84 ஆவது தடவையாக இடம்பெற்றிருந்த கொழும்பின் கத்தோலிக்க பாடசாலைகளான புனித ஜோசப் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான “புனிதர்களின் சமர்“ என்ற பெயரிலமைந்த வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி (BIG MATCH) சமநிலை அடைந்திருக்கின்றது.
P. சரவணமுத்து மைதானத்தில் நேற்று (2) தொடங்கியிருந்த இரண்டு நாட்கள் கொண்ட இந்த வருடாந்த சமரில் எதிரணியினால் முதலில் துடுப்பாட பணிக்கப்பட்டிருந்த புனித ஜோசப் கல்லூரி முதல் இன்னிங்சில் 195 ஓட்டங்களைக் குவித்திருந்திருந்தது. இதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்சில் துடுப்பாடிய புனித பேதுரு கல்லூரி 190 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஸ்தீரமான நிலை ஒன்றில் காணப்பட்டிருந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது. புனித பேதுரு கல்லூரியின் சார்பாக பபசார ஹேரத் 17 ஓட்டங்களுடனும், கனிஷ்க மதுவந்த 5 ஓட்டங்களுடனும் நின்றிருந்தனர்.
புனிதர்களின் போரின் முதல் நாள் புனித பேதுரு கல்லூரி வசம்
இன்றைய போட்டியின் இரண்டாம் நாளில் தொடர்ந்த ஆட்டத்தில் புனித பேதுரு கல்லூரி முதல் இன்னிங்சில் 60 ஓவர்களுக்கு 244 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்தது. பேதுரு கல்லூரிக்காக பின்வரிசையில் ஆடியிருந்த பபசார ஹேரத் 38 ஓட்டங்களுடன் அணிக்கு வலுச்சேர்த்திருந்தார்.
புனித ஜோசப் கல்லூரியின் பந்துவீச்சு சார்பாக வலதுகை வேகப்பந்து வீச்சாளரான லக்ஷான் கமகே 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் புகைப்படங்களைப் பார்வையிட…
Fan Album: St. Joseph’s College vs St. Peter’s College | 84th Battle of the Saints 2018
தொடர்ந்து 49 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை புனித ஜோசப் கல்லூரி அணியினர் ஆரம்பம் செய்திருந்தனர்.
புனித ஜோசப் கல்லூரிக்கு முன்வரிசை வீரர்களான ஜொஹான்னே டி சில்வா மற்றும் நிப்புன் சுமணசிங்க ஆகியோர் முறையே 33 மற்றும் 35 ஓட்டங்களோடு நல்லதொரு ஆரம்பத்தை தந்திருந்தனர்.
இவர்களோடு மத்திய வரிசையில் களமிறங்கிய தினேத் ஜயக்கொடி மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோரும் பெறுமதியான முறையில் ஓட்டங்கள் சேர்த்து உதவ புனித ஜோசப் கல்லூரி அணியினர் இரண்டாம் இன்னிங்சுக்காக 83 ஓவர்களில் 237 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து காணப்பட்டிருந்த போது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டனர்.
இரண்டாம் நாள் புகைப்படங்களைப் பார்வையிட…
Photos: St. Joseph’s College vs St. Peter’s College | 84th Battle of the Saints – Day 2
புனித ஜோசப் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் தினேத் ஜயக்கொடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று 130 பந்துகளுக்கு 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 55 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். அத்தோடு துனித் வெல்லாலகே 7 பவுண்டரிகள் உடன் 44 ஓட்டங்களைக் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பேதுரு கல்லூரியின் பந்துவீச்சு சார்பாக ருவின் செனவிரத்ன 50 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்திருந்ததுடன், உப அணித்தலைவரான மிப்லால் அமீனும் தனது சுழல் மூலம் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்திருந்தார். போட்டியின் இரண்டு நாட்களிலும் 210 ஓவர்களே வீச உத்தேசிக்கப்பட்டிருந்த காரணத்தினால் புனித ஜோசப் கல்லூரியின் இரண்டாம் இன்னிங்சை அடுத்து பேதுரு கல்லூரிக்கு போட்டியில் வெற்றிபெற 15 ஓவர்களுக்கு 189 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்தது.
இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடிய புனித பேதுரு கல்லூரி 9.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 57 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, எஞ்சிய ஓவர்களில் இலக்கை நெருங்குவது சாத்தியம் இல்லை என்ற காரணத்தினால் போட்டி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்டது.
பேதுரு கல்லூரியின் இரண்டாம் இன்னிங்சில் அவ்வணியின் தலைவர் சந்துஷ் குணத்திலக்க 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இந்த ஆண்டுக்கான புனிதர்களின் போர் சமநிலை அடைந்திருப்பதன் காரணமாக, 2016 ஆம் ஆண்டுக்கான (82ஆவது) புனிதர்களின் சமரில் வெற்றி பெற்ற புனித பேதுரு கல்லூரி கிண்ணத்தினை தக்கவைத்துக் கொள்கின்றது. கடந்த ஆண்டில் இடம்பெற்ற (83ஆவது) புனிதர்களின் சமரும் சமநிலை அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 195 (53.2) – ஜெஹான் டேனியல் 97, சச்சின் சில்வா 3/20, அமீன் மிப்லால் 2/71
புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 244 (60) – சமித் பெர்னாந்து 58, ரன்மித் ஜயசேன 55, பபசார ஹேரத் 38, லக்ஷான் கமகே 4/62, அஷேன் டேனியல் 2/41
புனித ஜோசப் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 237/8d (83) – தினேத் ஜயக்கொடி 55*, துனித் வெல்லால்கே 44, ருவின் செனவிரத்ன 4/50
புனித பேதுரு கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 57/1 (9.2) – சந்துஷ் குணத்திலக்க 39
முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.
// var socket=io('http://localhost:8080'); var socket=io('http://202.124.184.250:8080');
jQuery( document ).ready(function() { console.log( "ready" ); var prev_bat_team = 0;
socket.on('message',function (message) { message = JSON.parse(message); console.log(message); if( message.data.cric.commentary){ jQuery('#cmt_wrap').prepend('
'+message.data.cric.commentary.event+'
'+message.data.cric.commentary.comment+'
'); } if(message.data.cric.match){ console.log(message.data.cric.match.teams_1_inn2_r[0]); function ove(balls) { var overs = 0; if(balls %6 == 0){ overs = balls/6; }else{ overs = parseInt(balls/6)+"."+(+balls - +parseInt(balls/6)*6); } console.log(overs); return overs; }
if(!message.data.cric.match.teams_1_inn2_r[0]){
jQuery('#score_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html(message.data.cric.match.teams_1_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_1_r[0]['wkts']); jQuery('#over_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_r[0]['balls'])+" overs)"); }else { jQuery('#score_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html(message.data.cric.match.teams_1_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_1_r[0]['wkts']+" & "+message.data.cric.match.teams_1_inn2_r[0]['score']+" / "+message.data.cric.match.teams_1_inn2_r[0]['wkts']); jQuery('#over_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_inn2_r[0]['balls'])+" overs)"); } if(!message.data.cric.match.teams_2_inn2_r[0]){
jQuery('#score_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html(message.data.cric.match.teams_2_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_2_r[0]['wkts']); jQuery('#over_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_r[0]['balls'])+" overs)"); }else { jQuery('#score_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html(message.data.cric.match.teams_2_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_2_r[0]['wkts']+" & "+message.data.cric.match.teams_2_inn2_r[0]['score']+" / "+message.data.cric.match.teams_2_inn2_r[0]['wkts']); jQuery('#over_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_inn2_r[0]['balls'])+" overs)"); }
