இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் பிரிவு II அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிண்ண போட்டித் தொடரின் முதலாவது சுற்று ஆட்டமொன்றிற்காக, யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் மாத்தறை ராஹுல கல்லூரி அணிகள் மாத்தறை உயன்வத்த அரங்கில் புற்தரை ஆடுதளத்தில் போட்டியிட்டிருந்தன.
போட்டியில் மிக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய சென். ஜோன்ஸ் வீரர்கள் 163 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியிருந்தனர்.
வீரர்களை உள்வாங்க எனக்கும் இலஞ்சம் கொடுக்க முற்பட்டனர் – ஹரீன் பெர்னாண்டோ
நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களம் நுழைந்த மாத்தறை வீரர்கள் வெறுமனே 21 ஓட்டகளுக்கு முதல் 3 விக்கெட்டுக்களை இழந்தனர். தொடர்ந்து வந்த வீரர்களையும் சென். ஜோன்ஸின் சுழல் பந்து வீச்சு ஜோடியான செல்வதாஸ் சரன் மற்றும் மேர்ஃபின் அபினாஷ் வெளியேற்ற ராஹுல கல்லூரியினர் 83 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர்.
துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் பாக்ய எதிர்வீர 27 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் சரன் 4 விக்கெட்டுக்களையும், முறையே அபினாஷ் மற்றும் டினோசன் 3 மற்றும் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.
சென். ஜோன்ஸ் வீரர்கள் முதலாவது இன்னிங்ஸில் முன்னிலை பெறுவதற்கு ஏதுவான ஓட்ட எண்ணிக்கையாக ராஹுல கல்லூரியினர் பெற்ற 83 ஓட்டங்கள் அமைந்திருந்தபோதும் துடுப்பட்டத்தில் தடுமாறிய சென். ஜோன்ஸ் வீரர்கள் வெறுமனே 63 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர். குறிப்பாக முதலாவது விக்கெட் 15 ஓட்டங்களை பெற்றிருக்கையிலும், இறுதி 4 விக்கெட்டுக்களும் வெறுமனே 5 ஓட்டங்களுக்குள்ளும் வீழ்த்தப்பட்டிருந்தது.
சுழல் பந்துவீச்சாளர்களான திமிர சந்திக 6 விக்கெட்டுக்களையும், பசிந்து அவிஷ்க 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.
20 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய ராஹுல கல்லூரியினர் பினர சங்கீத் (37), சசித் மனுசங்கர (34) தரிந்து ராஜபக்ஷ (30) ஆகியோரது துடுப்பாட்டத்தின் உதவியுடன் 181 என்ற வலுவான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக்கொண்டனர்.
சென். ஜோன்ஸ் சார்பில் அபினாஷ், சரன் ஜோடி தலா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.
202 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் வீரர்கள் வெறுமனே 38 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் மற்றொரு சுழல் பந்துவீச்சாளரான சசித் மனுசங்கர 6 விக்கெட்டுக்களையும், திமிர சந்திக 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.
சங்கக்கார, டில்ஷான், ஜயசூரியாவை பின்தள்ளிய கோஹ்லி
முதலாவது இன்னிங்ஸில் முன்னிலை பெறும் சந்தர்ப்பத்தினை தவறவிட்ட சென். ஜோன்ஸ் கல்லூரி தமது குழுவில் போட்டிக்கு முன்னதாக இரண்டாவது இடத்திலிருந்த யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் மூன்றாவது இடத்திருந்த ராஹுல கல்லூரிக்கு எதிராக மோசமான தோல்வியொன்றினை சந்தித்தனர்.
போட்டியின் சுருக்கம்
ராஹுல கல்லூரி, மாத்தறை (முதல் இன்னிங்ஸ்) – 83 (37.4) – பாக்யா எதிர்வீர 27, செல்வதாஸ் சரன் 4/11, மேர்ஃபின் அபினாஷ் 3/21, தெய்வேந்திரம் டினோசன் 2/14
சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் (முதல் இன்னிங்ஸ்) – 63 (23.4) – திமிர சந்திக 6/18, பசிந்து அவிஷ்க 2/03
ராஹுல கல்லூரி, மாத்தறை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 181 (50.1) – பினர சங்கீத் 37, சசித் மனுரங்க 34, தரிண்டு ராஜபக்ஷ 30, மேர்ஃபின் அபினாஷ் 4/30, செல்வதாஸ் சரன் 4/52
சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 38 (15.4) – சசித் மனுரங்க 6/18, திமிர சந்திக 3/16போட்டி முடிவு – ராஹுல கல்லூரி 163 ஓட்டங்களால் வெற்றி
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க