இலங்கையில் முதல்தடவையாக அடுத்த வருடம் மார்ச் மாதம் சர்வதேச பேஸ்போல் போட்டித் தொடரொன்றை நடாத்த இலங்கை பேஸ்போல் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜப்பானின் மியசாகி நகரில் அண்மையில் இடம்பெற்ற ஆசிய பேஸ்போல் சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின்போது இலங்கையில் பேஸ்போல் போட்டித் தொடரொன்றை நடாத்துவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டு விழாவில் கிரிக்கெட் திறன்களை கையாளும் பாகிஸ்தான் பேஸ்போல் அணி
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் 18வது ஆசிய விளையாட்டு
இதன்படி, தியகம பேஸ்போல் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டித் தொடரில் ஆப்கானிஸ்தான், இந்தியா, ஈரான், ஈராக், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பங்குபற்றவுள்ளன.
இரண்டு பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கிண்ண பேஸ்போல் போட்டித் தொடருக்கு தகுதிபெறும்.
இந்தப் போட்டித் தொடர் குறித்து இலங்கை பேஸ்போல் மற்றும் மென்பந்து சங்கத்தின் தலைவர் பாஸில் ஹுசைன் கருத்து வெளியிடுகையில், ”இலங்கையில் முதல்தடவையாக சர்வதேச பேஸ்போல் போட்டித் தொடரொன்று இடம்பெறுவது எமக்கு மிகவும் பெருமையையும், கௌரவத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இலங்கையின் பேஸ்போல் விளையாட்டின் முன்னேற்றத்தை முழு உலகிற்கும் காண்பிப்பதற்கு இந்த தொடர் முக்கிய பங்கு வகிக்கும்” என தெரிவித்தார்.
கடந்த 1980இல் இலங்கையில் பேஸ்போல் விளையாட்டு அறிமுகமாகியிருந்ததுடன், தற்போது ஆசிய தரவரிசையில் 7ஆவது இடத்தையும், உலக தரவரிசையில் 40ஆவது இடத்தையும் இலங்கை அணி பெற்றுக்கொண்டுள்ளது.
ஆசிய விளையாட்டு விழாவில் 8ஆவது இடத்தை தக்கவைத்த இலங்கை ஹொக்கி அணி
ஆசிய விளையாட்டு விழாவில், 7ஆம் இடத்திற்காக நடைபெற்ற போட்டியில்
இதேவேளை, இந்த மாதம் நிறைவுக்கு வந்த ஆசிய விளையாட்டு விழாவில் வரலாற்றில் முதற்தடவையாக பேஸ்போல் போட்டிகளில் கலந்துகொண்ட இலங்கை அணி, முதலாவது ஆட்டத்தில் லாவோஸ் அணியை 15-10 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி கொண்டது.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது லீக் போட்டியில் தாய்லாந்து அணியை இலங்கை எதிர்கொண்டது. இப்போட்டியின் 14-3 என்ற புள்ளிகள் அடிப்படையில் தாய்லாந்து வெற்றிபெற அடுத்த சுற்றுக்குத் தெரிவாகும் வாய்ப்பை இலங்கை அணி இழந்தது.
எனினும், ஆசிய அரங்கில் அண்மைக்காலத்தில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட சிறந்த பெறுபேறுகளில் ஒன்றாகவும் இது பதிவாகியது.
இதேவேளை, ஜப்பானின் மியசாகி நகரில் அண்மையில் நிறைவுக்குவந்த 8 நாடுகள் பங்கேற்றிருந்த 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான 12ஆவது ஆசிய வல்லவர் பேஸ்போல் போட்டித் தொடரில் இலங்கை அணி, 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இந்தத் தொடரில் சீன தாய்ப்பே அணி சம்பியனாகத் தெரிவாக, தென்கொரியா 2ஆவது இடத்தையும், ஜப்பான் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.