if(message.data.cric.match.teams_1_r[0]['extras']!=null){ jQuery('#extras_1_r_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_r[0]['extras'])); } if(message.data.cric.match.teams_2_r[0]['extras']!=null){ jQuery('#extras_2_r_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_r[0]['extras'])); } if(message.data.cric.match.teams_1_inn2_r[0]['extras']!=null){ jQuery('#extras_1_r_2_'+message.data.cric.match.teams_1_inn2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_inn2_r[0]['extras'])); } if(message.data.cric.match.teams_2_inn2_r[0]['extras']!=null){ jQuery('#extras_1_r_2_'+message.data.cric.match.teams_2_inn2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_inn2_r[0]['extras'])); }
//extras_1_r_2_ // if(prev_bat_team != message.data.cric.team_id){ jQuery('#widget_wrapper').load(document.URL + ' #widget_wrapper'); // } // prev_bat_team = message.data.cric.team_id // }
}); });
Full Scorecard
St. Joseph's College
195/10 & 237/8
(83 overs)
Result
St.Peter's College
244/10 & 57/1
(9.2 overs)
match drawn
St. Joseph's College’s 1st Innings
Batting | R | B | ||||
---|---|---|---|---|---|---|
R.Kelly | c Santhush Gunathilake b Miflal Ameen | 19 | 32 | |||
J.De.Silva | b Santhush Gunathilake | 8 | 20 | |||
N.Sumanasinghe | b Prabasara herath | 5 | 6 | |||
J.Fernandopulle | (runout) Shalith Fernando | 15 | 47 | |||
J.Daniel | c Sulakshana Fernando b Miflal Ameen | 93 | 115 | |||
R.Mahindasinghe | c Santhush Gunathilake b Sachin Silva | 10 | 29 | |||
L.Gamage | c Ruvin Senavirathne b Sachin Silva | 0 | 2 | |||
D.Jayakody | st Shalith Fernando b Kanishka Maduwantha | 13 | 47 | |||
D.Wellalage | b Kanishka Maduwantha | 13 | 22 | |||
M.Wickramage | (runout) Nipunaka Fonseka | 0 | 0 | |||
A.Daniel | not out | 4 | 4 |
Bowling | O | M | R | W | E |
---|---|---|---|---|---|
S.Gunathilake | 7 | 0 | 29 | 1 | 4.14 |
P.Herath | 7 | 0 | 28 | 1 | 4.00 |
M.Ameen | 18 | 3 | 71 | 2 | 3.94 |
S.Silva | 6 | 0 | 20 | 3 | 3.33 |
K.Maduwantha | 15.2 | 1 | 41 | 1 | 2.70 |
St.Peter's College’s 1st Innings
Batting | R | B | ||||
---|---|---|---|---|---|---|
S.Gunathilake | c Ravindu Mahindasinghe b Johanne De Silva | 2 | 10 | |||
S.Fernando | c Revan Kelly b Lakshan Gamage | 0 | 8 | |||
S.Fernando | c Lakshan Gamage b Dunnith Wellalage | 16 | 53 | |||
Shalith.F | lbw by Dunnith Wellalage | 58 | 73 | |||
R.Jayasena | st Ravindu Mahindasinghe b Ashen Daniel | 55 | 66 | |||
N.Fonseka | c Ravindu Mahindasinghe b Ashen Daniel | 11 | 37 | |||
P.Herath | c Nipun Sumanasinghe b Lakshan Gamage | 38 | 62 | |||
K.Maduwantha | b | 14 | 43 | |||
M.Ameen | c Nipun Sumanasinghe b Lakshan Gamage | 5 | 5 | |||
S.Silva | (runout) Ravindu Mahindasinghe | 4 | 10 | |||
R.Senavirathna | not out | 3 | 5 |
Bowling | O | M | R | W | E |
---|---|---|---|---|---|
J.Daniel | 7 | 1 | 31 | 0 | 4.43 |
J.De.Silva | 3 | 1 | 13 | 1 | 4.33 |
L.Gamage | 14 | 0 | 62 | 4 | 4.43 |
D.Wellalage | 14 | 0 | 49 | 2 | 3.50 |
M.Wickramage | 7 | 0 | 34 | 0 | 4.86 |
A.Daniel | 13 | 1 | 41 | 2 | 3.15 |
N.Sumanasinghe | 2 | 0 | 7 | 0 | 3.50 |