இடைநடுவில் IPL தொடரை தவறவிட்ட முன்னணி வீரர்கள்

312

இந்த ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் கொரோனா பாதுகாப்பு காரணங்கள் கருதி இந்தியாவில் அல்லாமல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது. 

இம்முறை போட்டித் தொடர் ஆரம்பமாகி சில நாட்களிலேயே வீரர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதுடன், தொடரிலிருந்து முக்கிய சில வீரர்களும் வெளியேறினர். இதனால் ஒருசில அணிகள் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளன

குறிப்பாக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு குறைவான பயிற்சியோடு வீரர்கள் விளையாடுவதால் காயம் ஏற்படுகிறது என்று கூறப்பட்டாலும், மைதானத்தின் தன்மையும் இதற்கு ஒரு காரணம் என முன்னணி வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

வேறு திகதியில் லங்கா ப்ரீமியர் லீக் வீரர்கள் ஏலம்

இந்தப் போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி சகலதுறை வீரரான டுவெயின் பிராவோ மூட்டில் ஏற்பட்ட காயத்தால் ஆரம்ப சில போட்டிகளில் விளையாடவில்லை

மறுபுறத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான முதலாவது லீக் போட்டியில் அம்பதி ராயுடு சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

எனினும், குறித்த போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால் அதன்பிறகு நடைபெற்ற ஒருசில போட்டிகளை அவர் தவறவிட்டார். மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மாவுக்கும் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் அவர் தொடர்ந்து விளையாடினார்

அதேபோல, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் கேன் வில்லியம்சனும் காயத்தால் அவதிப்பட்டு வந்ததுடன், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சகலதுறை வீரர் கிறிஸ் மொரிஸ் காயத்தால் ஒருசில போட்டிகளில் விளையாடவில்லை

எனினும், பின்னர் குறித்த இரண்டு வீரர்களும் காயங்களில் இருந்து குணமாகி தத்தமது அணிகளுக்காக சிறந்த முறையில் திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.

Video – Army லீக்கில் துடுப்பாட்டத்தில் கலக்கும் Chandimal..! |Sports RoundUp – Epi 135

இம்முறை .பி.எல் தொடரில் பிரபல அணியாக உருவெடுத்து புள்ளிகள் பட்டியலில் முன்னிலை வகிக்கின்ற அணியாக கருதப்பட்ட டெல்லி கெபிடல்ஸ் அணியில் அடுத்தடுத்து வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டும், தொடரிலிருந்து வெளியேறியும் வருகிறார்கள்.  

இந்த தொடரின் தொடக்கத்திலேயே டெல்லி அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷாந்த் சர்மா காயம் காரணமாக அவதிப்பட்டார். இதனால் முதல் சில போட்டிகளில் அவர் விளையாட வாய்ப்பு இல்லை என்று கருதப்பட்டது

ஆனால், அவரின் காயம் சரியாகாத காரணத்தால் அவரால் வரிசையாக 7 போட்டிகளிலும் விளையாட முடியவில்லை. அதன்பின் இஷாந்த் சர்மா ஐ.பி.எல் தொடரில் இருந்தே வெளியேறும் நிலை ஏற்பட்டது.

அதன்பின் அணியின் மற்றுமொரு பந்துவீச்சாளரரான அமித் மிஸ்ரா காயம் காரணமாக விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. இவரும் தொடரில் இருந்து வெளியேறினர்

இந்த ஆண்டு பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் இல்லை

அதோடு, முதல் போட்டியிலேயே காயம் அடைந்த அஸ்வினுக்கு அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. கையில் காயம் ஏற்பட்ட அஸ்வின் இரண்டு போட்டிகளின் பிறகுதான் மீண்டு வந்தார்

பந்துவீச்சில் இவ்வாறு பல சிக்கல்களை சந்தித்த டெல்லி அணிக்கு இன்னொரு சிக்கல் வந்தது. டெல்லி அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ரிஷப் பண்ட் காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளாக விளையாடவில்லை. களத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இவரின் காலில் சதை பகுதி கிழிந்து இருக்கிறது. இதனால் இன்னும் சில போட்டிகளில் இவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

இதனிடையே, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான 30ஆவது லீக் போட்டியில் டெல்லி அணித் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் களத்தடுப்பு செய்யும் போது கீழே விழுந்து தோள்பட்டையில் காயம் பட்டார்.  

இதனால் போட்டியின் பாதியில் அவர் மைதானத்தில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. கீழே விழுந்த இவர் மிக மோசமாக வலியில் துடித்தார். இவருக்கு உடல்நிலை எப்படி இருக்கிறது, அடுத்த போட்டிகளில் இவர் விளையாட வாய்ப்பு உள்ளதா என்பது குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை

மிகவும் சிறப்பாக விளையாடிக்கொண்டு இருந்த டெல்லி அணியில் இப்படி அடுத்தடுத்து வீரர்கள் காயம் காரணமாக அவதிப்படுவது பெரிய பரபரப்பையும் சிக்கரலயும் ஏற்படுத்தி உள்ளது.  

Video – IPL தொடரில் பட்டையைக் கிளப்பும் இளம் நட்சத்திரங்கள்

எதுஎவ்வாறாயினும், .பி.எல் தொடங்கிய சில நாட்களிலேயே வீரர்கள் பலர் காயத்தால் அவதிப்படுவது .பி.எல் அணிகளுக்கு இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், அவ்வாறு காயம் காரணமாக இதுவரை .பி.எல் தொரிலிருந்து விலகிய வீரர்கள் குறித்த விபரங்களை இங்கு பார்க்கலாம்.

