மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் கரீபியன் ப்ரீமியர் லீக்கிலிருந்து (CPL) இம்முறை நீக்கப்பட்ட சென். லூசியா ஸ்டார்ஸ் அணிக்கு பதிலாக சென். லூசியா ஷூக்ஸ் (St. Lucia Zouks) அணி இணைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வீரர்களை உள்ளடக்கிய கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் கடந்த 2013ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் முதல் பருவகாலத்தில் சென். லூசியா ஷூக்ஸ் அணி விளையாடியிருந்த போதும், 2016ம் ஆண்டுடன் அந்த அணி கரிபீயன் ப்ரீமியர் லீக்கில் இருந்து விலகியிருந்தது.
கொல்கத்தா அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ப்ரெண்டன் மெக்கலம் நியமனம்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின்….
சென். லூசியா ஷூக்ஸ் அணி விலகியதை தொடர்ந்து, சென்.லூசியாவை பிரதிநிதித்துவப்படுத்தி சென். லூசியா ஸ்டார்ஸ் அணி 2017ம் ஆண்டு முதல் கரீபியன் ப்ரீமியர் லீக்கில் விளையாடியது. கடந்த இரண்டு வருடங்களாக விளையாடிய சென். லூசியா ஸ்டார்ஸ் அணி அதிகபட்சமாக கடந்த வருடம் 5வது இடத்தை பிடித்திருந்தது.
இவ்வாறான நிலையில், எதிர்வரும் செப்டம்பர் 4ம் திகதி 2019ம் ஆண்டுக்கான கரீபியன் ப்ரீமியர் லீக் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், சென். லூசியா ஸ்டார்ஸ் அணி தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக CPL நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்தநிலையில், சென்.லூசியா ஸ்டார்ஸ் அணிக்கு பதிலாக மீண்டும் சென்.லூசியா ஷூக்ஸ் அணி இணைக்கப்பட்டுள்ளது.
சென். லூசியா ஷூக்ஸ் அணி இவ்வருடம் நடைபெறவுளள் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ளமை CPL இன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், சென்.லூசியா ஸ்டார்ஸ் அணிக்கான போட்டி அட்டவணையின் படி, சென். லூசியா ஷூக்ஸ் இம்முறை போட்டிகளில் பங்கேற்கும் என CPL நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மீண்டும் கோஹ்லி அசத்த ஒருநாள் தொடர் இந்தியா வசம்
சுற்றுலா இந்தியா மற்றும் மேற்கிந்திய……
எவ்வாறாயினும், கரீபியன் ப்ரீமியர் லீக்கில் இருந்து சென். லூசியா ஸ்டார்ஸ் அணி நீக்கப்பட்டமைக்காக காரணத்தை CPL நிர்வாகம் வெளிப்படுத்தாத போதும், சென். லூசியாவில் இருந்து புதிய ஒரு அணியை கட்டியெழுப்பும் முகமாகவே இந்த தீர்மானம் ஏற்படுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
எனினும், சென். லூசியா ஸ்டார்ஸ் அணியின் உரிமையை கொண்டிருந்த ரோயல் ஸ்போர்ட்ஸ் க்ளப் மற்றும் எல்.எல்.சி.யின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெய் பாண்டியா குறிப்பிடுகையில், “எங்களை பலவீனப்படுத்தும் வகையில் CPL நிர்வாகம் செயற்பட்டுள்ளது. சென். லூசியா ஸ்டார்ஸ் அணியை நடத்துவதற்கான உரிமையை எம்மிடமிருந்து எந்தவொரு அடிப்படையும் இன்றி CPL நிர்வாகம் நீக்கியுள்ளது. இதற்கு எதிரான சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க நாம் முடிவுசெய்துள்ளோம்” என்றார்.
கரீபியன் ப்ரீமியர் லீக்குக்கான இந்த பருவகால போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் 4ம் திகதி முதல் ஒக்டோபர் 12ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<