண வர்ணனையாளர்கள் குழாத்தில் இணைந்திருக்கின்றார் 

இவர்கள் தவிர ஹர்சா போக்லே, மெதிவ் ஹய்டேன் மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா ஆகியோரும் உலகக் கிண்ண வர்ணனையாளர்கள் குழாத்தில் இடம்பிடித்திருக்கின்றனர் 

உலகக்கிண்ணத்துக்கான இந்திய குழாத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின்!

இதேநேரம் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறைவீரரான ரஸல் அர்னோல்ட் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வர்னணையாளராக செயற்படுவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. தமிழ் வர்னணையாளர்கள் குழாத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான முரளி விஜய் உம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<