இலங்கையின் முதலாவது பெண் கிரிக்கெட் உடற் பயிற்சியாளரான ஸ்ரீபாலி வீரக்கொடி

1324

Master and Fitness Trainer தகுதியைப் பெற்றுக்கொண்ட முதலாவது இலங்கை வீராங்கனை என்ற பெருமையை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஸ்ரீபாலி வீரக்கொடி பெற்றுக் கொண்டுள்ளார்.

இதன்படி, இலங்கை மகளிர் கிரிக்கெட்டில் சர்வதேச தரத்திலான உடற் பயிற்சியாளர் கற்கை நெறியை நிறைவு செய்த முதல் வீராங்கனை என்ற பெருமையையும் அவருக்குச் சேர்கின்றது.

இது தொடர்பில் பங்களாதேஷின் BDCrictime இணையத்தளத்துக்கு அவர் வழங்கிய பேட்டியில் கருத்து தெரிவிக்கையில்,

”அவுஸ்திரேலியாவில் உள்ள முன்னணி உடற்பயிற்சி நிலையமொன்றினால் நடத்தப்பட்ட சர்வதேச அங்கீகாரம் கொண்ட Master and Fitness உடற் பயிற்சியாளராகும் கற்கை நெறியை கடந்த சில வருடங்களாக பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் முன்னெடுத்து வந்தேன்.”

”நான் கடந்த 12 வருடங்களாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகின்றேன். எனது தொழில்முறை வாழ்க்கையில் இருந்த மற்றுமொரு கனவு தான் இது. ”

”கடந்த வருடம் ஏன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை என பெரும்பாலானோர் என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கான காரணம் இந்தப் பயிற்சி நெறியை முடிப்பதற்காக நேரத்தை ஒதுக்கியது இருந்தது.” என தெரிவித்தார்.

”தற்போது என்னால் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் அணிக்கும் உடற் பயிற்சியாளராக இணைந்துகொள்ள முடியும். அதற்கான தகுதியினை நான் பெற்றுக் கொண்டுள்ளேன். யாராவது எனக்கு அழைப்பு விடுத்தால் அதை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை விபத்தில் மரணம்

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனையும், இலங்கை கிரிக்கெட்…

34 வயதான வவதுகை வேகப்பந்துவீச்சாளரான ஸ்ரீபாலி வீரக்கொடி இதுவரை இலங்கை மகளிர் அணிக்காக 89 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுக்களையும், 58 டி20 போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

அத்துடன், அவர் இறுதியாக கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய மகளிர் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணியினை பிரதிநிதித்துவம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க