2018/19 பருவ காலத்திற்கான சிங்கர் பிரிவு 2 பாடசாலைகள் கிரிக்கெட் தொடரில் கேகாலை,கேகலு வித்தியாலய அணியினரும் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியிரும் தமக்கிடையிலான இரண்டு நாட்களைக் கொண்ட இன்னிங்ஸ் போட்டியில் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் போட்டியிட்டிருந்தனர்.
இரண்டாவது இன்னிங்சில் அணித்தலைவர் அபினாசின் சுழல் பந்துவீச்சு மற்றும் டினோசனின் சகல துறைகளிலும் பிரகாசிக்க கேகாலை கேகளு வித்தியாலய அணியை 131 ஓட்டங்களால் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றிபெற்றது.
தமிழ் யூனியன் கழகத்திற்காக சதம் கடந்த தரங்க பரணவிதான
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி முன்வரிசைத் துடுப்பாட்ட வீரர்களின் நேர்த்தியான துடுப்பாட்டத்தின் துணையுடன் 44 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களினையும் இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். துடுப்பாட்டத்தில் டினோசன் 37 ஓட்டங்களையும், அன்ரன் அபிஷேக் 34 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் கிம்ஹான் 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், மதுஷன் 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பின்னர் தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடித்தாடிய கேகாலை தரப்பினரை, சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் 105 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினர். கேகாலை தரப்பில் சாமர ரத்னாயக்க தனித்து போராடி 40 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்தார். சென். ஜோன்ஸ் கல்லூரி சார்பாக பந்துவீச்சில் டினோசன் மற்றும் சரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
26 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த யாழ் வீரர்களுக்கு முன்வரிசை வீரர்கள் ஏமாற்ற, டினோசன் அரைச்சதமொன்றினை பெற்றுக்கொடுக்க, பின்வரிசையில் களம்புகுந்த இளைய வீரர் அன்ரன் அபிஷேக்கும் 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, சென். ஜோன்ஸ் வீரர்கள் 170 ஓட்டங்களை எதிரணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.
Photos: St. John’s College, Jaffna vs Kegalu Vidyalaya, Kegale | Day 02 | U19 Division 02 | Traditional
பந்துவீச்சில் கவிந்து நிர்மால் மற்றும் சணுத புண்சித் ஆகியோர் முறையே 14 மற்றும் 35 ஓட்டங்களுக்கு தலா3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் சாக்கு ஆடுதளத்தில் (Mat pitch) இடம்பெற்ற இப்போட்டியில் 170 ஓட்டங்களென்பது இலகுவானதாக இருப்பினும், நான்காவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த கேகாலை வீரர்களை வெறுமனே 61 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்க செய்த யாழ் வீரர்கள் 131 ஓட்டங்களினால் போட்டியை வெற்றிகொண்டனர்.
பந்துவீச்சில் சென். ஜோன்ஸ் கல்லூரி சார்பாக சின் அணித்தலைவர் அபினாஷ் 16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள் என்ற சிறப்பு பெறுமதியுடன் நிறைவுசெய்தார்.
ThePapare சம்பியன்ஷிப் மூன்றாம் இடத்தைப் பெற்றது புனித பத்திரிசியார் அணி
O/L பரீட்சைக்கு பின்னரான போட்டிகளினை டினோசன், அபிஷேக் ஆகியோரது சகலதுறை ஆட்டம் மற்றும் அபினாஷின் பந்து வீச்சு ஆகியவற்றின் துணையுடன் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் தமக்கு சாதகமான முறையில் போட்டியை வெற்றியுடன் ஆரம்பித்திருக்கின்றனர்.
போட்டியின் சுருக்கம்
சென். ஜோன்ஸ் கல்லூரி,யாழ்ப்பாணம் (முதல் இன்னிங்ஸ்) – 154 (44) – T டினோசன் 37, அன்ரன் அபிஷேக் 34, தனுஜன் 26, சௌமியன் 24, ஜிம்ஹான் 4/45, மதுஷான் 3/52, சணுதா புண்சித் 2/19
கேகளு வித்தியாலயம்,கேகாலை(முதல் இன்னிங்ஸ்) – 105 (47) – சாமர ரத்நாயக்க 40, சரண் 2/12, T டினோசன் 2/15, அபினாஷ் 2/38
சென். ஜோன்ஸ் கல்லூரி,யாழ்ப்பாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) -143 (47) – டினோசன் 50, அன்ரன் அபிஷேக் 27, கவிந்து நிர்மால் 3/14, சணுதா புண்சித் 3/35, ஜிம்ஹான் 2/34
கேகளு வித்தியாலயம்,கேகாலை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 61 (33.4) – அபினாஷ் 5/16, அன்ரன் அபிஷேக் 2/18
போட்டி முடிவு – சென். ஜோன்ஸ் கல்லூரி 131 ஓட்டங்களால் வெற்றி.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<