யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி மற்றும் யாழ்ப்பாணத்தின் மற்றுமொரு பாடசாலையான யாழ் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான பாரம்பரிய கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 59 ஓட்டங்களால் சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.
சகல துறைகளிலும் அசத்திய அன்ரன் அபிஷேக்; சம்பியன் பட்டம் வென்ற சென். ஜோன்ஸ்
பிரித்தானியா தமிழ் கிரிக்கெட் லீக் அனுசரணையில் யாழ் மாவட்ட பாடசாலைகள் ..
சென்.ஜோன்ஸ் கல்லூரியின் சொந்த மைதானத்தில் திங்கட்கிழமை (19) ஆரம்பமாகிய இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த சென்.ஜோன்ஸ் வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து கொண்டனர்.
அதற்கமைய முதலில் ஆடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி வீரர்களுக்கு ஆரம்ப வீரரான C.P. தனுஜன் அபார சதம் கடந்து வலுச்சேர்த்தார். இதோடு மூன்றாம் இலக்கத்தில் துடுப்பாடியிருந்த M. அபினாஷும் அரைச்சத உதவி ஒன்றினை வழங்க, 59.4 ஓவர்களில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியினர் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 315 ஓட்டங்களினை குவித்துக் கொண்டனர்.
சென். ஜோன்ஸ் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் சதம் கடந்த தனுஜன் 15 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 103 ஓட்டங்களினையும், அரைச்சதம் கடந்திருந்த அபினாஷ் 89 ஓட்டங்களினையும் பெற்றிருந்தனர்.
இதேவேளை, இந்துக் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பாக K. சந்தோஷ் 91 ஓட்டங்களை விட்டுத்தந்து 7 விக்கெட்டுக்களையும், Y. விதுஷன் 3 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்துக் கல்லூரி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்திருந்தது. ஆரம்பத்தில் இருந்தே ஓட்டங்கள் சேர்க்க சிரமப்பட்ட அவ்வணி வீரர்கள் மந்தகதியிலான இன்னிங்ஸ் ஒன்றினை காட்டி 63 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 133 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.
இந்துக் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் இரண்டு வீரர்கள் மாத்திரமே (J. லினுசங்கர், U. கேதீப்) 20 ஓட்டங்களினை தாண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சென். ஜோன்ஸ் கல்லூரியின் பந்துவீச்சில், இந்தப் பருவகாலத்தில் தொடர்ச்சியாக அசத்தி வரும் V. யதுசன் 4 விக்கெட்டுக்களையும் J. சுதீஷன் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
இந்துக் கல்லூரி முதல் இன்னிங்சில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதனால், பலோவ் ஒன் முறையில் 182 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் மீண்டும் இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாட தொடங்கியிருந்தது.
இம்முறையும் சென்.ஜோன்ஸ் வீரர்கள் பந்துவீச்சில் அசத்த 123 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து யாழ். இந்துக் கல்லூரி அணியினர் இன்னிங்ஸ் மற்றும் 59 ஓட்டங்களால் தோல்வியினை தழுவிக் கொண்டனர்.
மீண்டும் சூடுபிடித்துள்ள பாடசாலைகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் சமர்
இலங்கை மக்களின் மகிழ்ச்சிக்கு காலங்காலமாக பிரதான காரணங்களில் …
இந்துக் கல்லூரி சார்பான துடுப்பாட்டத்தில் மத்திய வரிசையில் களமிறங்கியிருந்த Y. விதுஷன் அரைச்சதம் ஒன்றினை கடந்து தனித்து நின்று போராடிய போதும் ஏனைய வீரர்கள் கைகொடுக்காமையினால் அவரது போராட்டம் வீணாகியிருந்தது.
சென். ஜோன்ஸ் கல்லூரியின் பந்துவீச்சு சார்பாக M. அபினாஷ் 4 விக்கெட்டுக்களையும், V. யதுஷன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தமது அணியின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கியிருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
சென். ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 315 (59.4) C.P.. தனுஜன் 103, M. அபினாஷ் 89, K. சந்தோஷ் 7/91, Y. விதுஷன் 3/37
இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 133 (63) J. லினுசங்கர் 24, V. யதுஷன் 4/36, J. சுதீஷன் 3/12
இந்துக் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 123 (32) Y. விதுஷன் 50*, M. அபினாஷ் 4/33, V. யதுஷன் 2/23
முடிவு – சென். ஜோன்ஸ் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 59 ஓட்டங்களால் வெற்றி