துனித் வெல்லாலகேவின் சகலதுறை ஆட்டத்தால் இன்று நிறைவுக்கு வந்த கல்கிஸ்ஸை புனித தோமையார் கல்லூரிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மருதானை புனித ஜோசப் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவுசெய்து தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதின் கீழ் பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் 1) சம்பியனாகத் தெரிவாகியது.
புனித அந்தோனியாரை வீழ்த்தி டிவிஷன் II சம்பியனாகிய றோயல் கல்லூரி
அஹான் சன்சித்த, பி.எஸ் திஸாநாயக்க மற்றும் பசிந்து சூரியபண்டாரவின் அபார….
சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்ற 2018/2019 பருவகாலத்திற்கான 19 வயதின் கீழ் பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் 1) பாடசாலைகளுக்கிடையிலான 2 நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இவ்விரு கல்லூரிகளுக்கும் இடையில் நேற்று (11) ஆரம்பமாகியது.
கொழும்பு றோயல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித தோமையார் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 216 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அந்த அணி சார்பாக அணித் தலைவர் சிதார ஹப்புஹின்ன 127 பந்துகளில் சதம் கடந்து 117 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். எனினும், அந்த அணியின் இறுதி 8 விக்கெட்டுக்களும் 49 ஓட்டங்களில் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புனித ஜோசப் கல்லூரி சார்பாக இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடிய இடதுகை சுழல் பந்துவீச்சாளரான துனித் வெல்லாலகே அபாரமாக பந்துவீசி 45 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் முதல் நாள் ஆட்ட நிறைவுறும் நேரத்தில் தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த புனித ஜோசப் கல்லூரி வீரர்கள் நேற்றைய ஆட்ட நேர நிறைவின்போது 4 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து போட்டியின் 2ஆவது நாளான இன்றைய தினம் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த புனித ஜோசப் கல்லூரி அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக இடதுகை துடுப்பாட்ட வீரரான துனித் வெல்லாலகே 88 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் புனித தோமையார் கல்லூரியின் தெவின் ஈரியகம, ஷெனோன் பெர்னாண்டோ மற்றும் கலன பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
இந்த நிலையில், 53 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த புனித தோமையார் கல்லூரி அணி 2 விக்கெட்டுகளை இழந்து 67 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
இதன்படி, முதல் இன்னிங்ஸ் புள்ளிகளைப் பெற்று முன்னிலை பெற்ற புனித ஜோசப் கல்லூரி அணி, 2018/19 பருவகாலத்திற்கான 19 வயதுக்குட்பட்ட பிரிவு ஒன்றுக்கான பாடசாலைகளுக்கிடையிலான 2 நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக சம்பியனாகத் தெரிவாகியது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sithara Hapuhinna | c Lakshan Gamage b Ashen Daniel | 117 | 127 | 21 | 1 | 92.13 |
Shalin De Mel | c Johanne De Zilva b Shalinda Senevirathne | 12 | 29 | 2 | 0 | 41.38 |
Ryan Fernando | c Sheran Fonseka b Lakshan Gamage | 24 | 45 | 3 | 0 | 53.33 |
Yohan Perera | c Sachintha Ravindu b Ashen Daniel | 14 | 50 | 2 | 0 | 28.00 |
Ravindu De Silva | b Dunith Wellalage | 19 | 33 | 3 | 0 | 57.58 |
Kishan Munasinghe | lbw b Dunith Wellalage | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Umayanga Suwaris | b Dunith Wellalage | 5 | 11 | 1 | 0 | 45.45 |
Kalana Perera | c Yesith Rupasinghe b Dunith Wellalage | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Dellon Peiris | c Johanne De Zilva b Shalinda Senevirathne | 21 | 40 | 4 | 0 | 52.50 |
