டி20 ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர் பங்களாதேஷில் நேற்று (24) ஆரம்பமாகியது. மார்ச் 6ம் திகதி வரை நடைபெறும் இப்போட்டித்தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், போட்டியை நடத்தும் பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த தொடரின் 2-வது போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இன்று (25) மீர்பூர் ஷேர் பங்களா தேசிய விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் தலைவர் அம்ஜத் ஜாவிட் இலங்கை அணியை முதலில் துடுபெடுத்தாட அழைப்பு விடுத்தார்.
புகைப்படங்கள் : ஆசியக் கிண்ணம் 2016 – இலங்கை எதிர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
இதற்கமைய களமிறங்கிய இலங்கை அணி முதல் 10 ஓவர்களில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டில்ஷான் மற்றும் சந்திமல் ஜோடி சிறப்பாக விளையாடி ஆரம்ப விக்கட்டுக்காக 68 ஓட்டங்களை பகிர்ந்தார்கள். அதன் பின் டில்ஷான் 27 ஓட்டங்களோடு ஆட்டமிழக்க இலங்கை அணி அடுத்தடுத்து விக்கட்டுகளை இழக்க துவங்கியது. இவ்வாறு விக்கட்டுகளை இழந்து இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இலங்கை அணி சார்பாக சந்திமல் 50 அதிகபட்ச ஓட்டமாக பெற்றார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் பந்துவீச்சில் தலைவர் அம்ஜத் ஜாவிட் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை கைபற்ற ஷெசாட் மற்றும் நவீட் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு 120 பந்துகளில் 130 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு தமது இனிங்சை ஆரம்பித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி தாம் சந்தித்த முதல் பந்து ஓவரிலேயே யோர்கர் மன்னன் மலிங்கவின் நுட்பமான பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 2 விக்கட்டுகளை பலி கொடுத்தது. அதன் பின் இலங்கை அணியை விட வேகமாக அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் மிக சிறப்பாக தலைவர் என்ற ரீதியில் பொறுப்பாக பந்து வீசி யோர்கர் மன்னன் மலிங்க 4 ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை சரிக்க இன் ஸ்விங் கில்லாடி குலசேகர 4 ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும் சுழற்பந்து ஜாம்பவான் ஹேரத் 4 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும் கைபற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு துணை புரிந்தனர். இதன் படி 14 ஓட்டங்களால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை இலங்கை அணி தோற்கடித்தது. போட்டியின் ஆட்டநாயகனாக ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி 4 விக்கட்டுகளை வீழ்த்திய இலங்கை டி20 அணியின் தலைவர் லசித் மலிங்க தெரிவு செய்யப்பட்டார்.
13வது ஆசியக் கிண்ணப் போட்டித்தொடரின் 3வது போட்டியில் நாளை போட்டியை நடத்தும் பங்களாதேஷ் அணி இன்று இலங்கை அணியுடன் தோல்வியை சந்தித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எதிர்கொள்கிறது. லசித் மலிங்க தலமையிலான இலங்கை அணிக்கான அடுத்த போட்டி எதிர்வரும் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மஸ்ரபீ மொர்டசா தலமையிலான பங்களாதேஷ் அணியோடு இரவு 7 மணிக்கு இன்று போட்டி நடந்த மீர்பூர் ஷேர் பங்களா தேசிய விளையாட்டரங்கத்தில் நடைவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Full Scorecard
Batsman | How Out | Bowler | Runs | 4s | 6s | SR | |
Total | (20 overs) | 129 for 8 wickets | |||||
Chandiaml | c. M.Shahzad | b. Amjad Javed | 50 | 7 | 1 | 128.20 | |
Dilshan | c. M.Usman | b. Amjad Javed | 27 | 4 | 0 | 96.42 | |
Siriwardana | c. Saqlain Haider | b. Amjad Javed | 6 | 0 | 0 | 85.71 | |
Shanka | c. Shaiman Anwar | b. M.Naveeed | 5 | 0 | 0 | 45.45 | |
Mathews | lbw | b. Rohan Mustafa | 8 | 0 | 0 | 88.88 | |
Jayasuriya | b. M.Naveeed | 10 | 2 | 0 | 142.85 | ||
Kapugedara | c. Ahmed Raza | c. M.Shahzad | 10 | 0 | 0 | 90.90 | |
Kulasekara | c. Patil | c. M.Shahzad | 7 | 1 | 0 | 100.00 | |
Chameera | not out | 1 | 0 | 0 | 100.00 | ||
Extras | 4w, lb 1 | 5 | |||||
Did not bat: Herath, SL Malinga*
Bowler | Overs | Maidens | Runs | Wickets | Econ |
M.Naveeed | 4 | 0 | 27 | 2 | 6.75 |
Qadeer Ahmed | 2 | 0 | 18 | 0 | 9.00 |
Amjad Javed | 4 | 0 | 25 | 3 | 6.25 |
M.Shahzad | 3 | 0 | 27 | 2 | 9.00 |
Ahmed Raza | 4 | 0 | 14 | 0 | 3.50 |
Rohan Mustafa | 3 | 0 | 17 | 1 | 5.66 |
Batsman | How Out | Bowler | Runs | 4s | 6s | SR | |
Total | (20 overs) | 115 for 9 wickets | |||||
Rohan Mustafa | lbw | b. Malinga | 0 | 0 | 0 | 0.00 | |
M.Kaleem | c. Mathews | b. Kulasekara | 7 | 0 | 0 | 63.63 | |
M.Shahzad | b. Malinga | 1 | 0 | 0 | 50.00 | ||
M.Usman | c. Kapugedara | b. Kulasekara | 6 | 1 | 0 | 66.66 | |
Shaiman Anwar | c. Chandimal | b. Herath | 13 | 2 | 0 | 86.66 | |
Patil | c & b. Malinga | 37 | 3 | 2 | 102.77 | ||
Saqlain Haider | c. Chandimal | b. Herath | 1 | 0 | 0 | 11.11 | |
Amjad Javed | c. Kapugedara | b. Kulasekara | 13 | 0 | 0 | 72.22 | |
M.Naveed | c. Mathews | b. Malinga | 10 | 1 | 0 | 100.00 | |
Ahmed Raza | not out | 9 | 0 | 0 | 112.50 | ||
Qadeer Ahmed | not out | 2 | 0 | 0 | 50.00 | ||
Extras | 6w, lb 2, b 1, nb 7 | 16 | |||||
Bowler | Overs | Maidens | Runs | Wickets | Econ |
Mailnga | 4 | 0 | 26 | 4 | 6.50 |
Kulasekara | 4 | 1 | 10 | 3 | 2.50 |
Mathews | 3.4 | 0 | 24 | 0 | 6.54 |
Herath | 4 | 0 | 22 | 2 | 5.50 |
Chameera | 3.2 | 0 | 22 | 0 | 6.60 |
Siriwardana | 1 | 0 | 8 | 0 | 8.00 |