மிட்செல் மார்ஷ் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

பெங்களூர் அணிக்கெதிராக நடைபெற்ற .பி.எல் கிரிக்கெட் தொடரின் 3ஆவது லீக் ஆட்டத்தில் மிட்செல் மார்ஷ் பந்தை காலால் தடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மிட்செல் மார்ஷின் கணுக்கால் திருகியது. எனினும், மேலும் 2 பந்துகளை வீசிய அவர், அந்த ஓவரில் 4 பந்துகளை மட்டுமே வீசிய நிலையில் வெளியேறினார்..

அதன் பின்னர், கணுக்கால் காயம் காரணமாக .பி.எல் தொடரிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார்

மத்திய வரிசை துடுப்பாட்ட வீரராகவும், மித வேகப் பந்துவீச்சு என இரண்டிலும் ஜொலிக்கக்கூடியவராக இருந்த மிட்செல் மார்ஷ் .பி.எல் தொடரிலிருந்து விலகியது ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.

இதனிடையே, மிட்செல் மார்ஷுக்கு பதிலாக சன்ரைசர்ஸ் அணியில் மாற்று வீரராக மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜேசன் ஹோல்டர் இணைத்துக் கொள்ளப்பட்டாலும், அவர் இதுவரை எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை.

புவ்னேஸ்வர் குமார் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

.பி.எல் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி வந்த புவ்னேஸ்வர் குமார், கடந்த 2ஆம் திகதி சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை வீசத் தொடங்கியபோது காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார்.

இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக புவனேஸ்வர் குமாரால் இந்த தொடரில் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, மருத்துவ குழுவின் அறிவுறுத்தலின் பேரில் புவ்னேஸ்வர் குமார் நடப்பு .பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 5 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. அத்துடன், அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போயுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மிட்செல் மார்ஷை தொடர்ந்து புவ்னேஸ்வர் குமாரும்  உபாதைக்கு உள்ளாகி தொடரிலிருந்து வெளியேறியது மேலும் ஒரு பின்னடைவாக அமைந்தது.

இந்தநிலையில், விலகிய புவ்னேஸ்வர் குமாருக்குப் பதிலாக 22 வயது இடது கை வேகப் பந்துவீச்சாளர் ப்ரித்வி ராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அறிவித்துள்ளது.

அமித் மிஸ்ரா (டெல்லி கெபிடல்ஸ்)

டெல்லி கெபிடல்ஸ் அணியின் அனுபவமிக்க சுழல் பந்துவீச்சாளரான அமித் மிஸ்ரா காயம் காரணமாக .பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

புவ்னேஸ்வர் குமார், அமித் மிஸ்ரா ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகல்

ஒக்டோபர் 3ஆம் திகதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசிய மிஸ்ரா காயமுற்றார். அவர் வீசிய முதல் பந்திலேயே நிதீஷ் ரானா கொடுத்த பிடியெடுப்பை எடுக்கும் முயற்சியில் அமித் மிஸ்ராவின் வலது மோதிர விரலில் பலத்த அடிபட்டது.  

எனவே, அமித் மிஸ்ராவின் பந்துவீசும் கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் இத்தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது

ஏற்கெனவே டெல்லி அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்குக் காயம் ஏற்பட்டு கடந்த போட்டியில்தான் மீண்டும் விளையாட வந்தார். இப்போது அமித் மிஸ்ராவுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் அந்த அணியின் பந்துவீச்சு பலவீனமாகலாம் எனக் கருதப்படுகிறது.  

37 வயதாகும் அமித் மிஸ்ரா இத்தொடரில் விளையாடிய 3 போட்டிகளில் 3 விக்கெட்டுக்களை எடுத்துள்ளார். அடுத்து வரும் போட்டிகளில் அமித் மிஸ்ராவுக்குப் பதிலாக அக்ஸர் படேல் விளையாடி வருகின்றார்.

ஷாந்த் சர்மா (டெல்லி கெபிடல்ஸ்

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான இசாந்த் சர்மா தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே பயிற்சியின்போது காயத்தால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில், ஷாந்த் சர்மா, இடது விலா பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு .பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளார்

டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு தொடரும் சோகம்!

டெல்லி அணி இதுவரை விளையாடியுள்ள 8 லீக் ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே இஷhந்த் சர்மா விளையாடி இருந்தார். அபுதாபியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற அப்போட்டியில் அவர் 4 ஓவர்களில் 26 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

இந்நிலையில், கடந்த 7ஆம் திகதி வலைப்பயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு இடது விலா பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டு அவதிப்பட்டார். ஸ்கேன் பரிசோதனையில் தசை கிழிந்திருப்பது தெரியவந்தது

இந்த காயம் முழுமையாக குணமாவதற்கு மேலும் சில வாரங்களாகும் என்பதால், எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது

எனவே, ஷாந்த்துக்கு பதிலாக மாற்று வீரரை இணைத்துக் கொள்ள டெல்லி அணி நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதில் வலைப் பயிற்சிக்கான பந்துவீச்சாளராக உள்ள பிரதீப் சங்வான் அணியில் இடம் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<