Thevin Bimsara Eriyagama | lbw b Dunith Wellalage | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Shannon Fernando | not out | 0 | 13 | 0 | 0 | 0.00 |
Extras | 3 (b 0 , lb 1 , nb 1, w 1, pen 0) |
Total | 216/10 (59.1 Overs, RR: 3.65) |
Fall of Wickets | 1-58 (13.1) Shalin De Mel, 2-123 (26.5) Ryan Fernando, 3-167 (39.3) Sithara Hapuhinna, 4-174 (43.1) Yohan Perera, 5-175 (44.1) Kishan Munasinghe, 6-181 (46.5) Umayanga Suwaris, 7-181 (47) Kalana Perera, 8-198 (54.4) Ravindu De Silva, 9-198 (54.5) Thevin Bimsara Eriyagama, 10-216 (59.1) Dellon Peiris, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lakshan Gamage | 9 | 4 | 28 | 1 | 3.11 | |
Johanne De Zilva | 7 | 1 | 47 | 0 | 6.71 | |
Ashen Daniel | 20 | 1 | 61 | 2 | 3.05 | |
Shalinda Senevirathne | 8.1 | 0 | 34 | 2 | 4.20 | |
Dunith Wellalage | 15 | 3 | 45 | 5 | 3.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Johanne De Zilva | c & b Thevin Bimsara Eriyagama | 12 | 24 | 1 | 0 | 50.00 |
Sheran Fonseka | c Sithara Hapuhinna b Kalana Perera | 17 | 54 | 1 | 0 | 31.48 |
Dinal Anuradha | run out (Shalin De Mel) | 18 | 44 | 3 | 0 | 40.91 |
Dineth Jayakody | c Dellon Peiris b Kalana Perera | 44 | 65 | 4 | 0 | 67.69 |
Dilesh Perera | lbw Kishan Munasinghe b Shannon Fernando | 4 | 7 | 1 | 0 | 57.14 |
Dunith Wellalage | c Kalana Perera b Thevin Bimsara Eriyagama | 88 | 104 | 10 | 1 | 84.62 |
Sachintha Ravindu | c & b Shannon Fernando | 34 | 51 | 5 | 0 | 66.67 |
Lakshan Gamage | b Kalana Perera | 10 | 19 | 0 | 0 | 52.63 |
Yesith Rupasinghe | b Dellon Peiris | 23 | 41 | 4 | 0 | 56.10 |
Ashen Daniel | not out | 11 | 20 | 1 | 0 | 55.00 |
Shalinda Senevirathne | b Dellon Peiris | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 8 (b 0 , lb 3 , nb 3, w 2, pen 0) |
Total | 269/10 (72 Overs, RR: 3.74) |
Fall of Wickets | 1-22 (8.1) Johanne De Zilva, 2-49 (19.2) Dinal Anuradha, 3-55 (22.1) Sheran Fonseka, 4-60 (23.5) Dilesh Perera, 5-130 (38.5) Dineth Jayakody, 6-192 (52.4) Sachintha Ravindu, 7-218 (58.5) Lakshan Gamage, 8-243 (64.4) Dunith Wellalage, 9-269 (71.3) Yesith Rupasinghe, 10-269 (71.3) Ashen Daniel, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kalana Perera | 20 | 1 | 97 | 3 | 4.85 | |
Shalin De Mel | 2 | 0 | 4 | 0 | 2.00 | |
Thevin Bimsara Eriyagama | 6 | 0 | 26 | 2 | 4.33 | |
Yohan Perera | 1 | 0 | 2 | 0 | 2.00 | |
Shannon Fernando | 18 | 1 | 49 | 2 | 2.72 | |
Dellon Peiris | 11 | 2 | 44 | 2 | 4.00 | |
Kishan Munasinghe | 3 | 1 | 7 | 0 | 2.33 | |
Umayanga Suwaris | 11 | 0 | 37 | 0 | 3.36 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sithara Hapuhinna | c Sachintha Ravindu b Dunith Wellalage | 38 | 41 | 2 | 1 | 92.68 |
Shalin De Mel | c Lakshan Gamage b Ashan De Alwis | 24 | 27 | 2 | 0 | 88.89 |
Ravindu De Silva | not out | 4 | 5 | 0 | 0 | 80.00 |
Extras | 1 (b 0 , lb 0 , nb 1, w 0, pen 0) |
Total | 67/2 (12.2 Overs, RR: 5.43) |
Fall of Wickets | 1-49 (9.2) Shalin De Mel, 2-38 (12.1) Sithara Hapuhinna, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lakshan Gamage | 1 | 0 | 8 | 0 | 8.00 | |
Ashan De Alwis | 6 | 1 | 18 | 1 | 3.00 | |
Yesith Rupasinghe | 2 | 0 | 17 | 0 | 8.50 | |
Dunith Wellalage | 3.2 | 0 | 24 | 1 | 7.50 |