கல்கிசை தோமியர் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற்றின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகள் இடையே ஒழுங்கு செய்யப்பட்ட சம்பிரதாயபூர்வமான (Traditional), கிரிக்கெட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.
>>“சங்கா ஓய்வுபெற்றதை நினைத்து மகிழ்ச்சியடைந்தேன்” – அஸ்வின்
இரு அணிகளும் மோதியிருந்த இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டி சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று (28) ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென். தோமஸ் கல்லூரி அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை மைதானத் சொந்தக் காரர்களுக்கு வழங்கினர்.
அதன்படி முதலில் துடுப்பாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் தமது முதல் இன்னிங்ஸில் 58.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 132 ஓட்டங்களை எடுத்தனர்.
சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் சச்சின் அன்டர்சன் 25 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராக மாற, ஆதிப் சித்திக் வெறும் 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை புனித தோமியர் கல்லூரி அணிக்காக கைப்பற்றியிருந்தார். அதேநேரம் மனித் பெரேராவும் தோமியர் அணிக்காக 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய புனித தோமியர் கல்லூரி அணி மத்திய வரிசைத் துடுப்பாட்டவீரர் மாஹித் பெரேரா ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்ட சதத்துடனும் (101*), ரொமேஷ் மெண்டிஸின் அபார அரைச்சதத்துடனும் (92) 7 விக்கெட்டுக்களை இழந்து 279 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது. இங்கு சென். ஜோன்ஸ் கல்லூரியின் இன்னிங்ஸ் சார்பில் அன்டொன் அபிஷேக் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதனையடுத்து 147 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி இந்த இன்னிங்ஸில் 55.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 241 ஓட்டங்கள் எடுத்தது.
சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் இம்முறை அரைச்சதம் விளாசிய அன்டொன் அபிஷேக் 77 ஓட்டங்களை குவித்திருக்க, சங்கித் ஸ்மித் 41 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மறுமுனையில், புனித தோமியர் கல்லூரி அணியின் பந்துவீச்சில் ரயான் பெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.
>>பஞ்சாப் அணியின் புதிய தலைவராக மயங்க் அகர்வால் நியமனம்
சென்.ஜோன்ஸ் கல்லூரியின் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்து புனித தோமியர் கல்லூரி அணிக்கு 95 ஓட்டங்கள் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கினை அடைய இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய புனித தோமியர் கல்லூரி அணி, போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேரம் நிறைவுக்கு வரும் போது 06 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து 17 ஓட்டங்களுடன் காணப்பட்டிக்க, போட்டி சமநிலையில் நிறைவுற்றது.
போட்டியின் சுருக்கம்
சென். ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 132 (58.1) சச்சின் அன்டர்சன் 25, ஆதிப் சித்திக் 5/44, மனித் பெரேரா 3/22
புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 245 (55.1) மனித் பெரேரா 101*, ரொமேஷ் மெண்டிஸ் 92, அன்டொன் அபிஷேக் 2/18
சென். ஜோன்ஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 279/7d (64.1) அன்டொன் அபிஷேக் 77, சங்கீத் ஸ்மித் 41, ரயான் பெர்னாண்டோ 4/08
புனித தோமியர் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 17/2 (6)
முடிவு – போட்டி சமநிலை அடைந்தது
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<