மொரட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்கும் மொரட்டுவை புனித செபஸ்தியன் கல்லூரிக்கும் இடையில் நடைபெறும் வருடாந்த தங்கச் சமர் என வர்ணிக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் 33 ஆவது அத்தியாய ஒருநாள் போட்டியில் புனித செபஸ்தியன் கல்லூரி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது .
ஏற்கனவே நடைபெற்ற 2 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவுற்றிருந்த நிலையில் ஒருநாள் போட்டி பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று நடைபெற்று முடிந்தது.
சமநிலையில் முடிவுற்ற 68ஆவது தங்கச்சமர்
மொரட்டுவை டி சொய்சா மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ஓட்டங்களைப் பெற்றது.
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி சார்பாக பிரின்ஸ் பெர்னாண்டோ 40 ஓட்டங்களையும் சனோஜ் தர்ஷிக 38 ஓட்டங்களையும் பெற்றனர். செபஸ்தியன் கல்லூரி சார்பாக பந்து வீச்சில் பிரவீன் ஜயவிக்கிரம மற்றும் பிரவீன் குரே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
164 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய புனித செபஸ்தியன் கல்லூரி அணி 46.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை தமதாக்கியது. செபஸ்தியன் கல்லூரி சார்பாக தருஷ பெர்னாண்டோ ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் ஜனிஷ்க பெரேரா ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களையும் பெற்றனர்.
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி சார்பாக பந்து வீச்சில் விஷ்வ சதுரங்க 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
போட்டியின் சுருக்கம்
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை – 163/9 (50) – பிரின்ஸ் பெர்னாண்டோ 40, சனோஜ் தர்ஷிக 38, பிரவீன் ஜயவிக்கிரம 2/21, பிரவீன் குரே 2/20
புனித செபஸ்தியன் கல்லூரி, மொரட்டுவை – 166/4 (46.1) – தருஷ பெர்னாண்டோ 52*, ஜனிஷ்க பெரேரா 34*, விஷ்வ சதுரங்க 2/32
முடிவு – புனித செபஸ்தியன் கல்லூரி 6 விக்கெட்டுகளால் வெற்றி