ஸ்பெய்னின் பார்சிலோனாவில் எதிர்வரும் ஜூலை மாதம் 27ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான எக்கின் மாஸ்டர்ஸ் உலகக் கிண்ண ஹொக்கி போட்டிகளில் இலங்கை மாஸ்டர்ஸ் மகளிர் ஹொக்கி அணியும் முதற்தடவையாக பங்குபற்றவுள்ளது.
ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்க இலங்கை ஹொக்கி அணி தகுதி
இந்தோனேஷிய தலைநகரம் ஜகார்த்தாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில்….
சர்வதேச ஹொக்கி சம்மேளனத்தின் பூரண ஒத்துழைப்புடன் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகின்ற (EXIN Masters WoldCup) இப்போட்டித் தொடரானது 2012ஆம் ஆண்டு முதற்தடவையாக நடைபெற்றது. இதில் உலகம் பூராகவுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீராங்கனைகள் பங்குபற்றுகின்றமை சிறப்பம்சமாகும்.
இம்முறை போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, நியூஸிலாந்து, கானா, ஸ்பெய்ன் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இரண்டு குழுக்களாக மோதவுள்ளன.
இதேநேரம், இலங்கை மகளிர் ஹொக்கி அணிக்கு 5 தடவைகள் தலைவியாகச் செயற்பட்ட சோபிதா மெண்டிஸ் இப்போட்டிகளில் இலங்கை அணியை வழிநடத்தவுள்ளார்.
ஸ்பெய்னின் பார்சிலோனாவில் நடைபெறவுள்ள 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான எக்கின் மாஸ்டர்ஸ் உலகக் கிண்ண ஹொக்கி போட்டிகளில் பங்குபற்றவுள்ள இலங்கை மாஸ்டர்ஸ் மகளிர் ஹொக்கி அணியை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தும் மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் மகளிர் ஹொக்கி சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு என்பன நேற்றுமுன்தினம் (09) விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன்வைட் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா கருத்து வெளியிடுகையில்,
Photos: Sri Lanka Masters Women Hockey Team 2018
Photos of Sri Lanka Masters Women Hockey Team 2018 Title Sri Lanka Masters Women Hockey Team 2018 / Comment Share Comment Share
;
”இளம் பராயத்தில் விளையாட்டுத்துறையில் ஈடுபட்டு சாதிப்பது இலகுவானது. ஆனால், வயது செல்லச்செல்ல போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெறுவது என்பது சிரமமானது. அதிலும் குறிப்பாக விளையாட்டுக்கு வயதெல்லை இல்லை என்பதற்கு இந்த வீராங்கனைகள் சிறந்த உதாரணமாகும். இது நாட்டின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு எடுத்துக் காட்டாகும். எனினும், குடும்ப மாதர்களான பின்னரும் விடா முயற்சியுடன் ஹொக்கி விளையாட்டில் ஈடுபட்டு வரும் வீராங்கனைகளை உண்மையில் பாராட்டுகின்றோம்” என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை மாஸ்டர்ஸ் மகளிர் ஹொக்கி சங்கத்தின் போசகரும், நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இங்கு உரையாற்றுகையில்,
”எமது அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஹொக்கி பிரபலமான விளையாட்டாக இருந்தாலும் இலங்கையில் ஹொக்கி பயிற்சியகங்கள் இல்லை. அதற்கான வசதி வாய்ப்புகளும் இல்லை. எனவே, முன்னாள் வீராங்கனைகள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள இந்த சங்கத்தின் ஊடாக எமது ஆடவர் மற்றும் மகளிர் ஹொக்கி அணிகளுக்கு எதிர்காலத்தில் முன்னேற்றம் காணமுடியும். மேலும், ஹொக்கி உலகக் கிண்ணத்தில் பங்கேற்று இந்த வீராங்கனைகள் பெற்றுக்கொள்கின்ற அனுபவம் நிச்சயம் இந்நாட்டின் ஹொக்கி விளையாட்டில் திருப்புமுனையை ஏற்படுத்தும்” எனவும் தெரிவித்தார்.
இதேநேரம், இலங்கை மாஸ்டர்ஸ் மகளிர் ஹொக்கி அணியின் தலைவி சோபிதா மெண்டிஸ் கருத்து வெளியிடுகையில், ”இலங்கை தேசிய மகளிர் அணியில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளே மாஸ்டர்ஸ் மகளிர் அணியிலும் இடம்பெற்றுள்ளனர். சங்கத்திலிருந்து அங்கத்துவ நிதியைக் கொண்டும் தனிப்பட்டவர்களின் நிதியைக்கொண்டுமே நாங்கள் அண்மையில் மலேசியா சென்று அரை இறுதிவரை முன்னேறினோம். எனவே, பார்சிலோனாவிலும் எம்மால் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அரை இறுதிவரை முன்னேற முடியும் என நம்புகின்றோம். மேலும், அமைச்சர்களான பைசர் முஸ்தபா, ரவூப் ஹக்கீம் ஆகியோர் வழங்கிவரும் ஆசோலனைகளும் உதவிகளும் எமக்கு தெம்பூட்டுவதாக அமைகின்றது” என்றார்.
இலங்கை அணி விபரம்
சோபிதா மெண்டிஸ் (தலைவி), ருபிகா த சில்வா, பிரியன்தா ராஜபக்ஷ, இரோமி குணவர்தன, வாசனா ஏக்கநாயக்க, ஈஷா அமரசேகர, சந்திமா ராஜவர்தன, ஷெரின் பிராபகரன், சுனேத்ரா பெரேரா, மனோஜ் பிரதீபிகா, சன்ஜி வாசுதேவ, நிஷாந்தி குபுருகமுவ, துர்கா ஹோப்மென், சமிலா குணவர்தன, அப்சரா குணவர்தன, நிஸங்ஸலா ரொசய்ரோ, ரேனுகா யாப்பா, ஆஷா சேரசிங்க,
ஜி. ருவைஸ் சேலா (முகாமையாளர்)
எம்.ஜி.எம் நளீன் (பயிற்றுவிப்பாளர்)
மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க