ThePapare சம்பியன்ஷிப் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த புனித ஜோசப் கல்லூரி

336

குதிரைப்பந்தய திடல் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் ஆரம்பப் போட்டியில் காலி, மஹிந்த கல்லூரிக்கு எதிராக புனித ஜோசல் கல்லூரி 5-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றி பெற்றது.

போட்டியின் 90 நிமிடங்களிலும் பல கோல் வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டதோடு புனித ஜோசப் மற்றும் மஹிந்த இரு அணிகளும் தலா ஒரு பெனால்டியை தவறவிட்டன.  

FA கிண்ண 16 அணிகள் சுற்றின் போட்டி விபரம்

தேசிய அணி வீரரான அசேல மதுஷான் அழகாக வலைக்குள் பந்தை செலுத்தி கோல் பெறுவதை ஆரம்பித்து புனித ஜோசல் கல்லூரியை முன்னிலை பெறச் செய்தார்.  

எனினும் 12 ஆவது நிமிடத்தில் மஹிந்த கல்லூரிக்கு பொன்னான வாய்ப்பு ஒன்று கிடைத்தது. இதன் போது எதிரணி பெனால்டி எல்லைக்குள் வைத்து மஹிந்த கல்லூரி முன்கள வீரர்களின் கால்களுக்கு பந்து கிடைத்தபோதும் ஜோசப் கல்லூரி கோல்காப்பாளர் மார்ஷல் கொடிக்கார வேகமாக செயற்பட்டு பந்தை தடுத்தார். திரும்பி வந்த பந்தை கோலை நோக்கி உதைத்தபோதும் அது கோல் கம்பத்திற்கு வெளியால் பறந்தது.

17ஆவது நிமிடத்தில் ஜோசப் கல்லூரி தலைவர் கே. டி சில்வா கோல் ஒன்றை பெற அந்த அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஜோசப் கல்லூரி வீரர்களின் சிறப்பான பந்து பரிமாற்றம் மூலம் டி. டுல்ஷானுக்கு எதிரணியின் கோலுக்கு அருகில் பந்து கிடைக்க அவர் அதனை வலைக்குள் புகுத்தினார். இதன் மூலம் ஜோசப் கல்லூரி 3-0 என முன்னிலை பெற்றது.

36 ஆவது நிமிடத்தில் வைத்து மஹிந்த கல்லூரியின் எஸ். யஷ்மில எதிரணி பெனால்டி எல்லைக்குள் பந்தை பறித்து அதனை அபார கோலாக மாற்றினார்.

ஆட்டத்திற்கு திரும்புவதற்கு போராடிய மஹிந்த கல்லூரி பெனால்டி விளிம்பில் இருந்து அதன் தலைவர் பிரீ கிக் ஒன்றை விட்டுக் கொடுத்தார். மஹிந்த கல்லூரியின் கோல்காப்பாளர் டீ. பவன், அசேல மதுஷான் உதைத்த பந்தை இலகுவாக தடுக்க வாய்ப்பு இருந்தபோதும் அந்தப் பந்து அவரது கையுறையில் இருந்து நழுவி வலைக்குள் செல்ல புனித ஜோசப் கல்லூரிக்கு நான்காவது கோலாக மாறியது.

முதல் பாதி: புனித ஜோசப் கல்லூரி 4 – 1 மஹிந்த கல்லூரி

தனது ஹெட்ரிக் கோலை புகுத்த அசேல மதுஷானுக்கு இரு வாய்ப்புகள் கிடைத்தபோதும் அவை தவறிப்போயின. முதல் வாய்ப்பாக எதிரணி பெனால்டி எல்லைக்குள் அவரிடம் பந்து கிடைத்தபோது சிறப்பாக அதனை கோலை நோக்கி உதைத்தபோதும் பவன் அதனை அபாரமாகத் தடுத்தார். தொடர்ந்து 68ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லைக்குள் கிடைத்த சந்தர்ப்பத்தை அவர் பூர்த்தி செய்ய தவறினார்.   

அசேல எதிரணி கோலுக்கு அருகில் முன்னேறியபோது அவர் கீழே வீழ்த்தப்பட்டதை அடுத்து நடுவர் ஸ்பொட் கிக் வழங்கினார். ஜேசன் பெர்னாண்டோ அந்த பெனால்டி உதையை செலுத்தியபோது பவன் இடதுபக்கமாகப் பாய்ந்து அதனை தடுத்தார்.  

வெற்றிப் பாதைக்கு திரும்பிய மன்செஸ்டர் யுனைடெட்

ஒரு சந்தர்ப்பத்தில் கொடிக்கார, மஹிந்த கல்லூரியின் முன்கள வீரர்களின் கோல் முயற்சியை அபாரமாக தடுத்ததை காணமுடிந்தது. 65 ஆவது நிமிடத்தில் போட்டியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் மஹிந்த கல்லூரிக்கு பெனால்டி கிக் வழங்கப்பட்டது. ஜோசப் கல்லூரியின் பெனால்டி எல்லையில் மஹிந்த கல்லூரியின் முன்கள வீரர் வீழ்த்தப்பட்டதை அடுத்தே ஸ்பொட் கிக் வாய்ப்புக் கிடைத்தது. கே. கிம்ஹானவின் உதை கம்பத்தில்பட்டு திரும்பியபோது பலவீனமான உதையை கொடிக்கார வலைக்குள் செல்லாமல் தடுத்தார்.  

வேகமான முதல் பாதிக்குப் பின்னர் அடுத்து கோல் ஒன்றை பெற 85 ஆவது நிமிடம் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. மஹிந்த கல்லூரி கோல்காப்பாளர் எதிரணி பக்கத்திற்கு வந்ததை அடுத்து அதனை பயன்படுத்திக் கொண்ட செனால் சந்தேஷ் நெருக்கடி இன்றி கோல் புகுத்தினார்.  

முழு நேரம்: புனித ஜோசப் கல்லூரி 5 – 1 மஹிந்த கல்லூரி

ThePapare.com போட்டியின் சிறந்த வீரர் – அசேல மதுஷான் (புனித ஜோசப் கல்லூரி)

கோல் பெற்றவர்கள்

புனித ஜோசப் கல்லூரி – அசேல மதுஷான் 5′, 40′, சமத் ரஷ்மித்த 17′, டி. துல்ஷான் 29′, செனால் சந்தேஷ் 85′

மஹிந்த கல்லூரி – எஸ். யஷ்மில 36′

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<