புனித ஜோசப் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரி அணிகளுக்கு இடையிலான 45 ஆவது அருட்தந்தை பீட்டர் பிள்ளை ஞாபகார்த்த ஒருநாள் சமரில், டக்வத் லுவிஸ் முறைப்படி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற புனித ஜோசப் கல்லூரி அணி 23 ஆவது தடவையாக வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டுள்ளது.
கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற புனித ஜோசப் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இவ்வாறு, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்த புனித ஜோசப் கல்லூரி அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து ஏமாற்றத்துக்குள்ளாகியது.
Photos : St. Joseph’s College vs St. Peter’s College – 45th Limited Overs Encounter
ThePapare.com | Viraj Kothalawala & Brian Dharmasena | 23/03/2019 Editing and re-using images without permission of ThePapare.com
புனித பேதுரு கல்லூரியின் பந்து வீச்சாளர் தரிக் சபூர் எதிரணியை மிரட்டிக்கொண்டிருந்த தருணத்தில், மத்தியவரிசையில் களமிறங்கிய சச்சிந்த ரவிந்து மற்றும் லக்ஷான் கமகே ஆகியோர் முற்றுமுழுதாக போட்டியை மாற்றக்கூடிய இணைப்பாட்டத்தை பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுச்சேர்த்தனர்.
சச்சிந்த ரவிந்து நிதானமாக ஆடி 104 பந்துகளுக்கு 74 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்ஷான் கமகே 89 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 101 ஓட்டங்களை விளாசினார். இவர்கள் இருவரையும், தவிர ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் மிகக்குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, புனித ஜோசப் கல்லூரி அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
புனித பேதுரு கல்லூரி அணியின் பந்து வீச்சை பொருத்தவரை, தரிக் சபூர் 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், சந்துஷ் குணதிலக்க 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ருவின் செனவிரட்ன 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்.
பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித பேதுரு கல்லூரி அணி 41 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை பெற்றிருந்தபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து நடுவர்கள் போட்டியை நிறுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்ட நிலையில், டக்வத் லுவிஸ் முறைப்படி 10 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த புனித ஜோசப் கல்லூரி அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
புனித பேதுரு கல்லூரி அணியின் சார்பில் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை குவிக்க முற்பட்டிருந்த போதிலும், மந்தமான ஓட்ட வேகமானது அவர்களது தோல்விக்கான முக்கிய காரணமாக அமைந்தது. புனித பேதுரு கல்லூரி சார்பில் சந்துஷ் குணதிலக்க 72 பந்துகளுக்கு 52 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.
ருசிரு, சிஹான் ஆகியோரின் சதத்தினால் வலுப்பெற்றிருக்கும் புனித செர்வதியஸ் கல்லூரி
கிரிக்கெட்டின் பித்துக்காலமான மார்ச் மாதத்தை அலங்கரிக்கும் பாடசாலை அணிகள் இடையிலான கிரிக்கெட் பெரும்
இவருக்கு அடுத்தபடியாக, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தினித் அன்ஜுல 32 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போதும், இவர் 75 பந்துகளை எதிர்கொண்டிருந்தார். புனித ஜோசப் கல்லூரியின் பந்து வீச்சை பொருத்தவரை, அஷேன் டேனியல் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சாலிந்த செனவிரட்ன 36 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்
இதன்படி, போதிய வெளிச்சமின்னை காரணமாக டக்வத் லுவிஸ் முறைப்படி 10 ஓட்டங்களால் வெற்றிபெற்ற புனித ஜோசப் கல்லூரி அணி, அருட்தந்தை பீட்டர் பிள்ளை ஞாபகார்த்த ஒருநாள் சமரின் 23 ஆவது வெற்றியை தம்சவப்படுத்தியுள்ளதுடன், இதில், புனித பேதுரு கல்லூரி அணி இதுவரை 20 வெற்றிகளை மாத்திரமே பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முடிவு – புனித ஜோசப் கல்லூரி 10 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லுவிஸ் முறை)
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Johanne De Zilva | lbw b Tariq Saboor | 6 | 9 | 1 | 0 | 66.67 |
Sheran Fonseka | c Ruwin Senevirathne b Santhush Gunathilake | 1 | 11 | 0 | 0 | 9.09 |
Shevon Daniel | b Tariq Saboor | 11 | 13 | 2 | 0 | 84.62 |
Dineth Jayakody | run out (Ranmith Jayasena) | 7 | 15 | 1 | 0 | 46.67 |
Dilesh Perera | run out (Santhush Gunathilake) | 4 | 10 | 0 | 0 | 40.00 |
Dunith Wellalage | c Santhush Gunathilake b Ruwin Senevirathne | 12 | 30 | 0 | 0 | 40.00 |
Sachintha Ravindu | c Shannon Fernando b Santhush Gunathilake | 74 | 104 | 6 | 0 | 71.15 |
Lakshan Gamage | c Kanishka Maduwantha b Tariq Saboor | 101 | 89 | 7 | 2 | 113.48 |
Ashen Daniel | b Tariq Saboor | 2 | 3 | 0 | 0 | 66.67 |
Shalinda Senevirathne | c Shannon Fernando b Santhush Gunathilake | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Ashan De Alwis | not out | 6 | 4 | 0 | 0 | 150.00 |
Extras | 25 (b 6 , lb 2 , nb 2, w 15, pen 0) |
Total | 250/10 (49.3 Overs, RR: 5.05) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tariq Saboor | 10 | 0 | 42 | 4 | 4.20 | |
Santhush Gunathilake | 8.3 | 0 | 51 | 3 | 6.14 | |
Shivan Perera | 7 | 0 | 39 | 0 | 5.57 | |
Ruwin Senevirathne | 10 | 0 | 30 | 1 | 3.00 | |
Ranmith Jayasena | 5 | 0 | 30 | 0 | 6.00 | |
Kanishka Maduwantha | 7 | 0 | 40 | 0 | 5.71 | |
Wanuja Sahan | 2 | 0 | 10 | 0 | 5.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dinith Anjula | c Shevon Daniel b Shalinda Senevirathne | 32 | 75 | 3 | 0 | 42.67 |
Shannon Fernando | c Ashen Daniel b Lakshan Gamage | 20 | 18 | 4 | 0 | 111.11 |
Santhush Gunathilake | c Johanne De Zilva b Ashen Daniel | 52 | 72 | 2 | 0 | 72.22 |
Ranmith Jayasena | st Sheran Fonseka b Ashen Daniel | 19 | 30 | 0 | 0 | 63.33 |
Nipunaka Fonseka | not out | 19 | 29 | 0 | 0 | 65.52 |
Lashane Rodrigo | c Shevon Daniel b Ashen Daniel | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Shivan Perera | not out | 24 | 23 | 0 | 0 | 104.35 |
Extras | 9 (b 2 , lb 0 , nb 0, w 2, pen 5) |
Total | 175/5 (41 Overs, RR: 4.27) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lakshan Gamage | 9 | 3 | 31 | 1 | 3.44 | |
Ashan De Alwis | 4 | 0 | 27 | 0 | 6.75 | |
Ashen Daniel | 8 | 0 | 26 | 3 | 3.25 | |
Dunith Wellalage | 5 | 0 | 24 | 0 | 4.80 | |
Shevon Daniel | 6 | 0 | 22 | 0 | 3.67 | |
Shalinda Senevirathne | 9 | 0 | 36 | 1 | 4.00 |